சல்மான்கான் மருமகன் உயிரிழப்பு! இவரது மரணத்திற்கு காரணம் இதுதானா?

சல்மான்கான் மருமகன் உயிரிழப்பு! இவரது மரணத்திற்கு காரணம் இதுதானா?

Default Image

 நடிகர் சல்மான்கான் இந்தி திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர்  ஆவார். இவரது மருமகன் தான் அப்துல்லா  கான். இவருக்கு வயது 38.  இந்நிலையில், இவர் நேற்று இரவு திடீரென உயிரிழந்துள்ளார். 

இவர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் கொரோனாவால் மரிக்கவில்லை என்றும், இருதய கோளாறு காரணமாக தான் மரித்தார் என்றும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், அப்துல்லாவின் மரணத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ள சல்மான் கான், அப்துல்லாவுடன் இருக்கும் கருப்பு வெள்ளை போட்டோவையும் பதிவிட்டுள்ளார். அதில் எப்போதும் உன்னை நேசித்துக் கொண்டிருப்பேன் என்று தெரிவித்துள்ளார். இவரது மறைவுக்கு  திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Join our channel google news Youtube