#BREAKING: தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிக கனமழை…!

தமிழகத்தில் நவம்பர் 4 ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு மிக கனமழை வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் நவம்பர் 2-ஆம் தேதி வரை தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கடலூரில் மிக பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் இதர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் … Read more

“எதிர்க்கட்சியின்போது விவசாயத்திற்கு ஆதரவு;ஆட்சிக்கு வந்ததும் அதற்கு எதிராக கையெழுத்து” – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு..!

வேளாண் மண்டல சட்டத்தில் உள்ள குறைகளைச் சரி செய்து தமிழக அரசு சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயத்திற்கு ஆதரவானவர்கள் போல காட்டிக்கொண்டும்,ஆட்சிக்கு வந்ததும் விவசாயத்திற்கு எதிரான திட்டத்திற்கு கையெழுத்து போடுவதையும் தி.மு.க வாடிக்கையாக வைத்துள்ளதாக அமமுகவைச் சேர்ந்த டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “காவிரி டெல்டாவில் புதிய பெட்ரோகெமிக்கல் நிறுவனங்களை உருவாக்குவதற்கான ஏல அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு இருப்பது … Read more

ஊரடங்கு தளர்வு : நாளை முதல் 100% பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் இயங்க அனுமதி – புதுச்சேரி அரசு!

புதுச்சேரியில் நாளை 100% பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பரவலை குறைக்கும் விதமாக கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தற்பொழுது கொரோனா பரவல் குறைத்துள்ளதை அடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் வரும் நவம்பர் 15 ஆம் தேதி வரை ஊரடங்கு  நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை முதல் புதுச்சேரியில் இரவு நேரம் … Read more

கேலோ இந்தியா கூடைப்பந்து போட்டி வீரர்கள் நாளை தேர்வு..!

கேலோ இந்தியா இளையோர் கூடைப்பந்து போட்டிக்கு நாளை வீரர்கள் தேர்வு கேலோ இந்தியா இளையோர் கூடைப்பந்து போட்டிக்கு வீரர்கள் தேர்வு நாளை சென்னையில் நடைபெறுகிறது. 2003 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்கு முன் பிறந்த கூடைப்பந்து வீரர்கள் ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழுடன் வரவேண்டும். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 18 வயதிற்குட்பட்ட வீரர்கள் தேர்வு 6:30 மணிக்கு நடைபெறுகிறது. மத்திய அரசு சார்பில் கேலோ இந்தியா கூடைப்பந்து, ஹாக்கி உள்ளிட்ட  19 வகையான போட்டிகள் … Read more

அப்படியா…1 ரூபாய்க்கு தங்க நாணயம் வாங்கலாமா? – எப்படி என்பது இங்கே…

டிஜிட்டல் தங்கத்தை வெறும் 1 ரூபாய்க்கு வாங்கலாம்.அது எப்படி என்று கீழே காண்போம். தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தண்டேராஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது மற்றும் புதிய கொள்முதல் செய்ய ஒரு நல்ல நாளாக கருதப்படுகிறது.இந்நாளில் மஞ்சள் உலோகம்(தங்கம்) அல்லது வெள்ளியில் முதலீடு செய்வது செழிப்பைக் கொண்டுவரும் என்று மக்கள் நம்புகிறார்கள். இந்த ஆண்டு தண்டேராஸ் பண்டிகை நவம்பர் 2 செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. தண்டேராஸ் பண்டிகையின் போது தங்கம் அல்லது வெள்ளி வாங்குவது இந்திய பாரம்பரியமாக இருந்து வருகிறது.இருப்பினும், … Read more

ஒற்றுமையாக இருந்தால்தான் முன்னேற முடியும்- பிரதமர் மோடி..!

கடந்த 7 ஆண்டுகளில் நாட்டிற்கு தேவையில்லாத சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன என்று மோடி தெரிவித்துள்ளார். தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு பிரதமர் ஆற்றிய உரையில் நாட்டிற்காக வாழ்க்கையை அர்ப்பணித்த சர்தார் வல்லபாய் படேலுக்கு நாடு அஞ்சலி செலுத்துகிறது. வரலாற்றில் மட்டும் சர்தார் படேல் வாழவில்லை. இந்தியர்களின் மனங்களில் வாழ்கிறார். நம் ஒற்றுமையை இருந்தால்தான் முன்னேற முடியும். நமது இலக்குகளை அடைய முடியும். இந்திய வலிமையாகவும், வளர்ச்சியுடனும் இருக்க சர்தார் வல்லபாய் படேல் விரும்பினார். நாட்டின் நலனுக்கு எப்போதும் முக்கியத்துவம் … Read more

படையப்பா எழுந்து வா; பாட்ஷாபோல் நடந்து வா – வைரமுத்து ட்வீட்!

உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வாழ்த்து தெரிவித்து வைரமுத்து ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த வியாழக்கிழமை உடல் நலக் குறைவு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 3 நாட்களாக சிறப்பு வார்டில் வைத்து மருத்துவ குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் பலர் பிரார்த்தனை செய்து … Read more

#Breaking:நடிகர் ரஜினியிடம் உடல்நலம் பற்றி விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்..!

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தை,தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்துள்ளார். கடந்த 28-ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்திற்கு திடிரென தலை சுற்றல், மயக்கம் ஏற்பட்டு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். கழுத்து பகுதி வழியாக மூளை மற்றும் முகம், இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் கூறப்பட்டது. இதையடுத்து, ரஜினிக்கு ரத்த ஓட்டத்தை சீரமைப்பதற்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. சிறப்பு மருத்துவ குழுவினர் தொடர்ந்து … Read more

அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட நடிகர் புனித் ராஜ்குமார் உடல் …!

பிரபல நடிகர் புனித் ராஜ்குமார் அவர்களின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. புகழ்பெற்ற கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்கள் நேற்று முன்தினம் பெங்களூரில் மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பல்வேறு நடிகர்களும், அரசியல் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், கண்டீரவா மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த புனித் ராஜ்குமாரின் உடலுக்கு ஏராளமான ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். இன்று புனித் ராஜ்குமார் அவர்களின் உடல் ஸ்ரீ கண்டீரவா ஸ்டூடியோவில் உள்ள அவரது பெற்றோர் நினைவிடம் அருகிலேயே முழு … Read more

எச்சரிக்கை…ரசாயனம் கலந்த பட்டாசுகளை வெடித்தால் குற்றவியல் நடவடிக்கை – தமிழக அரசு ..!

பேரியம் ரசாயனம் கலந்து தயார் செய்யப்பட்ட பட்டாசுகளை சேமித்து வைக்கவும், கொண்டு செல்லவும் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தடையை மீறி இரசாயனம் கலந்த பட்டாசுகளை வெடிப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. மேலும்,இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: “உச்சநீதி மன்றம் தனது 29.10.2021 ஆம் தேதியிட்ட தீர்ப்பில் 2016,2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் பல்வேறு வழக்குளில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையிலும், அதைத் தொடர்ந்து வழங்கப்பட்ட … Read more