கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: அறிக்கையை தாக்கல் செய்தது தனிப்படை!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரிக்கப்பட்ட சாட்சியங்களின் வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது காவல்துறை. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை தனிப்படை போலீசார் நீதிமன்றத்தின் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மறுப்புலன் விசாரணையில் சசிகலா உள்ளிட்ட 326 சாட்சியங்களின் வாக்குமூலங்கள் அடங்கிய அறிக்கையை உதகை நீதிமன்றத்தில் தனிப்படை போலீசார் தாக்கல் செய்தனர். சிறப்பு காவல் டிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி 1,500 பக்கங்கள் கொண்ட சாட்சியங்களின் வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

மதுரை மேம்பால விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல்…!

மதுரை மேம்பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள நத்தம் சாலையில் புதிதாக மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு தொழிலாளர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்தார். பின் விபத்து நடந்த இடத்தை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். இந்த மேம்பாலத்தின் ஒவ்வொரு பிரிவும் 70 டன் எடை … Read more

அடடா!அட்டகாசமான மகளிருக்கான இலவச பயண வழிகாட்டு நெறிமுறைகள்- தமிழக போக்குவரத்து துறை அறிக்கை..!

மகளிருக்கான இலவச பயண வழிகாட்டு நெறிமுறைகளுக்கான அறிக்கையை தமிழக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின்,முதல் நாளிலேயே 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.அதில்,அனைத்து மகளிரும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்ற கோப்பும் ஒன்றாக இருந்தது.பின்னர்,அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. அதன்படி,தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் அனைத்து சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும்,பேருந்து பயண அட்டை இல்லாமலும் கடந்த மே 8 ஆம் தேதியிலிருந்து பயணித்து … Read more

அதிகமான குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் இவர்களே! ஆய்வில் வெளியான அதிர்ச்சி முடிவு!

தேசிய குற்ற பதிவு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், 2019-ல் 28% சிறார் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், பள்ளிக்கே செல்லாத குழந்தைகளை விட பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய சிறுவர்கள்தான் அதிக குற்றங்களில் ஈடுபடுவதாகவும், அதிலும் ஆதரவற்றவர்களை விட பெற்றோருடன் வாழும் சிறார்கள் தான் இந்த குற்றங்களில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2019-ல் மட்டும் 3305 சிறார்கள் குற்றங்களில் ஈடுபட்டு உள்ளனர். அதில் 2470 பேர் ஆரம்பப்பள்ளி அல்லது இடை கல்வி பயின்றவர்கள். படிப்பறிவு … Read more

உலகில் மன்னிக்க முடியாத குற்றம் இது! அன்புமணி ராமதாஸ்அறிக்கை!

உலகில் மன்னிக்கக்கூடாத குற்றம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களே. இன்று பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள்,  பெண்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படிப்பட்ட குற்றங்களுக்கு தண்டனை  என்று, அரசியல் கட்சி பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை,  அனைவரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அன்புமணி ராமதாஸ்  அவர்கள், அந்த அறிக்கையில், உலகில் மன்னிக்கக்கூடாத குற்றம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான … Read more

300 கோடி உயிரினங்களை கொன்ற ஆஸ்திரேலிய காட்டு தீ! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

300 கோடி உயிரினங்களை கொன்ற ஆஸ்திரேலிய காட்டு தீ. கடந்த 2019ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு தொடக்கத்தில், ஆஸ்திரேலியாவில் பயங்கரமான காட்டு தீ ஏற்பட்டது. இதனால் சுமார் 1,15,000 சதுர கிலோமீட்டர் காட்டுப்பகுதி பாதிக்கப்பட்டது. இந்த தீ விபத்தால் 30க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்த நிலையில்,  ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து வாடினர். ஆஸ்திரேலிய வரலாற்றில் இதுதான் மிக நீண்ட காட்டுத் தீயாக இருந்தது. இந்நிலையில், இந்த காட்டு தீயில் ஏராளமான உயிரினங்கள் உயிரிழந்துள்ளன. ஆஸ்திரேலிய பல்கலைக்கழக … Read more

# இடியுடன் மழை# 10 மாவட்ட மக்களுக்கு அறிவிப்பு!

10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய  கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல் : வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின்  10 மாவட்டங்களில்  இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அவ்வாறாக கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி, பெரம்பலூர், புதுக்கோட்டை,  சிவகெங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு … Read more

மே 3 க்கு பிறகு எடுக்க வேண்டிய நடவடிக்கை – அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு.!

மே 3 ஆம் தேதிக்கு பிறகு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை தமிழக அரசிடம் அறிக்கையை வல்லுநர் குழு சமர்பித்துள்ளார்கள். எந்தந்த பகுதிகளில் தொழில் தொடங்கலாம் என்பது பற்றி தமிழக வல்லுநர் குழு 2 ஆம் அறிக்கையை முதல்வர் பழனிசாமியிடம் சமர்ப்பித்துள்ளனர். இதையடுத்து மே 3 க்கு பிறகு கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை வல்லுநர் குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் 17 பேர் கொண்ட வல்லுநர் குழு தனது 2ம் கட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. நிதித்துறை … Read more

வீடு, வீடாக நடத்தப்படும் ஆய்வு சரியில்லை – டிடிவி தினகரன் அறிக்கை.!

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று நோயினால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதால், பரிசோதனை மையங்களையும், சோதனை எண்ணிக்கையையும் அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கட்டுப்பாட்டு பகுதி அல்லாத மற்ற இடங்களில் குடும்ப உறுப்பினர்களின் பெயர், வயது போன்ற ஒன்றிரண்டு கேள்விகளோடு நோய் கண்டறிதலுக்கான கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த கணக்கெடுப்பையே சோதனை என்றும் இதுவரை 93% பேரிடம் சோதனை செய்யப்பட்டதாகவும் … Read more

உருப்படியான நிவாரணத் திட்டம் அறிவிக்காதது அதிர்ச்சியளிக்கிறது – திருமாவளவன் அறிக்கை

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உருப்படியான நிவாரணத் திட்டம் அறிவிக்காதது அதிர்ச்சி அளிக்கிறது என்றும் முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்களுக்கும் வெளிமாநிலங்களைச்சார்ந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் போதிய நிவாரண அறிவிப்பை விரைந்து அறிவிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் அறிக்கையில், தமிழக முதல்வரின் அறிவிப்பில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மீண்டும் ரூ.1,000 வழங்கப்படும் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு மே மாதத்திற்கான … Read more