இந்தியாவை கேலி செய்து ட்வீட்டரில் பதிவிட்ட சீனா…!

இந்தியாவில் தொற்றால் இறப்பவர்களின் சடலங்களை எரியூட்டும் புகைப்படத்தை பதிவிட்டு கேலி செய்த சீனா.

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் காட்டு தீ போல் பரவி வரும் நிலையில், இந்த வைரஸை  கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருவதையடுத்து, இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் பண்ணுவதற்கு கூட இடம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், இந்தியாவில் சடலங்களை தகனம் செய்யும் புகைப்படத்துடன் ஒப்பிட்டு, சீனா ஒரு தீ வைப்பதை எதிர்த்து இந்தியா ஒரு தீ வைக்கும் என்ற தலைப்பில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், சிறிது நேரத்தில் இந்த இடுகை அகற்றப்பட்டது. இதற்கு சீன சமூக ஊடக பயனர்கள் இந்த இடுகையை பார்த்து அவர்களது அதிர்ச்சியையும் கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளன.

இதுகுறித்து சீனாவின் வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், சீன அரசாங்கம் கொரோனா தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை ஆதரிக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தது. மேலும் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அலுவலகம், இந்தியாவின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு, சீனாவின் ஆதரவை காட்டும். எதிர்வரும் நாட்களில் இந்தியாவிற்கு மேலும் பொருள்கள் தொடர்ந்து அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை ஆசிரியர் ஹு ஜிஜின்கூறுகையில், இந்த நேரத்தில் மனிதாபிமானத்தின் பதாகை உயர்த்தப்பட வேண்டும். இந்தியாவுக்கு அனுதாபம் காட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.