மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் ஓடும் ஆட்டோவில் இருந்து சிறுமி குதிக்கும் வைரல் வீடியோ.!

மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் ஓடும் ஆட்டோவில் இருந்து சிறுமி குதிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் ஓடும் ஆட்டோவில் இருந்து சிறுமி குதித்துள்ளார், ஆட்டோ ஓட்டுநர் தன்னிடம் துஷ்பிரயோகம் செய்ய முயன்றதால், தற்காத்துக் கொள்ள ஓடும் வாகனத்திலிருந்து வெளியில் குதித்ததாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநர் சையத் அக்பர் ஹமீது, கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில், தலையில் காயம் அடைந்த பாதிக்கப்பட்ட சிறுமி, இங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். … Read more

மஹாராஷ்டிராவில் புதிய அமைச்சரவை… புதிய முதல்வர்.. 18 அமைச்சர்கள் பதவியேற்பு.!

மஹாராஷ்டிராவில் புதிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டேதலைமையில் 18 எம்.எல்.ஏக்கள் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்கின்றனர். மஹாராஷ்டிராவில் தற்போது ஏகப்பட்ட அரசியல் அதிரடி நகர்வுகள் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நடைபெற்று சற்று ஓய்ந்துள்ளது என்றே கூறவேண்டும். சிவ சேனா கட்சி இரண்டாக பிரிந்து இதற்கு முன்னர் முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே மற்றும், ஏக்நாத் ஷிண்டே என அணிகளாக மாறியது. இதில் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களுடன், பாஜக எம்.எல்.ஏக்களுடன் கூட்டணி அமைந்து மஹாராஷ்டிராவில் ஆட்சியை கைப்பற்றினார். மஹாராஷ்டிரா புதிய … Read more

ஓபிசி பிரிவுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு… உச்சநீதிமன்றம் தீர்ப்பு.. தேர்தல் வேலைகள் தீவிரம்..

மஹாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் இடஒதுக்கீடு சம்பந்தமாக எழுந்த பிரச்சனை உச்சநீதிமன்றம் வரை சென்றது. இந்த விவகாரத்தில், தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஓபிசி பிரிவினருக்கு உள்ளாட்சி தேர்தலில் 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி தீர்ப்பளித்தது. இதனை மஹராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே  மற்றும் துணை முதல்வர் தேவேந்திர … Read more

மஹாராஷ்டிராவில் காருடன் தீவைத்து கொண்டு தற்கொலைக்கு முயன்ற குடும்பம்

நிதி நெருக்கடி காரணமாக தந்தை, தாய் மற்றும் மகன் தற்கொலை முயற்சி உயிர்பிழைத்த-தாய் மற்றும் மகன். மஹாராஷ்டிரா: நேற்று(ஜூலை19) நாக்பூரில் 58 வயது நபர் ஒருவர், தனது மனைவி மற்றும் மகன் மூவரும் காரில் இருந்தபோது தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர்.இச்சம்பவத்தில் அந்த நபர் உயிரிழந்துவிட்டார். அவரின் மனைவி(55) மற்றும் மகன்(30) பலத்த தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அந்த நபரின் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட தற்கொலைக் கடிதத்தில், நிதி நெருக்கடி காரணமாக அவர் … Read more

வைரல் வீடியோ:வானில் தெரிந்த அரிய நிகழ்வு – எங்கு தெரியுமா?.!

மகாராஷ்டிரா: நாக்பூர் மற்றும் மாநிலத்தின் பல பகுதிகளில் வானத்தில் விண்கல் தெரிந்ததாக தகவல். மகாராஷ்டிராவின் நாக்பூர் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் ஜபுவா, பர்வானி மாவட்டங்களில் மக்கள் நேற்று(சனிக்கிழமையன்று) ஒரு தனித்துவமான வான நிகழ்வை நேரில் கண்டுள்ளனர்.நேற்று மாலை 7.30 முதல் 8.45 வரை வானில் பலத்த வெளிச்சத்துடன் கீழே விழுந்த விண்கல் மக்களின் கவனத்தை ஈர்த்தது. வைரல் வீடியோ: இந்த விண்கல் விழுந்த அரிய நிகழ்வை மக்கள் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர்.தற்போது இந்த வீடியோ … Read more

மாதம் ரூ.12 லட்சம் வருமானம் புனேவில் டீக்கடை வைத்து சம்பாதிக்கும் நபர்!

டீக்கடை வைத்திருக்கும் நபர் ஒருவர் மஹாராஷ்டிராவின் புனேவில், மாதம் 12 லட்சம் ரூபாய் சம்பாதிப்பதாகத் தெரிவித்துள்ளார். யெவ்லே டீ ஹவுஸ் (Yewle Tea House) என்ற கடையின் உரிமையாளர் நவ்னத் யெவ்லே என்பவர் தமது டீக்கடைத் தொழிலை சர்வதேச அளவில் விஸ்தரிக்கப்போவதாகக் கூறியுள்ளார். பிரதமர் மோடி குறிப்பிட்ட பக்கோடா தொழிலை சுட்டிக்காட்டிய அவர் டீக்கடைத் தொழிலிலும் வேலைவாய்ப்பு உண்டு எனக் குறிப்பிட்டுள்ளார். தமது 3 கடைகளின் மூலம் மாதம் 12 லட்சம் ரூபாய் வருவாய் வருவதாகவும், ஒவ்வொரு கடையிலும் … Read more