மக்களவை தேர்தலில் தமிழக மக்கள் பாஜகவுக்கு பாடம் புகட்டுவர்! திருமாவளவன், செல்வப்பெருந்தகை கூட்டாக பேட்டி

Selvaperunthagai – Thirumavalavan: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக அண்மையில் தேர்வான செல்வபெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்ற பின், தோழமை கட்சித் தலைவர்களை அடுத்தடுத்து செல்வப்பெருந்தகை சந்தித்து பேசி வருகிறார். அந்த வகையில் அவரின் திருமாவளவனுடனான சந்திப்பு நடைபெற்றது. விசிக தலைமை அலுவலகமான சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் திருமாவளவனும், செல்வப்பெருந்தகையும் சந்தித்தனர். இதன் பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் பேசும் போது, … Read more

விசிக துணைப் பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜுன் நியமனம்..! திருமாவளவன் அறிவிப்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜுன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அம்பேத்கர் திடலில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு நடைபெற்றது. கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் கூட்டமானது நடைபெற்றது. இதன் போது ஆதவ் அர்ஜுன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார், இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவராகவும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் ஆதவ் அர்ஜுன் உள்ளார். … Read more

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலங்களே இருக்காது..! விசிக மாநாட்டில் முதல்வர் மு.க ஸ்டாலின் உரை

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் நடைபெறும் “வெல்லும் ஜனநாயகம்” மாநாட்டில் முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக மாநாட்டில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி பல்வேறு தீர்மானங்களை முன்மொழிந்தார். மாநாட்டில் பேசிய முதல்வர், “இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” என்பதற்கு இலக்கணமாக சகோதரர் திருமாவளவனின் படை வீரர்கள் ஜனநாயகம் காக்க இங்கு கூடியுள்ளனர். திருமாவளவன் அவர்கள் சட்டக்கல்லூரி மாணவராக மாணவர் திமுகவில் பணியாற்றிய போதில் இருந்தே அவரை … Read more

முதல்வரின் தாயார் மறைவுக்கு தொல் திருமாவளவன் இரங்கல்

முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் தவசாயி சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.முதல்வர் பழனிசாமி தனது தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் முதல்வரின் தாயார் மறைவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அருமை தாயார் தவசாயி அம்மாள்(93) காலமானதையறிந்து வேதனைப் படுகிறேன்.மாண்புமிகு முதல்வர் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது தாயாரின் … Read more

கொரோனா சிகிச்சை பெற்றுவந்த தொல்.திருமாவளவனின் மூத்த சகோதரி இன்று உயிரிழந்தார்.!

கொரோனா சிகிச்சை பெற்று வந்த விசிக கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் சகோதரி கு.பானுமதி இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் மூத்த சகோதரியான கு.பானுமதி இன்று உயிரிழந்தார். அவருக்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது. … Read more

பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல் கருத்து கூறிய ரஜினிகாந்த்.! திருமாவளவன் சாடல்.!

டாஸ்மாக் திறப்பு குறித்து ரஜினி பதிவிட்ட கருத்து பாம்பும் சாகாமல், தடியும் நோகாமல் இருப்பது போல உள்ளது. என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.  கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த 4 ஆம் தேதி முதல் 3 ஆம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும், சில தளர்வுகள் கொடுக்கப்பட்டன. அதன்படி, கடந்த 7ஆம் தேதி தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. மதுக்கடைகளில் சரியான சமூக விலகலை பின்பற்றவில்லை என சில காரணங்கள் கூறி … Read more

உருப்படியான நிவாரணத் திட்டம் அறிவிக்காதது அதிர்ச்சியளிக்கிறது – திருமாவளவன் அறிக்கை

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உருப்படியான நிவாரணத் திட்டம் அறிவிக்காதது அதிர்ச்சி அளிக்கிறது என்றும் முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்களுக்கும் வெளிமாநிலங்களைச்சார்ந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் போதிய நிவாரண அறிவிப்பை விரைந்து அறிவிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் அறிக்கையில், தமிழக முதல்வரின் அறிவிப்பில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மீண்டும் ரூ.1,000 வழங்கப்படும் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு மே மாதத்திற்கான … Read more

பொருளாதாரம் வீழ்ச்சியடைவது குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை – விசிக தலைவர் குற்றச்சாட்டு

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற சுகாதாரத் விழாவில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரான விடுதலை சிறுத்தை தலைவர் தொல் திருமாவளவன் கலந்துகொண்டார். இதில் பாராம்பரிய உணவு பொருள் கண்காட்சியையும், இரத்ததான முகாமையும் அவர் ஆரம்பித்து வைத்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைவது குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை என குற்றம்சாட்டினார். பின்னர் பொருளாதார பாதிப்பிற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும் என்றும் உலக அரங்கில் மிகமோசமாக விமர்சிக்கப்படும் அளவிற்கு பொருளதாரம் வீழ்ந்துள்ளதாக விமர்சித்தார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்து வரும் எம்.பி திருமாவளவன்!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.  நேற்று திமுகவினர் கோலம் வரைந்து அதன் மூலம் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர்.  மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கும், குடிமக்கள் சட்டத்திற்கும் எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்திலும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி மற்றும் பல திமுகவினர் தங்கள் வீட்டு … Read more

மெரினா கடற்கரையில் நேருக்கு நேர் சந்திக்க தயாரா.? திருமாவளவனுக்கு, காயத்ரி ரகுராம் சவால்..!

இந்து கோவில்களை பற்றி இழிவாக பேசிய திருமாவளவனை கடுமையாக விமர்சித்தார் நடிகை காயத்ரி ரகுராம். இதற்கு விடுதலை சிறுத்தை கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். சென்னை நுங்கப்பாக்கம் காம்தார் நகரில் உள்ள காயத்ரி ரகுராமின் வீட்டை முற்றிகையிட்டு போராட்டம் நடத்தினர். இதற்கு பதிலடியாக நேற்றிய தினம் காயத்ரி ரகுராம் மெரினா கடற்கரையில் என்னை நேருக்கு நேர் மிரட்ட தயாரா என டிவிட்டரில் திருமாவளவனுக்கு சவால் விடுத்திருந்தார். இதற்கிடையில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி கமிஷனரிடம் பாதுகாப்பு … Read more