வெறும் 2 நாளில் ரூ.100 கோடி…சல்மான் கானின் புதிய சாதனை!

Tiger 3

தீபாவளி தினத்தை முன்னிட்டு நவம்பர் 12 ஆம் தேதி சல்மான் கான் நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக வெளியான திரைப்படம் டைகர் 3 (Tiger 3). இப்படத்தை தீபாவளி அன்றும் நேற்றும், வடமாநிலங்களில் சல்மான் கான் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். பதான் படத்தில் சல்மான் கான் சிறப்பு தோற்றத்தில் வந்தது போல, டைகர் 3 படத்தில் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் வந்துள்ளார். இயக்குனர் மனீஷ் சர்மா இந்த முறை முழுக்க முழுக்க ஆக்சன் கதைக்களத்தில் ‘டைகர் 3’ … Read more

நம்ம தளபதி விஜயை தொட கூட முடியாத பாலிவுட் ‘கான்’ நடிகர்கள்கள் .! டைகர் 3 முதல்நாள் வசூல்.!

VIJAY - SALMON KHAN - SHARUK KHAN

தீபாவளி தினத்தை முன்னிட்டு நேற்று சல்மான் கான் நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக வெளியான திரைப்படம் டைகர் 3. ஷாருக்கானை வைத்து 2016இல் பேன் (FAN) எனும் தோல்விப்படத்தை கொடுத்த இயக்குனர் மனீஷ் சர்மா இந்த முறை முழுக்க முழுக்க ஆக்சன் கதைக்களத்தில் டைகர் 3 திரைப்படத்தை இயக்கி இருந்தார். இப்படத்தை நேற்று வடமாநிலங்களில் சல்மான் கான் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். மஹாராஷ்டிராவில் ஒரு திரையரங்கினுள் உள்ளேயே பாட்டாசு வாணவேடிக்கை என கொண்டாடி பார்வையாளர்களை பதற வைத்தனர் … Read more

இந்தியில் ரீமேக் ஆகும் ‘என்னை அறிந்தால்’! ஹீரோவாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

yennai arindhaal

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடந்த 2015 -ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் என்னை அறிந்தால். இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக அனுஷ்கா ஷெட்டி, திரிஷா ஆகியோர் நடித்திருப்பார்கள். அருண் விஜய்,  அனிகா, பார்வதி நாயர், விவேக், உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்தது என்றே கூறலாம். அதற்கு காரணம் என்னவென்றால், இயக்குனர் கெளதம் … Read more

பாலிவுட்டை போல விஜய் அஜித் சந்திப்பு நடந்தால் எப்படி இருக்கும்.? சூப்பர் ஹீரோஸ் மீட்டிங் அப்டேட்.!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் இருவருமே நெருங்கிய நண்பர்கள். சினிமாவிற்குள் போட்டி இருந்தாலும் கூட இருவருமே மிகவும் நெருக்கமான நண்பர்கள். இருவரும் ஒன்றாக நேரம் செலவழிப்பது, பிறந்த நாளிற்கு நேரில் சென்று வாழ்த்துவது என நட்புடன் இருக்கிறார்கள்.  அந்த வகையில், இன்று நடிகர் சல்மான் கான் 57-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள் மற்றும், ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இவரது பிறந்த நாளை முன்னிட்டு … Read more

வயலில் நாற்று நடும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான்.!

ஊரடங்கில் சல்மான்கான் வயலில் இறங்கி நாற்று நடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் தான் சல்மான்கான்.இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘ராதே’. இந்த படத்தை பிரபுதேவா இயக்குகிறார். இந்த நிலையில் தற்போது ஊரடங்கு காரணமாக பலர் தங்களது நேரத்தை பல வகைகளில் கழித்து வருகின்றனர். சல்மான்கான் தனது ஊரடங்கு காலத்தை பன்வெல் பண்ணை வீட்டில் கழித்து வருகிறார். அதன் அருகிலுள்ள கிராமத்தில் குதிரைகளுடன் சவாரி … Read more

ரியல் ஹீரோக்களின் நலனை கருத்தில் கொண்டு உதவி பிரபல பாலிவுட் ஹீரோ.!

சல்மான்கான் மும்பையில் உள்ள காவல்துறையினருக்கு சானிடைசர்களை வழங்கி உதவியுள்ளார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஜூன் 30 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலு‌ம் சென்னையை தவிர தமிழகத்தில் ஒரு சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் மும்பை அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல பிரபலங்கள் … Read more

தினக்கூலி பணியாளர்களுக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்திய நடிகர் சல்மான்கான்!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை யாருமே வேலைக்கு இயலாத நிலை காணப்படுகிறது.   இந்நிலையில், பிரபலங்கள் பலரும் ஏழை மாக்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் சல்மான்கான் திரைத்துறையில் பொருளாதார உதவிகள் தேவைப்படும் 23,000தினக்கூலி பணியாளர்கள் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கில் தலா ரூ.3,000-ஐ … Read more

என் தந்தையை பார்த்து மூன்று வாரங்கள் ஆகிவிட்டது! பயத்தில் சல்மான்கான்!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்த, இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பிரபாலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவருமே தங்களது வீட்டை விட்டு வெளியே வராமல், வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.  இந்நிலையில், பிரபல இந்தி நடிகர் சல்மாங்கான் தனது சகோதரர் மகன்னுடன் வீட்டை விட்டு வெளியேறி பண்ணை வீட்டில் வசித்து வருகின்றனர். இதனையடுத்து, இவர் வெளியிட்டுள்ள வீடியோவில், நான் சில னாட்கள் … Read more

சல்மான்கான் மருமகன் உயிரிழப்பு! இவரது மரணத்திற்கு காரணம் இதுதானா?

 நடிகர் சல்மான்கான் இந்தி திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர்  ஆவார். இவரது மருமகன் தான் அப்துல்லா  கான். இவருக்கு வயது 38.  இந்நிலையில், இவர் நேற்று இரவு திடீரென உயிரிழந்துள்ளார்.  இவர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் கொரோனாவால் மரிக்கவில்லை என்றும், இருதய கோளாறு காரணமாக தான் மரித்தார் என்றும் கூறப்படுகிறது.  இந்நிலையில், அப்துல்லாவின் மரணத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ள சல்மான் கான், அப்துல்லாவுடன் இருக்கும் கருப்பு வெள்ளை போட்டோவையும் பதிவிட்டுள்ளார். அதில் … Read more

செல்பி எடுக்க முயன்றவரின் செல்போனை பறித்த சல்மான் கான்!

செல்பி எடுக்க முயன்றவரின் செல்போனை பறித்த சல்மான் கான். அந்த நபர், ஒரு விமான நிறுவனத்தின் கடைநிலை ஊழியர். நடிகர் சல்மான் கான் பிரபலமான பாலிவுட் நடிகர் ஆவார். இவரது படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். அந்த வகையில் இவர் எங்கு சென்றாலும், அவரது ரசிகர்கள் அவருடன் இணைந்து செல்பி எடுக்க வேண்டும் என விரும்புவது உண்டு. இந்நிலையில், நடிகர் சல்மான்கான் கோவாவுக்கு விமானத்தில் சென்றுள்ளார். விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியே வந்து கொண்டிருந்தபோது,  … Read more