பிரதமர் வந்து ஒருவாரம் ஆன பின்னர் காவல்துறை மீது ஏன் இந்த குற்றசாட்டு.? டி.டி.வி.தினகரன் கேள்வி.!

தமிழகத்தில் காவல்துறையினை சுதந்திரமாக செயல்பட வைக்க வேண்டும். பிரதமர் வந்து ஒருமாதம் ஆன பின்னர் ஏன் அண்ணாமலை இந்த குற்றசாட்டை முன் வைத்தார் என தெரியவில்லை. – டிடிவி.தினகரன் குற்றசாட்டு. தமிழகத்தில் காவல்துறையினை சுதந்திரமாக செயல்பட வைத்து அதன் மீதான கரையை துடைக்க முதல்வர் தான் அனுமதி தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை அமமுக தலைவர் டி.டி.வி.தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ பிரதமர் வந்து ஒருமாதம் ஆன பின்னர் ஏன் அண்ணாமலை … Read more

காவல்துறை மீது பொய் குற்றசாட்டு வைத்தால் கடும் நடவடிக்கை.! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

காவல்துறை மீது பொய்யான குற்றசாட்டு வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.     காவல்துறை மீது பொய்யான குற்றசாட்டு வைத்தால், அந்த குற்றசாட்டு ஆதாரம் இல்லாமல் சுமத்தப்பட்டால் குற்றம் சுமத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.   காவல்துறையினருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டால் அதன் உண்மை தன்மை அறிந்து, ஆராய்ந்து செயல்பட வேண்டும் எனவும் உஉயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல, காவல்துறையினர் சுதந்திரமாகவும், நியாயமாகவும் செயல்பட வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தமிழக காவல்துறை மரியாதையுடன் அவ்வை நடராஜனுக்கு இறுதி சடங்கு.!

மறைந்த தமிழறிஞர் அவ்வை நடராஜன் அவர்களின் இறுதி சடங்கு , காவல் துறை மரியாதையுடன் மயிலாப்பூர் மயானத்தில் நடைபெற்றது.  தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் பிரபல தமிழறிஞருமான அவ்வை நடராஜன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக நேற்று சென்னையில் அவரது இல்லத்தில் காலமானார். அவரது இறப்புக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை அண்ணாநகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் , பல அரசியல் தலைவர்கள், … Read more

மங்களூரு குண்டு வெடிப்பு.! விசாரணை குறித்து பரவிய தவறான தகவல்.! வெளியான உண்மை நிலவரம்.!

மங்களூரு குக்கர் வெடிப்பு  சம்பந்தமாக மைசூரில் 2 பேரிடமும், கோவையில் ஒருவரிடமும்  விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. – கர்நாடக ஏடிஜிபி தகவல். 2 நாட்களுக்கு முன்னர்கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில்  குக்கர் குண்டு வெடித்து விபத்து ஏற்பட்டது. அதில் ஆட்டோ ஓட்டுனரும், பயணித்தவரும் படுகாயமடைந்தனர். அது குறித்து கர்நாடக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், தமிழகத்தில் உதகையில் ஒருவரிடமும், நாகர்கோவிலில் ஒருவரிடமும் சிம் கார்டு வாங்கியது மற்றும், அதில் தொடர்பு கொண்டது தொடர்பாக … Read more

கோவை கார் வெடிப்பு எதிரொலி.! தமிகத்தில் தீவிரவாத தடுப்பு சிறப்பு பிரிவு வெகு விரைவில்…

கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழக காவல்துறையில் தீவிரவாத தடுப்பு பிரிவு எனும் சிறப்பு பிரிவு உருவாக்கப்பட தொடக்க பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 23ஆம் தேதி கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்த விசாரணையில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் தீவிரவாத தொடர்பு இருப்பதாக சந்தேகம் இருந்ததை தொடர்ந்து முதல்வர் பரிந்துரையின் … Read more

கார் வெடி விபத்து.! கோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர சோதனை.!

கார் சிலிண்டர் வெடி விபத்து தொடர்பாக கோவை உக்கடத்தில் முகமது உசேன் என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையினை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மாதம் அக்டோபர் 23ஆம் தேதி கோவை உக்கடத்தில் கார் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பான விசாரணையில் முபின் வீட்டிலிருந்து 76 கிலோ வேதிப்பொருட்கள் போலீசார் சோதனையில் கைப்பற்றப்பட்டன. பின்னர் , இவருக்கு உதவியதாக 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருக்கின்றனர். இந்த … Read more

ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி..!

நவம்பர் 6-ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, தமிழகத்தில் அக்டோபர் 2-ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 6-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி அளித்தும், அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் பேரணி நடத்த ஆர்எஸ்எஸ்-க்கு காவல்துறை அனுமதி கொடுக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில், நவம்பர் 6ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. … Read more

சென்னை அரசு மருத்துவமனையில் கஞ்சா பறிமுதல்..!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில், போலீசார் 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுப்பதற்காக தமிழக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்வதோடு அவர்களிடம் இருந்து கஞ்சாக்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில், போலீசார் 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக … Read more

3,552 காலிப் பணியிடங்கள்…சீருடைப் பணியாளர் தேர்வு – இன்று அறிவிப்பு வெளியீடு!

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 3,552 சீருடைப் பணியாளர் பணியிடங்களுக்கான நேரடித் தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் இன்று வெளியிடுகிறது.அதன்படி,இரண்டாம் நிலைக் காவலர்,சிறைக் காவலர்,தீயணைப்பு வீரர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு இன்று வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து,https://www.tnusrb.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணைய தளம் மூலமாக ஜூலை 7 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,முதல் முறையாக தமிழ் மொழி தகுதித் தேர்வை நடத்தவுள்ளதாக தமிழ்நாடு … Read more

இதை தான் என் கடைசி ஆயுதமாக பயன்படுத்துகிறேன் – டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு வீடியோ அனுப்பிய காவலர்..!

தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்களுக்கு வீடியோ வெளியிட்ட தமிழக காவலர்.  தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்களை பார்த்து குறைகளை களைய முயன்ற காவலருக்கு, டிஜிபியை நேரில் பார்க்க வாய்ப்பு மறுக்கப்பட்டதால், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தான் 2016-ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில் இணைந்ததாகவும், தன்னுடைய குறைகளை கூற, டிஜிபி முகாம் அலுவலகத்திற்கு பலமுறை  வந்ததாகவும், ஆனால்,அலுவலர்கள் ஏதாவது ஒரு காரணத்தை கூறி சந்திக்க அனுமதிப்பதில்லை. எனவே, இந்த வீடியோவை … Read more