சற்று நிம்மதி…..13 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,830 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 446 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,42,73,300 ஆக உள்ளது.

  • கடந்த 24 மணி நேரத்தில் 12,830 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 1300 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,42,73,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 446 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,58,186 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 14,667 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,36,55,842 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,59,272 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • நாடு முழுவதும் இதுவரை 1,06,14,40,335 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த ஒரே நாளில் 61,99,429 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.