இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,323 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு நாளில் 2,259 ஆக இருந்த நிலையில் கடந்த ஒரே நாளில் 2,323 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,31,34,145 ஆக பதிவாகியுள்ளது. கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 20 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆக அதிகரித்துள்ளது. மேலும்,இதுவரை … Read more

522 நாட்களுக்குப் பிறகு…கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1.35 லட்சமாக குறைவு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,271 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 285  ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,44,37,307 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11,271 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 500 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,44,37,307 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 285 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,63,530 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றில் … Read more

கடந்த 24 மணி நேரத்தில் நேரத்தில் 414,188 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…! 3,915 பேர் உயிரிழப்பு…!

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 414,188 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3,915 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் காட்டு தீ போல் பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இந்த வைரஸால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 414,188 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இதுவரை … Read more

இந்தியாவை கேலி செய்து ட்வீட்டரில் பதிவிட்ட சீனா…!

இந்தியாவில் தொற்றால் இறப்பவர்களின் சடலங்களை எரியூட்டும் புகைப்படத்தை பதிவிட்டு கேலி செய்த சீனா. இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் காட்டு தீ போல் பரவி வரும் நிலையில், இந்த வைரஸை  கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருவதையடுத்து, இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் பண்ணுவதற்கு கூட இடம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், இந்தியாவில் சடலங்களை … Read more

நிறுத்திவைத்த அகவிலைபடி.., ஜூலை முதல் 28% உயருமா..?

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைபடி ஜூலை முதல் 28% உயர வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசுப்பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலை மாதங்களில் முதல் தேதியன்று அகவிலைப்படியை உயர்த்துகிறது. இதன்படி கடந்த 2020 ஜனவரியில் அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தியது. பின்னர் கொரோனா காரணமாக அகவிலைப்படியை நிறுத்தி வைத்தது. இந்நிலையில், அகவிலைபடி வரும் ஜூலை முதல் 17% முதல் 28% வரை அதிகரிக்கலாம் … Read more

இந்தியாவில் 60 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு…! 291 பேர் பலி..!

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 62,258 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  சமீப நாட்களாக இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 62,258 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,18,46,652-லிருந்து 1,19,08,910 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 24 மணி நேரத்தில் 291 … Read more

15 மாவட்டங்களை தனிமைப்படுத்திய உத்திர பிரதேச அரசு.!

கொரோனா வைரஸ் தொற்று நாடுமுழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில்,உத்திர பிரதேச அரசு, நொய்டா, லக்னோ, காசியாபாத், மீரட், ஆக்ரா, கான்பூர், வாரணாசி, ஷாம்லி, பிரெய்லி, புலன்சாகர், பிரோசாபாத், மகாராஜ்கானி, சித்தபூர், சஹாரன்பூர், பஸ்தி ஆகிய 15 மாவட்டங்களை தனிமைப்படுத்தியுள்ளது. இந்த மாவட்ட மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் … Read more

மும்பையில் முகக்கவசம் அணியாவிட்டால் கைது.! – மாநில அரசு அதிரடி.!

 இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. இதுவரை 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் முதலிடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. இங்கு, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 64 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு ஊரடங்கில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.  குறிப்பாக மும்பை மாநகத்திலும் இந்த வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த தற்போது மும்பை மாநகரில் பொதுமக்கள் வெளியில் வரும்போது … Read more

மோடி சிறந்த மனிதர்.! அவர் நல்லவர்.! – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகழாரம்.!

உலக அளவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் அதனை தடுக்க பல்வேறு நாடுகளும் போராடி வருகின்றன. இந்நிலையில் கொரோனாவுக்குதடுப்பு மருந்து கண்டறியப்படாத நிலையில், மலேரியாவுக்கு கொடுக்கப்படும் ஹைடிராக்சி குளூரோகுயின் மருந்தை மருத்துவ ஊழியர்களுக்கு தடுப்பு மருந்தாக கொடுக்க இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரை செய்தது.  இந்த மருந்தை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த உதவும் என பரிந்துரை செய்தது. இந்த ஹைடிராக்சி குளூரோகுயின் மருந்தை 70 சதவீதம் உற்பத்தி … Read more

ஊரடங்கை மேலும் நீட்டிக்க மாநில அரசுகள் வேண்டுகோள்.! – பிரதமர் மோடி.!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நாடெங்கிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்தியாவில் 5194 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதனால், இந்த எண்ணிக்கையை கட்டுப்படுத்த பிரதமர் மோடி, அனைத்து கட்சி கூட்டம் போன்ற பல மக்கள் பிரதிநிதிகள், வல்லுநர்கள் உடன் ஆலோசனை நடத்தினார்.  அந்த கூட்டத்தில் மாநில அரசுகள், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கை மேலும் நீடிக்க வேண்டும். என கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், நாட்டில் உள்ள ஒவ்வொரு மக்களின் உயிரையும் காப்பது அரசின் … Read more