பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

Special train

பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால், மக்கள் அதிகளவில் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்பதால், நெல்லை, தூத்துக்குடி, மதுரை ஆகிய தென் மாவட்டங்களுக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால், கூட்ட நெரிசலை தவிர்க்கவும், சொந்த ஊர்களுக்கு செல்வோர்களுக்கு எதுவாகவும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஞாயிறு, செவ்வாய் கிழமையில் (ஜன. 14, 16) தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு … Read more

தீபாவளியை முன்னிட்டு 3 சிறப்பு ரயில்கள் இயக்கம் …!

தீபாவளியை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. தீபாவளியை முன்னிட்டு வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக 3 சிறப்பு ரயில்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், வழக்கமாக இயக்கப்படும் ரயில்களின் பயண சீட்டு முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாகவும், இதனால் 20க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அது மட்டுமன்றி தாம்பரம் முதல் நாகர்கோவில், … Read more

சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள்… தென்னக ரயில்வே அறிவிப்பு…

சென்னையில் இருந்து திருச்சி, தஞ்சை, கொல்லம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் வரும் 26-ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாகவும், இதற்கான முன்பதிவுகள் வரும்  24-ஆம் தேதி காலை 8 மணி முதல் தொடங்கும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து வரும் அக்டோபர் 25-ஆம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 8.45 மணிக்கு கொல்லம் சென்றடையும். பின், கொல்லத்திலிருந்து அக்டோபர் 26-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு … Read more

மகாராஷ்டிராவில் நாளை முதல் 5 ஜோடி சிறப்பு ரயில்கள் இயக்கம் – மத்திய ரயில்வே

மகாராஷ்டிராவில் நாளை முதல் ஐந்து சிறப்பு ரயில்களை இயக்கப்போவதாக மத்திய ரயில்வே நேற்று அறிவித்தது. இந்த ஐந்து  சிறப்பு ரயில்களில் இரண்டு மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் மற்றும் புனே இடையே இயக்கப்படும். செப்டம்பர் -30 அன்று வெளியிடப்பட்ட தளர்வு வழிகாட்டுதலின் ஒரு பகுதியாக, மகாராஷ்டிரா அரசு உள்மாநில வழித்தடங்களில் ரயில்களை இயக்க அனுமதித்ததால் இந்த அறிக்கை வந்துள்ளது.  ரயில்களுக்கான முன்பதிவு அக்டோபர் 8 முதல் தொடங்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உறுதிப்படுத்தப்பட்ட … Read more

அக்டோபர் 15 முதல் நவம்பர் 30 வரை 200 சிறப்பு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டம்.!

பண்டிகை காலங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு வசதியாக அக்டோபர் 15 முதல் நவம்பர் 30 வரை 200 சிறப்பு ரயில்களை இயக்கபோவதாக இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இது குறித்து, ரயில்வே வாரியத் தலைவர் யாதவ் கூறுகையில், மாநில அரசுகளின் தேவைகள் மற்றும் தொற்றுநோய்களின் நிலையைப் பொறுத்து தினசரி பயணிகள் ரயில் சேவைகளை இயக்கவுள்ளதாக ரயில்வே முடிவு செய்துள்ளது என்று கூறினார். மேலும், அதிக தேவை உள்ள பாதைகளில் தேசிய டிரான்ஸ்போர்ட்டரால் அறிமுகப்படுத்தப்பட்ட குளோன் ரயில்களின் இயக்கப்படும் என்றார்.  தற்போது, … Read more

7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு..விவரம் உள்ளே

தமிழகத்துக்கு மேலும் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கை தொடர்ந்து சென்னையில் இருந்து 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் மேலும் 7 சிறப்பு இஅரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கே ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூர் To திருநெல்வேலி, சென்னை எழும்பூர் To செங்கோட்டை, சென்னை எழும்பூர் To மதுரை, சென்னை எழும்பூர் To ராமேஸ்வரம், சென்னை எழும்பூர் To கொல்லம்,சென்னை சென்ட்ரல் … Read more

சிறிய சலுகையைக் கூட மத்திய அரசு ரத்து செய்திருப்பது நியாயமில்லை – கனிமொழி

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த கட்டணச் சலுகையை மத்திய அரசு ரத்து செய்ததற்கு திமுக எம்.பி. கனிமொழி ட்வீட் செய்துள்ளார். ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் மட்டும் 13 சிறப்பு ரயில்கள் இயக்க்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில்,மேலும் 3 சிறப்பு ரயில்கள் வரும் 12 ஆம் தேதி இயக்கப்பட உள்ளது. இதில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த … Read more

#BREAKING: மேலும் 4 சிறப்பு ரயில்கள்.! முன்பதிவு நாளை தொடக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு.!

தமிழகத்தில் மேலும் 4 சிறப்பு ரயில் சேவைகளை அறிவித்தது தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன் முன்பதிவு நாளை தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே, 9 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக நான்கு சிறப்பு ரயில் சேவைகள் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரிலிருந்து தென்காசி மாவட்டம் செங்கோட்டை வரை வாரம் 3 முறை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதில், சென்னை எழும்பூர் – செங்கோட்டை இடையே செப்டம்பர் 10 முதல் வாரம் … Read more