2-வது தலைநகம் மதுரையா ? திருச்சியா ? – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து

2-வது தலைநகராக மதுரை அமைக்கப்பட்டால்  எனக்குமகிழ்ச்சி என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் தலைநகராக இருந்து வருகிறது சென்னை.அங்கு மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சென்னையில் தான் அனைத்து துறை சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இரண்டாவது தலைநகரை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது. 2 ஆவது தலைநகரமாக மதுரையை நிச்சயமாக அறிவிக்க வேண்டும். மதுரை தான் முதன்மையான இடம் என்று அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் கூறினார்.

இதனிடையே  அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ கருத்துக்கு நேர்மாறாக கோரிக்கை விடுத்தார்  அமைச்சர் வெல்லமண்டி நட்ராஜன்.நேற்று  அமைச்சர் வெல்லமண்டி நட்ராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், திருச்சியை 2வது தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று கூறினார்.திருச்சியை 2வது தலைநகராக அறிவிக்கவேண்டும் என்பது எம்ஜிஆரின் கனவுத்திட்டம். முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரிடம் திருச்சியைதான் 2வது தலைநகராக அறிவிக்க முயற்சிப்போம் என்று தெரிவித்தார்.இந்நிலையில் இது குறித்து  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில் , பல மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் 2-வது தலைநகராக மதுரை அமைக்கப்பட்டால் தென்மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சி எனக்கும் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.