நடிகர் துல்கர் சல்மானுக்கு கொரோனா தொற்று உறுதி!

மலையாள நடிகர் மம்முட்டியின் மகனான துல்கர் சல்மானுக்கு கொரோனா தொற்று உறுதி. தந்தையைப் போல ஸ்டார் அந்தஸ்தில் தமிழ், மலையாளத்தில் ஜொலித்து வரும் நடிகர் துல்கர் சல்மானுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகர் துல்கர் சல்மான் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் தனிமைப்படுத்துக் கொண்டதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், இந்த தொற்றுநோய் இன்னும் முடிவுக்கு … Read more

#BREAKING: நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா தொற்று!

நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல். டெல்லி நாடாளுமன்ற ஊழியர்கள் 1,409 பேருக்கு பரிசோதனை நடத்தியதில் 402 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 4-ஆம் தேதி எடுக்கப்பட்ட பரிசோதனையில் 402 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான ஊழியர்களின் மாதிரிகள் ஓமைக்ரான் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தாண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், 402 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர் கலந்தாய்வு ஒத்திவைப்பு!

ஆதிதிராவிடர் நலத்துறை ஆசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு. இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை நடைபெறவிருந்த ஆதி திராவிட நலத்துறை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் / காப்பாளர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக ஆதி திராவிட நலத்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.

#BREAKING: 5 மாநில தேர்தல் தேதி இன்று பிற்பகல் அறிவிப்பு!

5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இன்று அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால், 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுமா என்று சந்தேகம் எழுந்த நிலையில், திட்டமிட்டபடி தேர்தல் நடத்துகிறது தேர்தல் ஆணையம். அதன்படி, உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு வெளியாகும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தின் … Read more

#BREAKING: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் மூடல்!

தமிழகத்தில் மதுபான கடைகள் ஜனவரி 15, 18, 26 -ஆம் தேதிகளில் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் ஜனவரி 15, 18, 26 -ஆம் தேதிகளில் மூடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 15 – திருவள்ளூர் தினம், 18 – வடலூர் ராமலிங்கர் நினைவுநாள், 26 – குடியரசு தினம் என்பதால் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் இந்த 3 நாட்கள் செயல்படாது என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சிறுமியின் 6 மாத கருவை கலைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி!

17 வயது சிறுமியின் 6 மாத கருவை கலைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி வழங்கியுள்ளது.  17 வயது சிறுமியின் 6 மாத கருவை கலைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி வழங்கியுள்ளது. சிறுமியின் சம்மதத்துடன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் கருவை கலைக்க நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். வாடிப்பட்டி காவல் ஆய்வாளர் வழக்கை விசாரித்து 2 மாதங்களில் இறுதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தடய அறிவியல் சோதனை மூலம் கர்ப்பத்துக்கு காரணமானவரை உறுதி செய்ய வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற … Read more

மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி? – தமிழக அரசு ஆலோசனை!

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பனி வழங்குவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்போவதாக தமிழக அரசு தகவல். அதிமுக ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட 13,500 மக்கள் நலப்பணியாளர் பிரச்சனை குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது. மக்கள் நலப்பணியாளர்கள் பிரச்சனை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்போவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொள்கை முடிவு தொடர்பாக ஆலோசனைகளுக்கு நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளது. இதனால் மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பனி வழங்குவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்போவதாக … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட தடையுமில்லை – உயர் நீதிமன்றம்

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட எந்த தடையுமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட எந்த தடையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 15 மாநகராட்சிகளில் உள்ள 1,064 வார்டுகள், 121 நகராட்சிகளில் உள்ள 3,468 வார்டுகள், 528 பேரூராட்சிகளில் உள்ள 8,288 வார்டுகள் ஆகியவற்றுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

கோவாவில் பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு!

கோவா மாநிலத்தில் ஜன.26-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை மூட அம்மாநில அரசு உத்தரவு. கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக கோவாவில் இன்று முதல் 26-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கோவாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என மாநில அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இரவுநேர … Read more

மதிமுக இளைஞர் அணி செயலாளராக ப.த.ஆசைத்தம்பி நியமனம்!

மதிமுக இளைஞர் அணி செயலாளராக ப.த.ஆசைத்தம்பியை நியமனம் செய்து பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணி மாநிலத் துணைச் செயலாளர் ப.த.ஆசைத்தம்பி அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, மாநில இளைஞர் அணிச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். அதன்படி, மதிமுக இளைஞர் அணி செயலாளராக ப.த.ஆசைத்தம்பியை நியமித்து பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். மேலும், மதிமுக மாணவர் அணி மாநில துணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து ஆசைத்தம்பி விடுவிக்கப்பட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.