மின்சாரம் தாக்கி தந்தை மற்றும் இரு மகன்கள் பலி …!

திண்டுக்கல் அருகே மின்சாரம் தாக்கியதில் தந்தை மற்றும் அவரை காப்பாற்ற சென்ற இரு மகன்கள் மூவரும் உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் அடுத்த செட்டியபட்டி எனும் பகுதியில் வசித்து வரக்கூடிய 45 வயதுடையவர் தான் திருப்பதி. இவர் மின்கசிவு இருப்பது தெரியாமல் சுவர் ஒன்றை தொட்டுள்ளார். இதனையடுத்து, அவரை மின்சாரம் தாக்கி உள்ளது. திருப்பதியை மின்சாரம் தாக்கியது அறிந்த அவரது மகன்கள் தங்களது தந்தையை காப்பாற்றுவதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில், தந்தையை காப்பாற்ற சென்ற 15 வயதுடைய சந்தோஷ்குமார் மற்றும் 17 … Read more

#BREAKING : சிவாஜி சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர்…!

 சிவாஜி சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான சிவாஜி கணேசன் அவர்களின் 94-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, சினிமா பிரபலங்களும், அரசியல் பிரபங்களும் இணைய பக்கத்தில் அவரது நினைவுகளை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்,  சிவாஜி பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடையாறில் உள்ள மணிமண்டபத்தில், அவரது சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், மணிமண்டபத்தில் உள்ள அவரது புகைப்படங்களையும் பார்வையிட்டார்.

இன்று முதல் ஜனவரி 31 வரை பட்டாசு விற்க, வெடிக்க தடை…! எங்கு தெரியுமா?

இராஜஸ்தானில் இன்று முதல் வருகின்ற ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் அவர்கள் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்பொழுது நாடு முழுவதும் கொரோனா தொற்று தொடர்ந்து பரவி வரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அதாவது, இன்று முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை பட்டாசு வெடிக்கவும், விற்கவும் தடை விதித்து … Read more

மலாவி : பாராளுமன்ற வளாகத்தில் முன்னாள் துணை சபாநாயகர் தற்கொலை!

மலாவி நாட்டின் முன்னாள் துணை சபாநாயகர் பாராளுமன்ற வளாகத்தில்  வைத்து தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தென் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மலாவி நாட்டில் 2019 ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் துணை சபாநாயகராக செயல்பட்டவர் தான் செல்மெண்ட் ஷிவாலா. இவருக்கு 50 வயதாகிறது. மாற்றுத்திறனாளியான செல்மெண்ட் தனது பதவிக்காலம் முடிவடையும் நேரம் சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். ஆனால் அந்த கார் சில மாதங்களில்  விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனை அடுத்து அந்த காரை … Read more

குடியரசு தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி…!

குடியரசு தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் இன்று தனது 76-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘அவரது தாழ்மையான ஆளுமை காரணமாக, அவர் முழு நாட்டையும் நேசித்தார். சமுதாயத்தின் ஏழை மற்றும் ஓரங்கட்டப்பட்ட பிரிவினரை மேம்படுத்துவதில் அவரது கவனம் முன்மாதிரியாக உள்ளது. அவர் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை … Read more

நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாள்: அவரது சிலைக்கு மரியாதை செலுத்தவுள்ள முதல்வர்…!

சிவாஜி கணேசன் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடையாறில் உள்ள மணிமண்டபத்தில், அவரது சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான சிவாஜி கணேசன் அவர்களின் 94-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடையாறில் உள்ள மணிமண்டபத்தில், அவரது சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

இன்று முதல் தமிழகத்தில் ஏ.சி பேருந்துகள் இயக்கம்…!

இன்று முதல் தமிழகத்தில் அரசு போக்குவரத்தை சார்ந்த ஏ.சி பஸ்கள் இயக்கம். கொரோனா தொற்று பரவல் காரணமாக மே 10 முதல் நிறுத்தப்பட்ட அரசு ஏ.சி பேருந்துகள் இன்று முதல் மீண்டும் இயக்கப்படுகின்றன. போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த 702 குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படும் அறிவித்திருந்தார்.  இதனையடுத்து, சென்னை மாநகரில் 48 குளிர்சாதன பேருந்துகளும், அரசு விரைவு போக்குவரத்து கழகம் (SETC) சார்பாக 340 குளிர்சாதனப் பேருந்துகள் இயக்கப்படும் … Read more