ராஜபாளையம் தொகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தோல்வி..!திமுக வேட்பாளர் வெற்றி..!

ராஜபாளையம் தொகுதியில்,திமுக வேட்பாளர் தங்கப்பாண்டியனை எதிர்த்துப் போட்டியிட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தோல்வியை தழுவியுள்ளார். தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து, தமிழகத்தில் இன்று காலை தொடங்கிய வாக்கு எண்ணும் பணியானது தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. இதனையடுத்து, வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி, திமுக 157 இடங்களிலும், அதிமுக 77 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. ராஜபாளையம் … Read more

திருமங்கலம்:ஒரே எண்ணில் இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்..!

திருமங்கலம் தொகுதியில் ஒரே எண்ணில் இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்ததால் வாக்கு எண்ணும் மையத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது இன்று காலை 8 மணியில் இருந்து நடைபெற்று வருகின்றன.முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு,அதன் பின்னர் மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன. அதில்,தற்போது வரையிலான வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி திமுக 153  தொகுதிகளிலும்,அதிமுக 80 … Read more

#breaking:விருத்தாச்சலத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா பின்னடைவு..!

விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா பின்னடைவை சந்தித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதியன்று நடைபெற்றது.இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியானது இன்று காலை 8 மணியிலிருந்து விறுவிறுப்புடன் நடந்து கொண்டிருக்கிறது.இதில் தற்போதைய நிலவரப்படி,திமுகவானது பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில்,கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் தொகுதியில் திமுகவின் கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக கட்சியின் … Read more

காட்டுமன்னார் கோவில் தொகுதி..!அதிமுக வேட்பாளர் என்.முருகுமாறன் முன்னிலை…!

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார் கோவில் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிமுக வேட்பாளரான என்.முருகுமாறன் முன்னிலையில் உள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி  நடைபெற்றது.இதனையடுத்து,நடந்து முடிந்த தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணியானது தமிழகம் முழுவதும் இன்று காலை 8 மணியிலிருந்து ஆரம்பமாகியுள்ளது.முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதனைத்தொடர்ந்து,கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் தபால் வாக்குகள் எண்ணிக்கையின் முதல் சுற்றில் அதிமுக வேட்பாளர் என்.முருகுமாறன் 3561 வாக்குகளும்,திமுக வேட்பாளர் … Read more

#Breaking:திருச்சியில் வாக்கு எண்ணிக்கைப் பணிகள் தாமதம்..!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ள நிலையில்,திருச்சியின் கிழக்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை பணிகள் தாமதமாக ஆரம்பிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தலானது கடந்த  ஏப்ரல் 6ஆம் தேதியன்று நடைபெற்றது.இதனையடுத்து,தமிழகம் முழுவதும் 75 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளது.ஒவ்வொரு மையத்திலும் 5 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்த நிலையில்,திருச்சி மாவட்டத்தின் கிழக்கு … Read more

வாக்கு எண்ணிக்கை தொடர்பாக இன்று சத்யபிரத சாகு நடத்தும் 2 வது நாள் ஆலோசனை…!

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியான சத்யபிரத சாகு,வாக்கு எண்ணிக்கை தொடர்பாக இன்று மாலை 5 மணிக்கு இரண்டாவது நாளாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது.இதனால்,ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்டுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே,கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு,வாக்குச்சாவடிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு குறித்து இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனை நடத்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஏற்பாடு செய்துள்ளார். இதனைத் … Read more

கமல்ஹாசன் அரசியல்வாதி கிடையாது; பொழுது போகாமல், அரசியலுக்கு வந்திருக்கிறார் !

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு , தமிழக அரசியல் கட்சிகள் தங்களது பல கட்ட பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.திமுக மக்கள் கிராம சபை என்று பிரச்சார மேடையை ஆரம்பிக்க .தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்திலிருந்து அதிமுகவின் பிரச்சாரத்தை ஆரம்பித்தார். மக்கள் நீதி மய்ய கட்சி  தலைவர் கமல் ஹாசன் ஊழல் ,திராவிடம்,எம்.ஜி.ஆர் என்று தனது பிரச்சார போக்கை சற்று வித்தியாசமாக கொண்டு செல்கிறார் .தனது பிரச்சாரத்தில் ஒரு படி மேலே சென்று ” புரட்சித் தலைவர் திமுகவில் … Read more