முதல்வர் வேட்பாளர் குறித்து சி.டி.ரவி கூறியது சரியா ? தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் விளக்கம்

அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி என சி.டி.ரவி கூறியது சரியான கருத்துதான் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அதிமுக மற்றும் பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை மத்திய தலைமை தான் அறிவிக்கும் என தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்தார்.ஆனால் அதிமுக ஏற்கனவே முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை அறிவித்த நிலையில், இவ்வாறு கூறிவந்தது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனிடையே  தமிழகத்தில் அதிமுக பெரும்பான்மையான கட்சி என்பதால் முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் … Read more

முதலமைச்சர் வேட்பாளர் பழனிசாமி ! அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்

முதலமைச்சர்  வேட்பாளராக பழனிசாமியை ஏகமனதாக ஏற்று அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி அதிகாரபூர்வமாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.நீண்ட நாட்களாக முதலமைச்சர் வேட்பாளர் குறித்து முடிவு எடுப்பதில் குழப்பம் நீடித்து வந்த நிலையில் பல கட்ட ஆலோசனைக்கு பின்னர் பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை … Read more

“முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ்.. நம்பிக்கையான அறிவிப்பு!” – ஜி.கே.வாசன்

“முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ்! நம்பிக்கையான அறிவிப்பு” என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். அதிமுகவில் 50 நாட்களாக ஏற்பட்ட குழப்பம், இன்று முடிவுக்கு வந்துள்ளது. அந்த வகையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஈபிஎஸ் – ஓபிஎஸ், 2021-ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அவர்களை அதிகாரபூர்வமாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதனையடுத்து அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், அவர்களுக்கு பல … Read more

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் மாலை மீண்டும் ஆலோசனை

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன்மாலை 6 மணிக்கு மீண்டும் ஆலோசனை  மேற்கொள்ள உள்ளார். இன்று காலை ஆலோசனை நடத்திய அமைச்சர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாளை அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் பேச்சுவார்த்தை தீவிரமாகி வருகிறது.

துணை முதல்வர் உடன் ஆலோசித்த அமைச்சர்கள் முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனை

துணை முதல்வர் உடன் ஆலோசித்த அமைச்சர்கள் முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள அதிமுகவில் தற்போதே முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.நாளை முதலமைச்சர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் இன்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி  அதிமுகவின் மூத்த அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் … Read more

அதிமுக அவைத்தலைவர் மாற்றமா ? மதுசூதனன் விளக்கம்

அவைத் தலைவர் பதவியில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது என்று அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.  தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என தற்போதைய முதலமைச்சர் பழனிசாமி,துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடையே வெளிப்படையான மோதல் வெடித்துள்ளது.அண்மையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்திற்கு நாளை (அக்டோபர் 7-ஆம் தேதி ) முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் முதல்வர் … Read more

மூத்த அமைச்சர்கள் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வதுடன் சந்திப்பு

மூத்த அமைச்சர்கள் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை  சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் அடுத்த ஆண்டு  தேர்தல் நடைபெற உள்ள அதிமுகவில் தற்போதே முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.இதன் வெளிப்பாடாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்  நாளை அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் அதிமுகவின் மூத்த அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் … Read more

முதலமைச்சர் வேட்பாளர் நாளை அறிவிப்பு ! முதலமைச்சர் ,  துணை முதலமைச்சர் தனித்தனியாக ஆலோசனை

அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் நாளை அறிவிக்கப்பட உள்ள நிலையில்,முதலமைச்சர் , துணை முதலமைச்சர் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார்கள். தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என தற்போதைய முதலமைச்சர் பழனிசாமி,துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடையே வெளிப்படையான மோதல் வெடித்துள்ளது.அண்மையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்திற்கு நாளை  (அக்டோபர் 7-ஆம் தேதி ) முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் முதல்வர் பழனிசாமி … Read more

3 நாட்கள் ஆலோசனைக்கு பிறகு சென்னை புறப்பட்டார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சென்னை புறப்பட்டார். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தனது ஆதரவாளர்களுடன் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தினர்.இதற்காக பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள தனது பண்ணைவீட்டில் 3 நாட்களாக ஓ.பன்னீர்செல்வம் தங்கினார். 3 நாட்கள் ஆலோசனைக்கு பிறகு இன்று சென்னை கிளம்புகிறார் துணை முதல்வர் பன்னீர்செல்வம் அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்புக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தொடர்ச்சியாக பன்னீர்செல்வத்தை அவரது ஆதரவாளர்கள் சந்தித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் … Read more

முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் முதலமைச்சர் -அமைச்சர்கள் ஆலோசனை

7ஆம் தேதி அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதலமைச்சர்  பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு  நடைபெற உள்ள நிலையில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என தற்போதைய முதலமைச்சர் பழனிசாமி,துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடையே வெளிப்படையான மோதல் வெடித்துள்ளது.அண்மையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்திற்கு நாளை மறுநாள் (அக்டோபர் 7-ஆம் தேதி ) முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று … Read more