மஹாராஷ்டிராவில் புதிய அமைச்சரவை… புதிய முதல்வர்.. 18 அமைச்சர்கள் பதவியேற்பு.!

மஹாராஷ்டிராவில் புதிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டேதலைமையில் 18 எம்.எல்.ஏக்கள் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்கின்றனர்.

மஹாராஷ்டிராவில் தற்போது ஏகப்பட்ட அரசியல் அதிரடி நகர்வுகள் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நடைபெற்று சற்று ஓய்ந்துள்ளது என்றே கூறவேண்டும்.

சிவ சேனா கட்சி இரண்டாக பிரிந்து இதற்கு முன்னர் முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே மற்றும், ஏக்நாத் ஷிண்டே என அணிகளாக மாறியது.

இதில் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களுடன், பாஜக எம்.எல்.ஏக்களுடன் கூட்டணி அமைந்து மஹாராஷ்டிராவில் ஆட்சியை கைப்பற்றினார். மஹாராஷ்டிரா புதிய முதல்வராகவும் பதவியேற்றார்.

ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பொறுப்பேற்று ஒரு மாதம் கடந்த நிலையில் இன்று அவர் தலைமையில் 18 எம்.எல்.ஏக்கள் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்கின்றனர்.

சந்திரகாந்த் பாட்டீல், ராதாகிருஷ்ண விகே பாட்டீல், சுதிர் முங்கந்திவார், சுரேஷ் காடே, கிரிஷ் மகாஜன், ரவீந்திர சவான், மங்கள் பிரபாத் லோதா, விஜய்குமார் காவிட், அதுல் சேவ், தாதா பூசே, ஷம்புராஜ் தேசாய், சந்தீபன் பூமாரே, உதய் சமந்த், தனாஜி சாவந்த், தீபக் அப்துல் சத்தார், கேசர்கர், குலாப்ராவ் பாட்டீல் மற்றும் சஞ்சய் ரத்தோட் ஆகியோர் தான் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment