பீகாரில் பாய்லர் வெடித்து 6 பேர் உயிரிழப்பு!

பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். பீகார் மாநிலம் முஸாபர்பூரில் நூடுல்ஸ் தயாரிப்பு ஆலையில் கொதிகலன் (பாய்லர்) வெடித்து 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும், காயம் அடைந்த மேலும் 6 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளதாகவும் அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. நூடுல்ஸ் தொழிற்சாலையில் இன்று காலை 10 மணியளவில் விபத்து ஏற்பட்டதாக மாவட்ட ஆட்சியர் பிரவன் குமார் தெரிவித்தார்.

டெல்லி மாயாபுரி பகுதியிலுள்ள தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து…!

டெல்லி மாயாபுரி பகுதியிலுள்ள தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  டெல்லியில் உள்ள மாயாபுரி பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ தொழிற்சாலை முழுவதிலும் மளமளவென பரவ தொடங்கியதை அடுத்து தொழிற்சாலையின் பல பகுதிகள் எரிந்து நாசமாகி உள்ளது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இந்நிலையில், இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் … Read more

சீனா: தொழிற்சாலையில் தீ விபத்து! 6 பேர் பலி

சீனாவில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். சீன நாட்டில் உள்ள ஜெஜியாங் மாகாணத்தில் கடற்பாசி தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்து குறித்து அறிவிக்கப்பட்டவுடன் வந்த மீட்புப்படையினர் அங்கிருந்த 6 பேரின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்து தொடர்பாக … Read more

மாஸ்க் இல்லனா ஒன்னும் வாங்க முடியாது! சென்னை மாநகராட்சியின் புதிய விதிமுறைகள்!

சென்னை மாநகராட்சியின் புதிய விதிமுறைகள். தமிழகம்  முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், தமிழகத்தில் அதிகமாக கொரோனா பாதிப்பு உள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இதனையடுத்து, சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிற நிலையில், சென்னை மாநகராட்சி சில விதிகளைப் பட்டியலிட்டுள்ளது. ரேஷன் கடை 200 கார்டுகளை மேல் உள்ள கடைகளை பிரிக்க வேண்டும். கடைகளில், பொதுமக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்ற நடவடிக்கை செய்ய வேண்டும். டோக்கனில் … Read more

இந்தியாவில் தொழிநுட்ப துறையில் 10,000 பேருக்கு மேல் பணிநீக்கம்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் தொழிநுட்ப துறையில் 10,000 பேருக்கு மேல் பணிநீக்கம். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால், கேளாய் எளிய மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல், தொழில் துறைகளும் சரிவை கண்டுள்ளது.  இதனால், பல தொழில்சாலைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், நாஸ்காம் என்ற நிறுவனம் எடுத்த ஆய்வு ஒன்றில், இந்தியாவில் தொழிநுட்பதுறையில் இதுவரை … Read more

தொழிலாளர் பற்றாக்குறை.! 12 மணி நேரம் வேலை.!

மஹாராஷ்டிராவில் தொழிலாளர் பற்றாக்குறையை உள்ள தொழிற்சாலைகளில் 12 மணி நேரம் வரை வேலை செய்ய அனுமதி. இந்தியாவில் கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் அனைத்து மூடப்பட்டது. கொரோனா பாதிப்பு இந்தியாவில் குறையாததால் மூன்றாவது முறையாக மே 17-ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மத்திய அரசு சில தளர்வுகள் கொடுத்து நிபந்தனையுடன் அலுவலகங்கள்,தொழிற்சாலைகள்  இயக்க அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து பல தொழிற்சாலைகள் 50 … Read more

ஆந்திராவில் ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு கசிவு! குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!

ஆந்திராவில் ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இரண்டாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் ஆர்ஆர் வெங்கடபுரம் கிராமத்தில் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை இந்த தொழிற்சாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த விஷவாயு கசிவு அங்கிருந்து 3 கி.மீ தூரத்திற்கு பரவிய நிலையில், இந்த கசிவினால் அப்பகுதிவாசிகள் இடையே, கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து சாலையில் சென்ற … Read more

ரயில் பெட்டி தயாரிப்பில் புதிய சாதனை படைத்தது ஐ.சி.எப். தொழிற்சாலை.!

ரயில்வே அமைச்சர் பியூஸ்கோயல் 2018 – 2019-ம் நிதியாண்டில், ஐ.சி.எப். 215 நாட்களில் 3,250 பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்ததாக கூறியுள்ளார். கடந்த நிதியாண்டில், இதே எண்ணிக்கையில் பெட்டிகள் தயாரிக்க, 289 நாட்கள் ஆனது. சென்னை, பெரம்பூரில் உள்ள, ஐ.சி.எப். தொழிற்சாலை 215 நாட்களில் 3,000 ரயில் பெட்டிகளை தயாரித்து, புதிய சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து ரயில்வே அமைச்சர் பியூஸ்கோயல் தமது டுவிட்டர் பக்கத்தில், கடந்த  2018 – 2019-ம் நிதியாண்டில் ஐ.சி.எப். 3,250 பெட்டிகள் தயாரித்து … Read more

தொழிற்சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் வைக்க வலியுறுத்தல்..,

தேசிய துப்புரவு தொழிலாளர் மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் ஹிர்மானி நேற்று வேலூரில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கோயம்புத்தூர், கன்னியாகுமரி, சென்னை, கிருஷ்ணகிரி என 5 மாவட்டங்களில் முன்மாதிரி திட்டம் தொடங்கப்படுகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் துப்புரவு தொழிலாளருக்கு மாத ஊதியம் ரூ.15 ஆயிரம், குடியிருப்பு, சுகாதாரம், காப்பீடு, குழந்தைகளின் கல்வி போன்ற அடிப்படை தேவைகளை மேற்கொள்வதாகும். இந்த திட்டம் வரும் 2020ம் ஆண்டு நாடு முழுவதும் அமல்படுத்தப்படும். தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைவாக காட்டி மோசடி … Read more