#BREAKING: மராட்டிய எம்.பி நவ்நீத் ராணா, எம்.எல்.ஏ. ரவி ராணா கைது!

மராட்டிய எம்பியும், நடிகையுமான நவ்நீத் ராணா மற்றும் அவரது கணவர் எம்.எல்.ஏ. ரவி ராணா ஆகிய இருவரும் 153 ஏ பிரிவின் கீழ் மும்பை காவல்துறை கைது செய்துள்ளது. மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வீட்டின் முன் அனுமன் பாடல்களை பாடப்போவதாக நவ்நீத் ராணா அறிவித்திருந்தார். இந்த நிலையில், நவ்நீத் ராணா வீட்டின் முன்பு சிவசேனா கட்சியினர் போராட்டம் நடத்திய நிலையில், தற்போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத வழிபாட்டுத் தலங்களில் உரிய அனுமதியுடன் மட்டுமே ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும் – மகாராஷ்டிரா அரசு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மசூதிகளில் சத்தமாக ஒலிபெருக்கிகளை ஒலிக்கக் கூடாது எனவும், அவ்வாறு மசூதிகளில் ஒலிபெருக்கிகள் அதிக சத்தத்துடன் ஒலிக்கப்பட்டால், மசூதி வாசலில் ஹிந்து பாடல்கள் ஒலிக்கும் ஒலிபெருக்கிகள் வைக்கப்படும் என MNS தலைவர் ராஜ் தாக்கரே அவர்கள் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இனி மத வழிபாட்டு தலங்களில் உரிய அனுமதி பெற்று மட்டுமே ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும் என மகாராஷ்டிர அரசு அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சற்று முன்…சமூக நீதித்துறை அமைச்சர் மருத்துவமனையில் திடீர் அனுமதி !

மகாராஷ்டிரா மாநிலத்தின் சமூக நீதித்துறை அமைச்சரும் NCP தலைவருமான தனஞ்சய் முண்டே மாரடைப்பால் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து,அமைச்சர் தனஞ்சய் முண்டேவை மருத்துவமனையில் சந்தித்த பிறகு மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் கூறுகையில்:”அவர் மயங்கியதால்,உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.தற்போது கவலைப்படத் தேவையில்லை. மாலைக்குள் அமைச்சர் தனஞ்சய் முண்டே ஐசியூவில் இருந்து மாற்றப்படுவார்”,என்று தெரிவித்துள்ளார். Maharashtra’s Social Justice Minister and NCP leader Dhananjay Munde admitted to Breach Candy … Read more

வைரல் வீடியோ:வானில் தெரிந்த அரிய நிகழ்வு – எங்கு தெரியுமா?.!

மகாராஷ்டிரா: நாக்பூர் மற்றும் மாநிலத்தின் பல பகுதிகளில் வானத்தில் விண்கல் தெரிந்ததாக தகவல். மகாராஷ்டிராவின் நாக்பூர் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் ஜபுவா, பர்வானி மாவட்டங்களில் மக்கள் நேற்று(சனிக்கிழமையன்று) ஒரு தனித்துவமான வான நிகழ்வை நேரில் கண்டுள்ளனர்.நேற்று மாலை 7.30 முதல் 8.45 வரை வானில் பலத்த வெளிச்சத்துடன் கீழே விழுந்த விண்கல் மக்களின் கவனத்தை ஈர்த்தது. வைரல் வீடியோ: இந்த விண்கல் விழுந்த அரிய நிகழ்வை மக்கள் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர்.தற்போது இந்த வீடியோ … Read more

#BREAKING: மகாராஷ்டிரா – ஏப்ரல் 2 முதல் மாஸ்க் அணிய தேவையில்லை!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளை மறுநாள் முதல் மாஸ்க் அணிய தேவையில்லை என அம்மாநில அரசு அறிவிப்பு. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் அனைத்து விதமான கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, முகக்கவசம் அணிவது கட்டாயம் என்பது உள்ளிட்ட அனைத்து விதமான கட்டுப்பாடுகளையும் விலக்கிக்கொள்வதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 183 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக … Read more

#Breaking:10 அமைச்சர்கள்,20 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி – துணை முதல்வர் தகவல்!

மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்கள்,20 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வரும் நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 22,775 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்,மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்கள்,20 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் தகவல் தெரிவித்துள்ளார். சட்டப் பேரவை கூட்டத்தொடரை முன்னிட்டு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அமைச்சர்கள்,எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று … Read more

ஓமைக்ரான் மத்தியில் 19 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி..!

மகாராஷ்டிராவில் ஒரு பள்ளியில் கடந்த 3-4 நாட்களாக 19 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயாவில் கடந்த 3-4 நாட்களாக 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர போசலே தெரிவித்துள்ளார். இந்த பள்ளியில் 5 முதல் 12 ஆம் வகுப்பு வரை 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மீதமுள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத … Read more

மினி ஜீப்புக்கு பதிலாக பொலிரோ காரை தருகிறேன் – ஆனந்த் மஹிந்திரா

ரூ.60,000 முதலீட்டில் மினி ஜீப்பை உருவாக்கிய நபரை பாராட்டிய மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தத்தாத்ராய லோகர் என்ற நபர் பழைய கார் மற்றும் இரு சக்கர வாகனங்களின் உதிரி பாகங்களை கொண்டு தனது மகனின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக ரூ.60,000 ஒரு மினி ஜீப்பை உருவாக்கியுள்ளார். இவரது ஜீப் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது. இதனை பார்த்த பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மினி ஜீப்பை … Read more

#BREAKING: மகாராஷ்டிராவில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான்!

நாடு முழுவதும் ஒமிக்ரானால் வகை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36 லிருந்து 37 ஆக உயர்வு. மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் முதல் முறையாக நாக்பூரை சேர்ந்த 40 வயது நபருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேற்கு ஆப்ரிக்காவில் இருந்து வந்துள்ளதாக முதற்க்கட்ட தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதனால் இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 37-ஆக அதிகரித்துள்ளது என்பது … Read more

மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி …!

மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், நாட்டில் மொத்த பாதிப்பு 32 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து தற்போது தென் ஆப்பிரிக்காவில் ஓமைக்ரான் கொரோனா வகையாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இது பரவியுள்ள நிலையில், முன்னதாக 25 பேர் நாடு முழுவதும் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும்  … Read more