சல்மான்கான் மருமகன் உயிரிழப்பு! இவரது மரணத்திற்கு காரணம் இதுதானா?

 நடிகர் சல்மான்கான் இந்தி திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர்  ஆவார். இவரது மருமகன் தான் அப்துல்லா  கான். இவருக்கு வயது 38.  இந்நிலையில், இவர் நேற்று இரவு திடீரென உயிரிழந்துள்ளார்.  இவர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் கொரோனாவால் மரிக்கவில்லை என்றும், இருதய கோளாறு காரணமாக தான் மரித்தார் என்றும் கூறப்படுகிறது.  இந்நிலையில், அப்துல்லாவின் மரணத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ள சல்மான் கான், அப்துல்லாவுடன் இருக்கும் கருப்பு வெள்ளை போட்டோவையும் பதிவிட்டுள்ளார். அதில் … Read more

இந்தியா , சீனாவை தவிர மற்ற நாடுகள் பொருளாதார மந்தநிலைக்குச் செல்லும் ஐ.நா கணிப்பு .!

உலக முழுவதும் கொரோனா தொற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டள்ளது. உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,092 ஆக அதிகரித்துள்ளது. பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,89,240 ஐ எட்டியுள்ளது. கொரோனா  வைரஸ் காரணமாக ஐரோப்பிய நாடுகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சி செய்து வருகிறது.இதனால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .இதன் காரணமாக மக்களின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு உலகம் பொருளாதார மந்த … Read more

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் : தமிழக ஆளுநரை சந்திக்க உள்ள முதல்வர் பழனிச்சாமி.!

கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளத.   இந்நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க்க உள்ளாராம். அப்போது, தமிழகத்தில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆலோசிக்க முடிவு செய்துள்ளனராம். 

தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் சிறப்பு யாகம் – அறநிலையத்துறை உத்தரவு.!

தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் வருகிற 1 மற்றும் 4ஆம் தேதிகளில் சிறப்பு யாகம் நடத்த ஏற்பாடு செய்ய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. ஹோமம், பாராயணம், சிறப்பு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை நடத்த ஏற்பாடு செய்ய அறநிலையத்துறை தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு தெரிவித்துள்ளது. மேலும் யாகங்களில் பொதுமக்கள் பங்கேற்க கூடாது எனவும், அர்ச்சகர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் எனவும் அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தீவிரமடைந்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 1251 பேர் … Read more

BREAKING:அடுத்த 3 மாதங்களுக்கு இஎம்ஐ வசூல் இல்லை…!

 சமீபத்தில் ரிசர்வ் வங்கி மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களுக்கான வங்கி கடன் வசூல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்கள் இ.எம்.ஐ செலுத்தத் தேவையில்லை எனவும் அறிவித்தது. இந்நிலையில் அடுத்த 3 மாதங்களுக்கு இஎம்ஐ , வட்டி  வசூலிக்கப்படாது என தமிழக நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.ரிசர்வ் வங்கியின் உத்தரவு அந்தந்த வங்கிகளின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வங்கியின் வாடிக்கையாளர்கள் இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம் எனவும்  தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் கூறியுள்ளார். 

ஊரடங்கு உத்தரவு மீறல் தொடர்பாக 33,006 பேர் கைது-23,691 வாகனங்கள் பறிமுதல்

ஊரடங்கு உத்தரவு மீறல் தொடர்பாக 33,006 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸால் இந்தியாவில் 600க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட்டுள்ளனர்.தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்டோர்பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மற்றும்  மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன்  பகுதியாக தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   ஆனால் சிலர்  ஊரடங்கு உத்தரவினை  மீறி வாகனங்களில் சுற்றி திரிந்ததையும் அவர்களுக்கு காவல்துறையினர்  நூதன தண்டனைகளும் வழங்கி வருகின்றனர் .இந்நிலையில் தமிழகத்தில் , … Read more

காதலிக்கு ஆறுதல் கூறும் விஷ்ணு விஷால்! புகைப்படம் உள்ளே!

நடிகர் விஷ்ணு விஷால் தனது மனைவியுடனான விவாகரத்துக்குப் பிறகு தற்பொழுது ஒரு பெண்ணை காதலித்து வருகிறார். இந்நிலையில், 144 தடை உத்தரவு இந்தியா முழுவதும் போடப்பட்டுள்ள நிலையில் யாரும் யாரையும் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து விஷ்ணு விஷாலின் காதலி அவரது ட்விட்டர் பக்கத்தில், மிஸ் யூ என்று விஷ்ணு விஷால் உடனான புகைப்படத்தை பதிவிட, அதற்கு விஷ்ணு விஷால் எனக்கு புரிகிறது. இருப்பினும் சமூக இடைவெளி என்பது தற்போது நாம் கடைப்பிடிக்க … Read more

மஹாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 230 ஆக அதிகரிப்பு.!

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1251 ஆக உள்ளது. இந்தியா முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அதிகபட்சமாக கேரளாவில் 234 பேர் பாதிக்கப்பட்டு, 2 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில், கேரளாவை தொடர்ந்து மஹாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இன்று மட்டும் மகாராஷ்டிராவில் 10 பேருக்கு புதிதாக கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. … Read more

போலியான செய்திகளை பரப்புபவர்களுக்கு ஒரு ஆண்டு சிறை! தெலுங்கானா அரசு கடும் எச்சரிக்கை!

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் நோயானது, தற்போது மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. தற்போது, இந்தியாவில், 1000-க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவ பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்த நோயின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த நோய் குறித்த வதந்தியான செய்திகள் பல பரவி வருகிறது.இதனையடுத்து,  தெலுங்கானா அரசு, இந்த நோய்  வதந்தியான செய்திகளை பாராப்புபர்களுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை  என எச்சரித்துள்ளது.

ஏப்ரல் மாத ஊதியத்தில் 75% குறைப்பு -தெலுங்கானா அரசு!

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் தெலுங்கான அரசு இதனால் வரும் பொருளாதார இழப்பை சரிசெய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் , எம்.எல்.ஏ-  கள் , ஊதியத்தில் 75% குறைக்கப்படும் என்றும் பிற மத்திய சேவை அதிகாரிகளுக்கு 60% ஊதியம்  குறைக்கப்படும்  என்றும் தெரிவித்துள்ளது .