12 மணி நேர வேலை சட்ட மசோதாவை திரும்ப பெறுக - வைகோ, அன்புமணி வலியுறுத்தல்!

Apr 22, 2023 - 05:34
 0  0

12  மணி நேர வேலை சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என மதிமுக மற்றும் பாமக தலைவர்கள் வலியுறுத்தல்.

தொழிற்சாலை சட்ட திருத்தம் செய்யும் சட்ட வரையறையை தமிழக அரசு நேற்று சட்டப்பேரவையில் கொண்டு வந்தது. இந்த மசோதா தொழிலாளர்களின் பணிநேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணிநேரமாக மாற்றும் நடைமுறையாக உள்ளது என தெரிவிக்கப்படுகிறது. இதனால், தொழில் நிறுவனங்களில் 12 மணி நேர வேலை சட்ட மசோதாவுக்குபேரவையில் காங்கிரஸ், மதிமுக, மமக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சி, கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எதிர்ப்புகளுக்கு மத்தியில் 12 மணி நேர வேலை தொடர்பான 2023ம் ஆண்டு தொழிற்சாலைகள் திருத்த சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியது. தினசரி 12 மணி நேரம் என வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுப்பு என்ற முறையை இச்சட்டம் கொண்டுள்ளது. இது தொழிலாளர்களின் விருப்ப தேர்வாகவே இருக்கும், கட்டாயம் அல்ல, அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த சட்டம் இல்லை, விரும்பக்கூடிய தொழிற்சாலைகள், தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்த சட்டம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தனியார் நிறுவனங்களில் 12  மணி நேர வேலை சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டலுக்கு புது சட்டம் சட்டப்பூர்வ ஏற்பளிப்பை தந்துவிடும் எனவும் தெரிவித்துள்ளார். இதுபோன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், பணியாளர்களை கொத்தடிமையாக்கும் 12 மணி நேர பணி சட்டத்தை அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow