அகில இந்திய மகிளா காங்கிரஸின் தலைவர் சுஷ்மிதா தேவ் கட்சியில் இருந்து விலகல்…!

அகில இந்திய மகிளா காங்கிரஸின் தலைவர் சுஷ்மிதா தேவ் கட்சியில் இருந்து விலகல்.  அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். முன்னாள் மக்களவை எம்.பியான சுஷ்மிதா  அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இவர், விலகல் கடிதத்தை கட்சித்தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி உள்ளார். கட்சியில் இருந்து இவர் விலக்குவதற்கான காரணங்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கின் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்த பிரசாந்த் கிஷோர்..!

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் ஆலோசகர் பதவியை தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் ராஜினாமா செய்துள்ளார். அடுத்த ஆண்டு பஞ்சாபில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பஞ்சாப் முதல்வரின் ஆலோசகர் பதவியை பிரஷாந்த் கிஷோர் ராஜினாமா செய்துள்ளார்.  பிரசாந்த் கிஷோர் முதல்வர் அமரிந்தர் சிங்குக்கு எழுதிய கடிதத்தில்,  பொது வாழ்கையிலிருந்து சற்று ஓய்வு எடுத்துக்கொள்வதாகவும், உங்கள் முதன்மை ஆலோசகராக என்னால் பொறுப்புகளை ஏற்க முடியவில்லை. இந்த பொறுப்பிலிருந்து என்னை தயவுசெய்து விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அடுத்தகட்டம் குறித்து … Read more

கர்நாடகா முதல்வர் எடியூரப்பா இன்று பதவி விலகல்…?

எடியூரப்பா அவர்கள், கர்நாடகா முதல்வராக பதவியேற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இன்று அவர் பதவி விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  கடந்த 2019-ம் ஆண்டு, ஜூலை 26-ம் தேதி, எடியூரப்பா அவர்கள் கர்நாடகா முதல்வராக பொறுப்பேற்றார். இந்நிலையில், கர்நாடகா முதல்வராக உள்ள எடியூரப்பா அவர்கள், பதவி விலக உள்ளதாக சமீப நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இதுகுறித்து பதிலளித்த அவர், கட்சி மேலிடம் கூறினால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார். வரும் … Read more

கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா குறித்து பரவும் தகவல்..!தொண்டர்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபடவேண்டாம்..!-எடியூரப்பா ட்வீட்

கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா குறித்து தகவல் பரவி வருகிறது. இதனால் தொண்டர்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று எடியூரப்பா ட்வீட் செய்துள்ளார். கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு 75 வயது ஆகிறது. அதனால் பாஜகவின் மேலிடத்திலிருந்து முதல்வர் பதவியிலிருந்து விலகிக்கொள்ள கூறியதாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா அரசு பதவியேற்று ஜூலை 26 ஆம் தேதியுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. தற்போது இவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, பாஜகவின் உண்மையாக தொண்டனாக … Read more

#BREAKING : மேலும் இரண்டு மத்திய அமைச்சர்கள் ராஜினாமா…!

இன்று மாலை 6 மணிக்கு மத்திய அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் நிலையில், மத்திய அமைச்சர்கள் 6 பேர் ராஜினாமா. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இரண்டாவது முறையாக பதவியேற்றதற்கு பிறகு முதல் முறையாக இன்று அமைச்சரவை விரிவாக்கத்துடன் மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், 43 புதிய மத்திய அமைச்சர்களின் பதவியேற்பு விழாவானது இன்று மாலை 6 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் பதவி … Read more

#BREAKING : மத்திய அமைச்சர்கள் 4 பேர் ராஜினாமா…!

இன்று மாலை 6 மணிக்கு ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் நிலையில், மத்திய அமைச்சர்கள் 4 பேர் ராஜினாமா. இன்று மாலை 6 மணிக்கு ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒன்றிய அமைச்சர்களாக புதிய அமைச்சர்கள் இன்று பதவி ஏற்க உள்ளனர். இந்நிலையில், ஒன்றிய அமைச்சர்கள் ரமேஷ் பொக்ரியால், சந்தோஷ் கங்வார், தாவர்சந்த் கெலாட், தபஸ்ரீ சவுத்ரி ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா  செய்துள்ளதாகவும், தங்களது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளதாகவும் … Read more

மத்திய அரசின் கொரோனா தடுப்பு ஆய்வு குழுவின் தலைவர் திடீர் விலகல்…!

மத்திய அரசின் கொரோனா தடுப்பு ஆய்வு குழுவின் தலைவர் ஷாகித் ஜமால் திடீர் விலகல்.  கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸின் மரபணு கூட்டமைப்பின் ஆய்வு மற்றும் ஆலோசனை குழு, நாட்டில் உள்ள 10 முக்கியமான அரசின் ஆய்வகங்களை ஒன்றிணைத்து, கொரோனா தடுப்பு ஆய்வகத்தை உருவாக்கி உள்ளனர். இதற்கு தலைவராக மூத்தவராக ஷாகித் ஜமால் அவர்கள் நியமிக்கப்பட்டார். இவர் அசோகா பல்கலை கழகத்தின் திரிவேதி உயிர் அறிவியல் துறையில் தலைவராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், இந்த குழுவில் … Read more

உ.பி.யில் 16 மருத்துவர்கள் ஒரே நேரத்தில் ராஜினாமா ! உயிரைக்காப்பவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை

டி.எம் & சி.எம்.ஓ ஆல் மனரீதியாக துன்புறுத்தப்பட்டதால் ராஜினாமா சமர்ப்பிப்பு! உத்தரபிரதேசத்தின் உன்னாவோ மாவட்டத்தில் சி.எச்.சி மற்றும் பி.எச்.சி-களின் பொறுப்பாளர்களாக பணிபுரியும் பதினான்கு மருத்துவர்கள் நிர்வாக அதிகாரிகளால் மனரீதியான துன்புறுத்தல் குற்றச்சாட்டில் தங்கள் ராஜினாமாவை சமர்ப்பித்துள்ளனர். ஏனெனில் அவர்கள் அதிகாரிகளால் தண்டனை உத்தரவுகள், அநாகரீகமான நடத்தை மற்றும் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளின் ஒத்துழையாமைக்கு உட்படுத்தப்பட்டனர் இதன்காரணத்தினால் சமுதாய சுகாதார மையங்களின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட 11 மருத்துவர்களும், மாவட்டம் முழுவதும் பல ஆரம்ப சுகாதார மையங்களுக்கு தலைமை தாங்கும் … Read more

அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் ராஜினாமா..!

அசாம் மாநிலத்தின் தற்போதைய முதல்வர் சர்பானந்தா சோனோவால் தனது ராஜினாமா கடிதத்தை அசாம் ஆளுநர் ஜெகதீஷ் முகியிடம் கொடுத்துள்ளார் சமீபத்தில் தமிழ்நாடு, அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், 126 தொகுதிகளை உள்ளடக்கிய அசாம் மாநிலத்தில்  தேர்தலில் 75 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. இதில், 60 தொகுதிகளில் தனித்து வெற்றி பெற்ற பாஜக முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலே தேர்தலை எதிர்கொண்டது. இதனால், முதல்வர் யார் என்பது … Read more

மேற்கு வங்கத்தின் முன்னாள் அமைச்சர் உபேன் பிஸ்வாஸ் ராஜினாமா..!

மேற்கு வங்கத்தின் முன்னாள் அமைச்சரும், சிபிஐ முன்னாள் இயக்குநருமான உபேன் பிஸ்வாஸ் நேற்று திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகினார். அவர் “தனிப்பட்ட காரணங்களுக்காக” விலகுவதாகவும், வேறு எந்த அரசியல் கட்சியுடனும் இணைய விரும்பவில்லை என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார். “எனது முடிவை கட்சியின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் தெரிவித்தேன். எட்டு கட்ட தேர்தல்களுக்கு முன்னதாக நான் விலகுகிறேன். ஏனென்றால் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர் கட்சியை விட்டு வெளியேறுவதாக யாரும் குற்றம் சாட்டுவதை நான் விரும்பவில்லை … Read more