ராஜபாளையம் தொகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தோல்வி..!திமுக வேட்பாளர் வெற்றி..!

ராஜபாளையம் தொகுதியில்,திமுக வேட்பாளர் தங்கப்பாண்டியனை எதிர்த்துப் போட்டியிட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தோல்வியை தழுவியுள்ளார். தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து, தமிழகத்தில் இன்று காலை தொடங்கிய வாக்கு எண்ணும் பணியானது தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. இதனையடுத்து, வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி, திமுக 157 இடங்களிலும், அதிமுக 77 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. ராஜபாளையம் … Read more

“சிலருக்கு எடுக்கிற மனசு தான் இருந்தது, கொடுக்கிற மனசு இல்லை” – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

சில பேருக்கு எடுக்கிற மனசு தான் இருந்தது, கொடுக்கிற மனசு இல்லை என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் இன்று அம்மா மினி கிளினிக் தொடக்க விழா நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு, அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார். அதன்பின் பேசிய அமைச்சர், “சில பேருக்கு எடுக்கிற மனசு தான் இருக்கின்றது எனவும், கொடுக்கிற மனசு இல்லை” என கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், மக்கள் வரிப்பணம் … Read more

நான் வருகிறேன் ! திமுக தயாரா ? – ஆ.ராசா வின் கேள்விக்கு ராஜேந்திர பாலாஜி பதில் !

சேலத்தில் டிசம்பர் 1 ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 2ஜி ஊழலில் ரூபாய் 1.76 லட்சம் கோடி யை கொள்ளையடித்தது திமுகதான் என்று கூறினார். இதற்கு பதிலளித்த திமுக-வின் ஆ.ராசா, 2ஜி விவகாரம் குறித்து கோட்டையில் வைத்து முதலமைச்சரிடம் நேரடியாக விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்,முதலமைச்சர் அதற்கு தயாரா ? என்று கேள்வி எழுப்பினார். பின்னர் ஆ.ராசா வின்  கருத்துக்கு பதிலளித்துள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 2ஜி விவகாரம்  குறித்து விவாதிக்க … Read more

அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் ! கட்சியின் தலைமையின் முடிவை ஏற்போம்- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

முதலமைச்சர் வேட்பாளர் தேர்வில் அதிமுக தலைமையின் முடிவை ஏற்போம் என்று  அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றது.இதனிடையே  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், அதிமுகவின் அடுத்த முதல்வர் யார் என்பதை தேர்தலுக்கு பின்னர் சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி முடிவெடுப்பார்கள. ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தலைமையில் அதிமுக நடைபெறும். அதில் மாற்று கருத்தே இல்லை. … Read more

2-வது தலைநகம் மதுரையா ? திருச்சியா ? – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து

2-வது தலைநகராக மதுரை அமைக்கப்பட்டால்  எனக்குமகிழ்ச்சி என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் தலைநகராக இருந்து வருகிறது சென்னை.அங்கு மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சென்னையில் தான் அனைத்து துறை சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இரண்டாவது தலைநகரை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது. 2 ஆவது தலைநகரமாக மதுரையை நிச்சயமாக அறிவிக்க வேண்டும். மதுரை தான் முதன்மையான இடம் என்று அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் கூறினார். … Read more

தமிழக மக்களின் நீண்ட நாள் ஏக்க பெருமூச்சு- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ட்வீட்

எங்கள் அம்மா அவர்களின் பெயரை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு  சூட்டியது, தமிழக மக்களின் நீண்ட நாள் ஏக்க பெருமூச்சு என்று  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ‘அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ’ என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ’ என பெயர் மாற்றம்  செய்யப்படும் என்றும் சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு புரட்சித் தலைவி … Read more

தந்தை-மகன் உயிரிழப்பு : ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மறுப்பு!

அரசு விசாரணை அமைப்புகளின் மீது பழி போடும் மலிவான அரசியலை திமுக செய்கிறது. – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை-மகனான ஜெயராஜ் – பென்னிக்ஸ் உயிரிழந்தது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் மீது குற்றச்சாட்டினார். இந்த குற்றசாட்டு குறித்து, தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் தெரிவிக்கையில், போலீஸின் நடவடிக்கை மீதும், தமிழக அரசின் மீதும் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் கூறுகிறார். எங்கே தமிழக அரசு … Read more

 நாளை தங்கு தடையின்றி ஆவின் பால் கிடைக்கும்.! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.!

 நாளை பொதுமக்கள் நலன் கருதி ஆவின் பால் வினியோகிக்கப்படும்  அனைத்து ஆவின் கிளைகளிலும் பால் தங்கு தடையின்றி கிடைக்கும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவித்துள்ளார்.  கொரோனா வைரஸ் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை ஒருநாள் நாடு முழுவதும் சுய ஊரடங்கு நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என  பிரதமர் மோடி அனைத்து பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் நாளை தமிழகத்தில் அனைத்து கடைகள், ஹோட்டல்கள் , டாஸ்மாக் மதுபான கடைகள் நாளை ஒருநாள் மட்டும் மூடப்படும் … Read more

மனநோயாளியின் உளறல் ,அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் -கே.எஸ்.அழகிரி அறிக்கை

இந்து பயங்கரவாதம் உருவாகுவதை யாராலும் தடுக்க முடியாது என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறிய நிலையில் , அமைச்சரை  பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.  தனியார் தொலைக்காட்சியின் பேட்டி ஒன்றில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில்,இஸ்லாமிய தீவிரவாதத்தை உருவாக்கும் நோக்கத்தில் சில இயக்கங்கள் தொடர்ந்து அரசியல் செய்தால் இந்து பயங்கரவாதம் உருவாகுவதை யாராலும் தடுக்க முடியாது என்று பேசினார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்த பேச்சுக்கு … Read more

மிக விரைவில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள்! பால்வளத்துறை அமைச்சர் தகவல்!

உலகப்பொதுமறையான திருக்குறளை திமுக கடந்த 60 வருடங்களுக்கு மேலாக தமிழக மக்களிடம் முறையாக கொண்டு சேர்க்கவில்லை. எனவும், திமுக கட்சியானது, தமிழையும் , திருக்குறளையும் தங்கள் அரசியலுக்கு மட்டுமே பயன்படுத்தி வந்தததகவும், ஆதலால் திருக்குறளை ஆவின் பால்பாக்கெட்டுகளில் அச்சிட்டு பொதுமக்களிடம் திருக்குறளை கொண்டு சேர்க்கும்படி தமிழக பாஜக தகவல் இணையதள தலைவர் CTR.நிர்மல் குமார், தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் கோரிக்கை வைத்திருந்தார். இதற்க்கு டிவிட்டரில்  பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ‘மிக விரைவில் தமிழக … Read more