அதிமுகவின் ஆலோசனை கூட்டம் – ஓபிஎஸ் அறிவிப்பு

வரும் 21-ஆம் தேதி அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்.  அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக ஓபிஎஸ் அறிவிப்பு. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல் ஆலோசகர் திரு. பண்ருட்டி … Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணையை மாற்றவேண்டும் – ஓபிஎஸ்

காலி பணியிடங்களுக்கு ஏற்ப 2023ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணையை மாற்றவேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கை. அரசு துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதில் தமிழக அரசு தாமதிப்பது கண்டனத்துக்குரியது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீசெல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அரசுத் துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும் இரண்டு வாக்குறுதிகள் தி.மு.க.வின் தேர்தல் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக … Read more

முதல்வர் மு.க.ஸ்டாலினை பற்றி பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு யோகிதை இல்லை.! கோவை செல்வராஜ் ஆவேசம்.!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் ஆட்சியை குறை கூறுவகற்கு, நகர்ந்து ஊர்ந்து முதல்வர் பதவியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி விமர்சிக்க எந்த யோகிதையும் கிடையாது. – கோவை செல்வராஜ் விமர்சனம்.  முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகிய கோவை செல்வராஜ் தனது ஆதரவாளர்களுடன் இன்று திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து, அவர் முன்னிலையில் கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்தார். திமுகவில் இணைந்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், … Read more

இபிஎஸ் உறுதிமொழியை தொடர்ந்து ஜெ. நினைவிடத்தில் ஓபிஎஸ் உறுதிமொழி.! தொண்டர்களை ஒருங்கிணைப்போம்…

ஜெயலலிதா நினைவிடத்தில் ‘தொண்டர்களை ஒன்றிணைப்போம். அதிமுகவை வெற்றியடைய செய்வோம். ‘ என ஓபிஎஸ் தரப்பினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இன்று காலை முதலே சென்னை, மெரினாவில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் பலர் வந்து தங்கள் அஞ்சலியை செலுத்திவிட்டு செல்கின்றனர். காலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அடுத்ததாக தொண்டர்களுடன் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். எதிரிகள் … Read more

அனைத்துக்கட்சி கூட்டம்.! இபிஎஸ்க்கு அழைப்பு.. ஓபிஎஸ்க்கு அழைப்பு இல்லை.! ஜெயக்குமார் விமர்சனம்.!

அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்கிற முறையில் இபிஎஸிற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஓபிஎஸிற்கு அழைப்பில்லை. – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.  இந்தியா தலைமையில் இந்த வருடம் நடைபெறும் ஜி20 மாநாடு பற்றி கலந்தாலோசனை செய்வதற்கு இந்தியா முழுவதும் உள்ள பிரதான கட்சிகளுக்கு அழைப்பு விளக்கப்பட்டது. இந்த அனைத்துக்கட்சி கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் திமுகவுக்கு அழைப்பு வந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ள … Read more

தாயின் வாக்கினை நிறைவேற்ற அனைவரும் ஒற்றுமையோடு உழைப்போம் – ஓபிஎஸ்

எனக்கு பின்னாலும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அஇஅதிமுக மக்களுக்காகவே இயங்கும் என ஓபிஎஸ் ட்வீட்.  இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, அவரது நினைவிடத்தில் ஈபிஎஸ் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து, ஓபிஎஸ், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தவுள்ளனர். இந்த நிலையில், ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கழகத்திற்காகவும் மக்களுக்காகவும் தன்னையே அர்ப்பணித்த இதயதெய்வம் … Read more

பிரதமர் வந்து ஒருவாரம் ஆன பின்னர் காவல்துறை மீது ஏன் இந்த குற்றசாட்டு.? டி.டி.வி.தினகரன் கேள்வி.!

தமிழகத்தில் காவல்துறையினை சுதந்திரமாக செயல்பட வைக்க வேண்டும். பிரதமர் வந்து ஒருமாதம் ஆன பின்னர் ஏன் அண்ணாமலை இந்த குற்றசாட்டை முன் வைத்தார் என தெரியவில்லை. – டிடிவி.தினகரன் குற்றசாட்டு. தமிழகத்தில் காவல்துறையினை சுதந்திரமாக செயல்பட வைத்து அதன் மீதான கரையை துடைக்க முதல்வர் தான் அனுமதி தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை அமமுக தலைவர் டி.டி.வி.தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ பிரதமர் வந்து ஒருமாதம் ஆன பின்னர் ஏன் அண்ணாமலை … Read more

முன்னுக்கு பின் முரணாக செய்வதுதான் திராவிட மாடல் போலும் – ஓபிஎஸ்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொழிற்பூங்கா என்ற பெயரில் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் ஆணையை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி ஓபிஎஸ் அறிக்கை.  கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொழிற்பூங்கா என்ற பெயரில் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் ஆணையை உடனடியாக திரும்பப் பெற கோரி திமுக அரசை வலியுறுத்தி ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் வகையில், விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் விளை நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதைத் தடுத்திடவும்; புஞ்சை நிலங்களையும், தரிசு நிலங்களையும், தகுந்த விளைச்சல் … Read more

மின் நுகர்வோர்களை திமுக அரசு துன்புறுத்தும் செயல் கடும் கண்டனத்திற்குரியது! – ஓபிஎஸ்

ஆதார் எண் இணைப்பிற்கான கால அவகாசத்தை ஆறு மாத காலம் நீட்டிப்பதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு ஓபிஎஸ் அறிவுறுத்தல்.  தமிழகத்தில் இலவச மின்சாரம், மானிய மின்சாரம் பெறும் நுகர்வோர்கள் தங்களின் ஆதார் எண்ணை மிக நுகர்வோர் எண்ணுடன் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது, ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் கட்டணம் செலுத்தும் நாளிலிருந்து 2 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பது குறித்த அவசியத்தை … Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு.! ஓபிஎஸ் தரப்பு வாதத்தை ஏற்றது உச்சநீதிமன்றம்.!

அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கில் ஓபிஎஸ் தரப்பு வாதத்தை ஏற்று வழக்கு வரும் நவம்பர் 30ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.  கடந்த ஜூலை மாதம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்து இருந்தது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் இந்த மேல்முறையீட்டு மனுவை அளித்து இருந்தனர். இதில் கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையில் இபிஎஸ் தரப்பு பதில் அளித்து இருந்ததால், … Read more