#Breaking : தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி.!

Apr 11, 2023 - 05:37
 0  1

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கும் வகையில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழக்த்தில்  ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழக காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு வழக்கு தொடர்ந்து இருந்தது. தமிழக அரசு மேல்முறையீடு :

சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. தமிழக அரசு வாதம் :

இந்த மேல்முறையீடு வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், நாங்கள் முழுதாக ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதிக்கவில்லை. எங்கெல்லம் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததோ அதனை குறிப்பிட்டு கட்டுப்பாடுகள் மட்டுமே விதித்தோம் என வாதிட்டனர். ஆர்எஸ்எஸ் வாதம் :

ஆர்எஸ்எஸ் தரப்பில் வாதிடுகையில், பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட காரணத்தால் அவர்களால் பாதிப்பு ஏற்படும் என தமிழக அரசு கூறுகிறது. அதனை ஏற்க முடியாது. அப்படி பாதிப்பு வரும் என்றால் தமிழக அரசு தான் எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வாதிட்டனர்.

மனுக்கள் தள்ளுபடி :

இருதரப்பு வாதங்களையும் கேட்டு தீர்ப்பு ஒத்திவைத்த உச்சநீதிமன்ற அமர்வு, இன்று தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில், தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை மொத்தமாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பேரணிக்கு அனுமதி :

இந்த தள்ளுபடி உத்தரவு மூலம், தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்துள்ளது டெல்லி உச்சநீதிமன்றம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow