உலகில் கோவிட்-19 எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் 90% பேர்.! ஆனாலும் ஓர் ஆபத்து.! WHO சிறப்பு தகவல்.!

உலக மக்கள்தொகையில் 90 சதவீதம் பேர் இப்போது கோவிட்-19 வகை கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் சக்தியை கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. உலக அளவில் கொரோனா கோவிட்-19 தொற்றால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தனர். லட்சக்கணக்கானோர் கோவிட்-19 தொற்றால் உயிரிழந்தனர். அதன் பிறகு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பெரும்பாலானோருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு கோவிட் 19 தொற்றில் இருந்து உலக மக்கள் மீண்டு வந்தனர். இருந்தாலும், கொரோனா வைரஸ் கோவிட் 19 எனும் மாறுபாட்டை தாண்டி அடுத்தடுத்த … Read more

தமிழகத்தில் 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்

நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று தீவிரமாக பரவிய நிலையில் அதனைக் கட்டுப்படுத்த மத்திய,மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டன. அந்த வகையில்,மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்தின.இதனால்,கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ளது.தமிழகத்தில் இது வரை 35 மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் 36 வது மெகா தடுப்பூசி முகாம் காலை 7 முதல் நடைபெற்று வ்ருகிறது.இந்த சிறப்பு முகாமில் … Read more

“இவர்கள்தான் கொரோனா பாதிப்பால் உயிரிழக்கின்றனர்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

சென்னை:தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தான் கொரோனா பாதிப்பின் காரணமாக உயிரிழக்கின்றனர் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் இன்று காலை 9 மணி முதல் 19 வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில்,தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் தான் கொரோனா பாதிப்பால் உயிரிழக்கின்றனர் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கூறியதாவது: “சென்னையில் 1600 இடங்களில் காலை 9 … Read more

#Breaking:சற்று குறைந்த கொரோனா…ஒரே நாளில் 2.42 லட்சம் பேர் குணமடைவு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,37,704 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 488 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,89,03,731 ஆக உள்ளது.மேலும்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,050 ஆக உயர்வு. கடந்த 24 மணி நேரத்தில் 3,37,704 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 10,000 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,89,03,731 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை … Read more

கோவின்:இனி ஒரு மொபைல் எண்ணைக் கொண்டு 6 பேர் பதிவு செய்யலாம் – மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!

டெல்லி:இனி ஒரு மொபைல் எண்ணைப் பயன்படுத்தி ஆறு பேர் வரை CoWIN இணையதளத்தில் கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி மிகத் தீவிரமாக மத்திய,மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதேசமயம்,கோவின்(CoWIN) இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக,கோவின் இணையதளத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நபர்களின் பெயர்,தொலைபேசி எண் … Read more

“ஜனவரி 22-ல் 50,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

சென்னை:ஜனவரி 22 ஆம் தேதி தமிழகத்தில் 50,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.எனினும்,கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்த வகையில்,சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்த நிலையில்,கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதற்கிடையில்,பொங்கல் பண்டிகை என்பதால்,இந்த வாரம் … Read more

முதல்வர்களுக்கு இல்லம் தேடி தடுப்பூசி செலுத்தப்படும் – சென்னை மாநகராட்சி

சென்னையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இல்லம் சென்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும். சென்னையில் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு இல்லத்திற்கே சென்று பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. 60 வயதை கடந்த 1 டோஸ் செலுத்தாதவர்களுக்கும், இரண்டாவது டோஸ் செலுத்த காலம் கடந்தவர்களுக்கும் இல்லம் சென்று தடுப்பூசி செலுத்தப்படும். எனவே, தடுப்பூசி செலுத்த   1913, 044-2538 4520, 044-4612 2300 என்ற எண்களில் தொடர்பு கொண்டு … Read more

அண்ணாமலையாரை தரிசிக்க இனி இந்த சான்றிதழ் கட்டாயம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருவண்ணாமலை:இன்று முதல் அண்ணாமலையாரை தரிசிக்க 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் கட்டாயம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அந்த வகையில்,தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 12,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகங்களும் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில்,திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு செல்ல 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது அவசியம் என மாவட்ட … Read more

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டம் – இன்று தொடங்கி வைக்கும் முதல்வர்!

சென்னை:கொரோனாவை தடுக்கும் வகையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைக்கவுள்ளார். நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதையடுத்து கொரோனாவை தடுக்கும் வகையில் மத்திய,மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.அந்த வகையில்,கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.அதன்படி, தமிழகத்தில் சுகாதாரத்துறை சார்பில் இதுவரை 18 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,நாடு முழுவதும் … Read more

இன்று முதல்…இங்கே செல்பவர்களுக்கு இவை கட்டாயம்;மீறினால் ரூ.500 அபராதம் – வெளியான அதிரடி உத்தரவு!

சென்னை:இன்று முதல் (ஜன.10 ஆம் தேதி) புறநகர் மின் ரயில்களில் பயணிக்க இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா பரவல் மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.மேலும்,கொரோனா கட்டுப்பாடுகளின்படி,புறநகர் ரயில் சேவைகள் 50% இருக்கை வசதியுடன் இயக்க அனுமதிக்கப்படும் என்றும் அரசு ஏற்கனவே அறிவித்தது. இந்நிலையில்,நாட்டில் நிலவும் தொற்றுநோய் சூழ்நிலையை கருத்தில் … Read more