நகர்புற உள்ளாட்சி தேர்தல்:சென்னை மாநகராட்சிக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்..!

நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலானது கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது.அடுத்ததாக நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அந்த வகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. … Read more

தீபாவளியை முன்னிட்டு 3 சிறப்பு ரயில்கள் இயக்கம் …!

தீபாவளியை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. தீபாவளியை முன்னிட்டு வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக 3 சிறப்பு ரயில்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், வழக்கமாக இயக்கப்படும் ரயில்களின் பயண சீட்டு முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாகவும், இதனால் 20க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அது மட்டுமன்றி தாம்பரம் முதல் நாகர்கோவில், … Read more

BIGG BOSS 5 : இந்த வாரம் எவிக்ஷினில் இருந்து காப்பாற்றப்பட்டவர் யார் ….?

இந்த வாரம் எவிக்ஷினில் இருந்து ப்ரியங்கா காப்பாற்றப்பட்டுள்ளதாக முதல் ப்ரோமோவில் கமல் சார் கூறியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 28 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் திருநங்கை நாமிதா மாரிமுத்து வெளியேறினார். அதை தொடர்ந்து முதல் வாரம் நாதியா வெளியேற்றப்பட்ட நிலையில், 2-வது வாரம் அபிஷேக் வெளியேற்றப்பட்டார். தற்பொழுது வீட்டிற்குள் 15 போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் இந்த வாரம் வெளியேறப் போவது … Read more

சற்று நிம்மதி…..13 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,830 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 446 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,42,73,300 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 12,830 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 1300 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,42,73,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 446 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,58,186 பேர் … Read more

சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் : மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மரியாதை!

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். 1875 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி குஜராத்தில் பிறந்தவர் தான் சர்தார் வல்லபாய் படேல். இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் இவர் நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருந்த விஷயங்களை எதிர்த்துப் போராடியவர். இவரது பிறந்தநாள் ஆண்டு தோறும் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் … Read more

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம் இன்று …!

இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 1875 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி குஜராத்தில் பிறந்தவர் தான் சர்தார் வல்லபாய் படேல். இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் இவர் நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருந்த விஷயங்களை எதிர்த்துப் போராடியவர். மேலும் வக்கீல் பணியாற்றிய இவர், உள்ளூர் மக்களின் பிரச்சனைகளை தீர்த்து மிகவும் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். 1917 ஆம் ஆண்டு … Read more

இன்றைய (31.10.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம் : இன்று உங்கள் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த வேண்டும்.நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். இன்று பணிகள் அதிகமாக காணப்படும். ரிஷபம் : இன்று மகிழ்சிகரமான நாளாக இருக்காது. வளைந்து கொடுத்து போவதன் மூலம் நற்பலன்களைக் காணலாம். பணியிடத்தில் பணிகள் இறுக்கமாக காணப்படும். மிதுனம் : இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். உங்கள் பணியில் உங்கள் தனித்திறமையை வெளிப்படுத்துவீர்கள். கடகம் : உங்கள் அணுகுமுறையில் வேகம் கூடாது. உங்கள் … Read more

#ENGvAUS : ஜோர்டன் – பட்லர் புயலில் சிக்கி சின்னாபின்னமாக ஆஸ்திரேலியா.! 12 ஓவருக்குள் வெற்றிவாகை சூடிய இங்கிலாந்து.!

11.4 ஓவரிலேயே 126 ரன்கள் எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது இங்கிலாந்து அணி. டி20 உலக்கோப்பை கிரிக்கெட் போட்டி திருவிழா ரசிகர்களில் ஆரவாரத்திற்கு நடுவே கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில், இன்றைய போட்டியில், பலம்வாய்ந்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அதில் முதலில் ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்தது. அதில், இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர்களின் பஞ்சுவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதில் … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169 மற்றும் 170வது திரைப்படங்கள் பற்றிய சூப்பர் தகவல்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169வது திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவார் என்றும், 170வது திரைப்படத்தை நடிகரும் ரஜினியின் மருமகனுமான தனுஷ் இயக்குவார் எனவும் கூறப்பட்டு வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் தீபாவளி தினத்தை முன்னிட்டு அண்ணாத்த திரைப்படம் வரும் வியாழக்கிழமை அன்று வெளியாக உள்ளது. செண்டிமெண்ட், ஆக்சன், கமர்சியல் படமாக உருவான அண்ணாத்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அண்ணாத்த திரைப்படமே இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. ஆனால், … Read more

#T20WorldCup: இலங்கையை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணி 19.5 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 குரூப் சுற்று போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, சூப்பர் 12 குரூப் 1-ல் உள்ள தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்றைய முதல் போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. … Read more