வீடு, வீடாக நடத்தப்படும் ஆய்வு சரியில்லை – டிடிவி தினகரன் அறிக்கை.!

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று நோயினால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதால், பரிசோதனை மையங்களையும், சோதனை எண்ணிக்கையையும் அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கட்டுப்பாட்டு பகுதி அல்லாத மற்ற இடங்களில் குடும்ப உறுப்பினர்களின் பெயர், வயது போன்ற ஒன்றிரண்டு கேள்விகளோடு நோய் கண்டறிதலுக்கான கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
இந்த கணக்கெடுப்பையே சோதனை என்றும் இதுவரை 93% பேரிடம் சோதனை செய்யப்பட்டதாகவும் சென்னை மாநகராட்சி குறிப்பிட்டிருப்பது சரியான நடைமுறை இல்லை என்றும் தமிழக அரசு இப்படி ஏனோதானோவென்று நடந்து கொள்ளாமல் நோயை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவர எல்லா பகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவை கண்டறிய சென்னையில் வீடு, வீடாக நடத்தப்படும் ஆய்வு சரியில்லை என்று டிடிவி தினகரன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்