பாலை அதிக விலைக்கு மக்கள் தலையில் கட்டி, கொள்ளையடிக்கும் ஆவின்! – அன்புமணி

Anbumani

சென்னையில் புயல் காரணமாக பெய்த மழையால், மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். பல இடங்களில் மழை நீர் வடியாத காரணத்தால், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. தங்களது அத்தியாவசிய தேவையை கூட பூர்த்தி செய்ய இயலாத அளவுக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக அன்றாட தேவையான பாலை வாங்குவதற்கு மக்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் வாங்குகின்றனர். பல இடங்களில் பாலை அதிக விலைக்கு விற்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதற்கு அன்புமணி ராமதாஸ் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து … Read more

பால் விநியோகம் செய்யும் இடங்களில் நேரடியாக ஆய்வு செய்த அமைச்சர் மனோ தங்கராஜ்!

manothangaraj

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை முழுவதும் உருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது. சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், மழைநீர் சூழ்ந்திருப்பதால், மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. சென்னையில் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வந்தாலும், பல இடங்களில் மக்கள் உணவு, பால், தண்ணீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனால் சில இடங்களில் மக்கள் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஓய்வின்றி உழைப்பு… விரைவில் நிலைமை சீரடையும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.! இந்த நிலையில், வெள்ள பாதிப்பால் பால் விநியோகிப்பதில் … Read more

கூடுதல் விலைக்கு பால் விற்றால் கடும் நடவடிக்கை.. அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை!

Aavin milk

கூடுதல் விலைக்கு பால் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. வரலாறு காணாத மழை பெய்ததால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சென்னையில், ஒரு சில இடங்களில் மழைநீர் வடிந்த நிலையில், பல இடங்களில் மழைநீர் இன்னும் வடியவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. … Read more

ஆவின் பால் பாக்கெட்டில் ‘ஈ’.! அதிர்ச்சியில் நுகர்வோர்.! அதிகாரிகள் தீவிர விசாரணை.!

மதுரை, ஆரப்பாளையம் பகுதியில் ஆவின் பால் பாக்கெட்டில் ஈ இருந்ததால் நுகர்வோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் பால் பாக்கெட் திரும்ப பெறப்பட்டு, எப்படி ஈ வந்தது என விசாரணை நடைபெற்று வருகிறது.   மதுரை மாநகராட்சி ஆரப்பாளையம் பகுதிக்கு உட்பட்ட 33வது வழித்தடத்தில் ஆவின் பால் வேன் மூலம் டிப்போக்களுக்கு அனுப்பப்படும். அப்படி, நாகமலை புதுக்கோட்டை, மதுரை காமராஜ் பல்கலை கழகம், கீழமாத்துார் உ ள்ளிட்ட ஆவின் பால் டெப்போக்களுக்கு பால் பாக்கெட்டுகள் அதிகாலையில் வினியோகிக்கப்பட்டன. இதில் காமராஜ் காமராஜ் … Read more

ஆவின் பால் தடையின்றி கிடைக்கும் – அமைச்சர் நாசர் உறுதி!

சென்னை:ஆவின் பால் தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு கிடைக்கும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் உறுதியளித்துள்ளார். சென்னையில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகள் கடைகளில் மழைநீர் வெள்ளம் சூழ்ந்துள்ளது.இதனால்,மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக,மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேரில் பார்வையிட்டு,மக்களுக்கு நிவாரணப் பொருட்களை மூன்றாவது நாளாக இன்று வழங்கினார்.அதேசமயம், அமைச்சர்களும்,அதிகாரிகளும் நிவாரணப்பணிகள் மற்றும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில்,இன்று காலை சோழிங்கநல்லூர்,அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள பால்பண்ணை ஆய்வு செய்த … Read more

ஆவின் பாலில் மிதந்த தவளை…! விசாரணை மேற்கொண்ட அதிகாரி…!

சிவநேசன் என்பவர் வாங்கிய தமிழக அரசின் பால் நிறுவனமான ஆவின் பால் பாக்கெட்டில் இறந்த நிலையில் கிடந்த தவளை. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வானமாமலை தெருவை சேர்ந்த சிவநேசன் என்பவர், நேற்று மாலை பாஸ்கர் என்பவர் நடத்தி வரும் ஆவின் பாலத்திற்கு சென்று பால் பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். அவர் வீட்டிற்கு சென்று பால் பாக்கெட்டை பிரித்து பார்த்தபோது அதில் இறந்த நிலையில் தவளை ஒன்று இருந்ததாக கூறப்படுகிறது . இதனையடுத்து, சிவனேசன் ஆவின் பால் முகவர் … Read more

சென்னையில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு இல்லை !

சென்னையில் ஆவின் பாலுக்குத் தட்டுப்பாடு இல்லை என்று வள்ளலார் அறிவிப்பு.  கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், சென்னையில் ஆவின் பாலுக்குத் தட்டுப்பாடு இல்லை என்று ஆவின் பாலகம் நிர்வாக இயக்குனர் வள்ளலார் அறிவித்துள்ளார். ஆவினுக்கு சொந்தமான லாரிகள் மூலமாகவும், தனியார் வாகனங்கள் மூலமாகவும் சென்னையில் சுமார் 13.26 லட்சம் லிட்டர் பால் கொண்டு வரப்பட்டு தட்டுப்பாடு  இல்லாமல் விற்பனை செய்து வரப்படுகிறது என்று ஆவின் நிர்வாக இயக்குனர் வள்ளலார் கூறியுள்ளார். 

ஆவின் ஊழியர்களுக்கு கொரோனா ! தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை

ஆவின் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.குறிப்பாக கோயம்பேடு சந்தை மூலமாக கொரோன பரவி வருகிறது.இந்த சந்தையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு  சென்றவர்களுக்கும்  கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது. இதற்கு இடையில்  சென்னையில் உள்ள மாதவரம் ஆவின்  பால்பண்ணையில் பணிபுரியும் 2 தொழிலாளர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அந்த பால்பண்ணையில், பேக்கிங் செக்சனில் பணிபுரிந்துள்ளனர்  இங்கு  500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிற நிலையில், … Read more

இனிமேல் பால் வீடு தேடி வரும் ! ஸ்விகி நிறுவனத்துடன் ஆவின் பால் ஒப்பந்தம் !

இனிமேல் பால் வீடு தேடி வரும். ஸ்விகி நிறுவனத்துடன் ஆவின் பால் ஒப்பந்தம் ! ஆவின் நிர்வாகம் பால் பொருட்களை வாடிக்கையாளர்கள் வீடு தேடி சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தனர். ஏப்ரல் 24ம் தேதி முதல் ஸ்மோடோ, டன்சோ  நிறுவனங்கள் மூலம் சேவையாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், தற்போது ஸ்விகி நிறுவனத்துடனும் சேவையாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டதாக ஆவின் நிர்வாகத்தின் இயக்குனர் வள்ளலார் அறிவித்துள்ளார். மக்கள் ஸ்விகி, ஸ்மோடோ, டன்சோ ஆகிய நிறுவனங்கள் மூலமாகவும் நேரடியாக … Read more

Coronalockdown : வீடு தேடி விற்பனை செய்ய ஆவின் பாலகம் திட்டம் !

ஊரடங்கு காரணமாக பால் வீடு தேடி விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக  ஆவின் பாலகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மே 3 தேதி வரை ஊரடங்கு உத்தவை பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில், தற்போது தமிழக அரசானது அடுத்த மூன்று நாட்களுக்கு சென்னை, கோவை, திருப்பூர் மற்றும் சேலம் மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளனர். இதனால்,  இன்று மாலை 3 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதி … Read more