மதுரை மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி... எம்.பி சு.வெங்கடேசன் கூறிய சூப்பர் தகவல்.!

Feb 21, 2023 - 06:48
 0  2

மதுரை ரயில் நிலையத்தில் மேம்படுத்தப்பட உள்ள திட்ட பணிகள் குறித்தும், அதற்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட், மாற்று வழிப்பாதைகள் குறித்தும் மதுரை எம்பி சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

மதுரை எம்பி சு.வெங்கடேசன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மதுரை ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட உள்ள மேம்பாட்டு வசதிகள் குறித்தும், அதற்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார்.

மதுரை ரயில் நிலையம் : அவர் கூறுகையில், மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று இருக்கிறது. மதுரை ரயில் நிலையத்தில் இருந்து இருவழி ரயில் பாதையாக மாற்ற முயற்சிகள் நடைபெற்று வருகிறது.  பயணிகள் தாங்கும் இருக்கைகள் தற்போது 460ஆக உள்ளது. அது மாற்றியமைக்கப்பட்டு 1,600 இருக்கைகள் கொண்ட ரயில் நிலையமாக மதுரை ரயில் நிலையம் மாற்றப்பட உள்ளது. என்றும்,

347 கோடி ரூபாய் : பல்வேறு வசதிகளுக்காக 347 கோடி ரூபாய் செலவில் இந்த மேம்பாட்டு பணிகள் துவங்குகிறது. மதுரை ரயில் நிலையமானது இந்தியாவில் முன்னுதாரணமான ரயில் நிலையமாக இருக்கும். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக 2 ஆண்டுகளாக நாடாளுமன்ற தொகுதி மேம்பாடு நிதி கொடுக்கப்படவில்லை.  தற்போது தான் கொடுக்கப்பட்டுள்ளது. எனவும், அதிக கோரிக்கைகள் பெற்று  அதனை துறை அமைச்சரிடம் கேட்டு பெற்று கொண்டிருக்கிறோம். எனவும் சு.வெங்கடேசன் குறிப்பிட்டார்.

இரண்டாவது ரயில் முனையம் : தற்போது மேம்பாட்டு பணிகள் துவங்கி உள்ளதால்,  கூடல் நகரில் இருந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாளை மதுரை ஆணையர், ரயில்வே துறை அதிகாரிகள் உடன் நானும் கூடல் நகருக்கு பயணிகள் எளிதில் வரும் வண்ணம் மேற்கொள்ளப்பட உள்ள சாலை பணிகளை மேற்பார்வை இடுகிறோம். மேலும், இதனை பயன்படுத்தி மதுரையின் இரண்டாவது ரயில் முனையம் கூடல் நகரை மாற்ற முயற்சித்து வருகிறோம். அதற்கான திட்டமிடல் செய்ய உள்ளோம் எனவும் மதுரை எம்பி சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow