அப்துல்கலாமின் சகோதரர் இறப்புக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் செய்தி

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் மூத்த சகோதரரான ஏபிஜே முத்து மீரான் லெப்பை மரைக்காயர் வயது முதிர்வின் காரணமாக ராமேஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். திரு.முத்து மீரான் லெப்பை மரைக்காயர் இறப்பு குறித்து இரங்கல் செய்தி ட்விட்டரில்  வெளியிட்டுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் மூத்த சகோதரர் திரு.முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் அவர்கள் இன்று(07.03.2021) காலமான செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். அவரை இழந்துவாடும் … Read more

கொரோனா குறித்தா? அதிமுக குழப்பம் குறித்தா? இன்று ஆளுநரை சந்திக்கும் இபிஎஸ்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனிச்சாமி இன்று சந்திக்கிறார்.கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்கிறார். தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையானது கடந்த மார்ச்.,24ந் தேதி முதல் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு செப்.30-ம் தேதியோடு 8 கட்ட ஊரடங்குகள் முடிவடைந்தது. அக்.1ந்தேதி 9ம் கட்டமாக சில தளர்வுகளுடன் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டது. இதன்படி கடந்த செப்.,1 தேதியுடன் இ-பாஸ் முறையானது ரத்து செய்யப்பட்டது, பேருந்து போக்குவரத்துக்கும் அனுமதிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு  … Read more

கண்தானம் செய்ய விரும்புவோர்களுக்கு உதவிடும் வகையில் பிரத்யேக இணையதள வசதி.! தொடங்கி வைத்த முதல்வர்.!

கண்தானம் செய்ய விரும்புவோர்களுக்கு உதவிடும் வகையில் பிரத்யேக இணையதள வசதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். கடந்த 1985ஆம் ஆண்டு முதல் தேசிய கண்தான தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு வயது முதல் அனைத்து தரப்பு வயதினரும் கண்தானம் செய்யலாம். மேலும் ஒவ்வொரு ஆண்டும் பதினைந்து நாட்கள் தேசிய கண் தானம் குறித்த விழிப்புணர்வு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி 2020ஆம் ஆண்டிற்கான தேசிய கண்தான துவக்க தினம் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. நாளை … Read more

ஆசிரிய பெருமக்களுக்கு எனது உளம்கனிந்த “ஆசிரியர் தின” நல்வாழ்த்துக்கள் – முதல்வர் பழனிசாமி

டாக்டர். எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாககொண்டாடுவதையொட்டி அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஆசிரியராக பணியை தொடங்கி குடியரசு தலைவராக உயர்ந்த Dr. S. இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு கல்வியறிவு புகட்டி சிறந்த சமூகத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு தனது ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை தமிழக முதல்வர் எடப்பாடி … Read more

அரியரை வென்ற அரசராக முதல்வரை புகழ்ந்து ஒட்டப்பட்ட போஸ்ட்ர்.! கவனத்தை ஈர்த்த மாஸ் வசனங்கள்.!

திண்டுக்கல்லில் அரியர் எழுதிய மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்று கூறியதை அடுத்து நன்றி தெரிவித்து ஒட்டிய போஸ்ட்ர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கொரோனா வைரஸின் பாதிப்பு காரணமாக கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளுக்கும் தடை விதித்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்திருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மேலும் அரியர்ஸ் எழுதுவதற்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என்றும் கூறியதை அடுத்து மாணவ, மாணவர்கள் முதல்வருக்கு சமூக … Read more

அரியர் மாணவர்கள் ‘ஆல் பாஸ்’ என்று அறிவித்த முதலமைச்சரை கடவுள் என்று கூறி நன்றி தெரிவித்த 24 அரியர் வைத்திருந்த மாணவர்.!

அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த முதலமைச்சரை கடவுள் என்று கூறி 24 அரியர் வைத்திருந்த மாணவன் ஒருவன் நன்றியை தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் பாதிப்பு காரணமாக கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளுக்கும் தடை விதித்திருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மேலும் அரியர்ஸ் எழுதுவதற்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என்றும் கூறியதை அடுத்து மாணவ, மாணவர்கள் முதல்வருக்கு பாராட்டு மழைகளை பொழிந்தும், நன்றியையும் தெரிவித்தும் வருகின்றனர். … Read more

செஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா.! கிராண்ட் மாஸ்டர் பிரக்யானந்தாவிற்கு முதல்வர் வாழ்த்து.!

 சர்வதேச செஸ் கூட்டமைப்புக்கான ஆன்லைன் செஸ் போட்டியில் இந்தியாவிலிருந்து கலந்து கொண்ட பிரக்யானந்தா அரையிறுதி போட்டியில் கலந்து கொள்வதை அடுத்து அவருக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 22ம் தேதி முதல் சர்வதேச செஸ் கூட்டமைப்புக்கான ஆன்லைன் செஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 20வயதுக்கு உட்பட்டோருக்கான Pool ‘A’ பிரிவில் சென்னையை சேர்ந்த பிரக்யானந்தா (15) மற்றும் திவ்யா தேஷ்முக் ஆகியோர் இந்தியா சார்பாக கலந்து கொண்டனர். அதில் சீனாவை சேர்ந்த லியூயானை … Read more

ஜனவரி-3 முதல் அமராவதி அணையிலிருந்து நீர் திறக்க உத்தரவு – முதல்வர் பழனிசாமி.!

அமராவதி அணையிலிருந்து வரும் ஜனவரி 3ம் தேதி முதல் பாசனத்திற்காக நீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் நீர் பாசனத்திற்காக அமராவதி அணையிலிருந்து நீர் திறந்து விட கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அந்த வகையில் அவர்களின் கோரிக்கை ஏற்று கொண்ட முதல்வர், அமராவதி அணையிலிருந்து வரும் ஜனவரி 3ம் தேதி முதல் பாசனத்திற்காக நீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் … Read more

அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்த முதல்வர் பழனிசாமி.!

கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சரான எம். ஆர். விஜயபாஸ்கரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். தமிழக போக்குவரத்து துறை அமைச்சரான எம். ஆர். விஜயபாஸ்கருக்கு லேசான காய்ச்சல் மற்றும் சளி இருந்ததை அடுத்து கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரது மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி … Read more

மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை.!

நதிநீர் இணைப்பு குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் காணொளி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார் . தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீர் மேலாண்மைக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.அதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கூட காவிரி மற்றும் கோதாவரி நதிநீர் இணைப்பிற்காகவும், குண்டாறு மற்றும் வைகை ஆறுகளை இணைக்கும் திட்டங்களுக்காகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. மேலும் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் 2021ம் ஆண்டுக்குள் தாமிரபரணி … Read more