நிவாரண முகாமை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சென்னையை நெருங்கி இருந்த மிக்ஜாம் புயலானது தற்போது சென்னையை விட்டு விலகியுள்ளது. இருந்தாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி இருந்த நிலையில், மழைநீர் சூழ்ந்த இடங்களில் மாநகராட்சி ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மழையின் அளவு குறைந்தாலும் இன்னும் தேங்கிய மழைநீர் வடியாத காரணத்தால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக சென்னை , செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயலின் தற்போதைய நிலை…  வானிலை ஆய்வு மையம் புதிய தகவல்.! 

இந்த நிலையில், தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் தற்போது நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அனைத்து வசதிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கண்ணப்பர் திடலில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமை நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து வால்டக்ஸ் சாலை, கொளத்தூர் நிவாரண முகாம்களிலும் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.