நிறுத்திவைத்த அகவிலைபடி.., ஜூலை முதல் 28% உயருமா..?

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைபடி ஜூலை முதல் 28% உயர வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசுப்பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலை மாதங்களில் முதல் தேதியன்று அகவிலைப்படியை உயர்த்துகிறது. இதன்படி கடந்த 2020 ஜனவரியில் அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தியது.

பின்னர் கொரோனா காரணமாக அகவிலைப்படியை நிறுத்தி வைத்தது. இந்நிலையில், அகவிலைபடி வரும் ஜூலை முதல் 17% முதல் 28% வரை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020 ஜனவரி முதல் ஜூன் வரை அகவிலைப்படி 3% சதவீதமும், 2020 ஜூலை முதல் டிசம்பர் வரை 4 சதவீதமும், 2021 ஜனவரி முதல் ஜூன் வரை 4% சதவீதமும் அதிகரித்து ஒட்டுமொத்த அகவிலைபடி (17 + 4 + 3 + 4=28) சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அகவிலைபடி உயர்வு வரும் ஜூலை 1 முதல் செயல்படுத்தப்பட வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், மத்திய ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை கிடைக்க வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது. 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் அகவிலைபடி அதிகரிப்புக்காக காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்