ஆலோசனை குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்த கபில்தேவ்..!

இந்திய அணியில் சமீபகாலமாக இரட்டை பதவி குறித்த பிரச்சனை நடந்து வருகிறது. இதில் சச்சின் , டிராவிட் மற்றும்  கங்குலி போன்ற முன்னாள் வீரர்கள் இந்த சர்ச்சையில் சிக்கினார்.
சமீபத்தில் டிராவிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு டிராவிட் விளக்கமும் கொடுத்தார். இதைத்தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் வீரரும் , ஆலோசனை குழுவிற்கு தலைவராக உள்ள கபில் தேவ் மீது சமீபத்தில் இரட்டை பதவி ஆதாயம் விவகாரம் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இந்நிலையில் கபில் தேவ் ஆலோசனை குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

author avatar
murugan