பிறந்த நாளன்று விலகல் பரிசு! ஹர்சிம்ரத் பாதல்..விலகலுக்கு காரணம்??..

பிரதம மோடியின் பிறந்த நாளான நேற்று அவரது கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஷிரோமணி அகாலி தளம் கட்சி மந்திரி ராஜினாமா செய்துள்ளார்.  மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஹர்சிம்ரத் பாதல் அங்கம் வகிக்கும் ஷிரோமணி அகாலி தளம் கட்சி உள்ளது. இந்நிலையில், விவசாயிகளுக்கு எதிரான அவசர சட்டத்தை நிறைவேற்ற ஆளும் பாரதிய ஜனதா கட்சி  முயல்வதாக கூட்டணி கட்சியான  ஷிரோமணி அகாலி தளம் கட்சி  குற்றம்சாட்டியது. இத்தகைய ஒரு மசோதா … Read more

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ராஜினாமா..?

ஜப்பானின் பிரதமர் ஷின்சோ அபே உடல் நலப் பிரச்சினைகள் காரணமாக  ராஜினாமா அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடல்நிலை குறித்த ஊகங்கள் பல வாரங்களாக செய்திகள் பரவி வருகின்றன. குறிப்பிடப்படாத நோய் காரணமாக சமீபத்தில் இரண்டு முறை மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு சென்று வந்த நிலையில், காய்ச்சல் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டது. மேலும், உள்ளூர் ஊடகங்களில் தனது நோய் மோசமடைந்துள்ளதால் அபே ராஜினாமா செய்ய விரும்புகிறார் எனவும், நாட்டை வழிநடத்துவதில் இது … Read more

லெபனான் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டேமினால் கட்டார் ராஜினாமா! காரணம் என்ன?

லெபனான் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டேமினால் கட்டார் ராஜினாமா. பெய்ரூட்டில் உள்ள துறைமுகம் அருகே சில ஆண்டுகளுக்கு முன்பு சேமித்து வைக்கப்பட்டிருந்த 2750 டன் எடை கொண்ட  அம்மோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியதால், பல கட்டிடங்கள் சேதமடைந்தன. இந்த விபத்தில் பாலா உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து அந்நாட்டையை உருகுலைத்துள்ள நிலையில், லெபனான் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டேமினால் கட்டார் ராஜினாமா செய்துள்ளார். அம்மோனியம் நைட்ரேட் … Read more

இந்தியாவில் தொழிநுட்ப துறையில் 10,000 பேருக்கு மேல் பணிநீக்கம்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் தொழிநுட்ப துறையில் 10,000 பேருக்கு மேல் பணிநீக்கம். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால், கேளாய் எளிய மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல், தொழில் துறைகளும் சரிவை கண்டுள்ளது.  இதனால், பல தொழில்சாலைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், நாஸ்காம் என்ற நிறுவனம் எடுத்த ஆய்வு ஒன்றில், இந்தியாவில் தொழிநுட்பதுறையில் இதுவரை … Read more

ஆஸ்திரேலியாவில் சமூக இடைவெளியை பின்பற்றாத மந்திரி! நேற்று ராஜினாமா!

ஆஸ்திரேலியாவில் சமூக இடைவெளியை பின்பற்றாத மந்திரி, நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். முதலில் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொடர்ந்து மற்ற நாடுகளை தாக்க துவங்கியது. இந்த கொரோனா வைரஸால் உலக அளவில், இதுவரை 3,220,268 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 228,224 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் அமெரிக்காவில் தான் இந்த வைரஸ் நோயால் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அங்கு, இந்த நோயால் பலியானாரின் எண்ணிக்கை 61 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் அனைத்து நாடுகளிலும் இந்த வைரஸின் தாக்குதலை … Read more

தேர்தலில் பின்னடைவு..! பாஜக தலைவர் பதவி ராஜினாமா..!

ஹரியானாவில் இன்று காலை முதல் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஹரியானாவில் பாஜக காங்கிரஸ் இடையே போட்டி நிலவி வருகிறது. பாஜக 36 இடங்களையும் , காங்கிரஸ் 31 இடங்களையும் மற்றும்  ஜனநாயக ஜனதா கட்சி 11 இடங்களையும் பெற்று உள்ளது. இந்நிலையில் எளிதாக ஆட்சி அமைக்க பாஜக எதிர்பார்த்த நிலையில் தற்போது கூட்டணி அமைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. டொஹனா தொகுதியில் போட்டியிட்ட பாஜக தலைவர் சுபாஷ் பரலா … Read more

ஆலோசனை குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்த கபில்தேவ்..!

இந்திய அணியில் சமீபகாலமாக இரட்டை பதவி குறித்த பிரச்சனை நடந்து வருகிறது. இதில் சச்சின் , டிராவிட் மற்றும்  கங்குலி போன்ற முன்னாள் வீரர்கள் இந்த சர்ச்சையில் சிக்கினார். சமீபத்தில் டிராவிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு டிராவிட் விளக்கமும் கொடுத்தார். இதைத்தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் வீரரும் , ஆலோசனை குழுவிற்கு தலைவராக உள்ள கபில் தேவ் மீது சமீபத்தில் இரட்டை பதவி ஆதாயம் விவகாரம் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இந்நிலையில் கபில் தேவ் ஆலோசனை குழு தலைவர் … Read more

இயக்குனர்கள் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் பாரதிராஜா!

சமீபத்தில், இயக்குனர்கள் சங்கத்தின் தலைவராக முத்த இயக்குனர் பாரதிராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.  இந்நிலையில்,இயக்குனர்கள் சங்க தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ” கடந்த மாதம் நடைபெற்ற நமது சங்க பொதுக்குழுவில், நமது சங்க நிர்வாகிகள் இயக்குனர்கள், இதணை, துணை உதவி இயக்குனர்கள், பேராதரவுடன் போட்டியின்றி என்னை தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு மிகவும் நன்றி. ஆனால், தேர்தலில் போட்டியிடாமல் ஒரு பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் அதனால் ஏற்படும் சங்கடங்களை நான் நன்கு … Read more

பாதுகாப்புத்துறையில் மோசமாக பணியாற்றிய 5 பேருக்கு கட்டாய ஓய்வு மத்திய அமைச்சர் தகவல்…!!

பாதுகாப்புத் துறையின் குடிமைப் பணிகள் அதிகாரிகள் 5 பேர் சரிவர பணி செய்யவில்லை என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய அரசுப்பணியில் மோசமாக பணியாற்றிய, 5 பேருக்கு கட்டாய ஓய்வு வழங்கி, அவர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்

“கன்னியஸ்திரியை கற்பழித்த” விவகாரம் பேராயர் பதவி பறிப்பு..!!நெருக்கடியில் பிராங்கோ..!!

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள அருட்கன்னியர் இல்லத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறைமாவட்ட பேராயர் பிராங்கோ மூலக்கல் கற்பழித்ததாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் பிராங்கோ பலமுறை தன்னை கற்பழித்ததாக கன்னியாஸ்திரி குற்றம் சாட்டியுள்ளார். இந்த புகாரை வைக்கம் போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தை உரிய முறையில் விசாரிக்கவில்லை என்றும், வழக்கை நீர்த்து போகச்செய்ய போலீசார் … Read more