மினி ஜீப்புக்கு பதிலாக பொலிரோ காரை தருகிறேன் – ஆனந்த் மஹிந்திரா

ரூ.60,000 முதலீட்டில் மினி ஜீப்பை உருவாக்கிய நபரை பாராட்டிய மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தத்தாத்ராய லோகர் என்ற நபர் பழைய கார் மற்றும் இரு சக்கர வாகனங்களின் உதிரி பாகங்களை கொண்டு தனது மகனின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக ரூ.60,000 ஒரு மினி ஜீப்பை உருவாக்கியுள்ளார். இவரது ஜீப் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது.

இதனை பார்த்த பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மினி ஜீப்பை பார்த்து வியந்த ஆனந்த் மஹிந்திரா, தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு பாராட்டு தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், இந்த மினி ஜீப் தெளிவான விதிமுறைகளை பூர்த்தி செய்யாமல் உருவாக்கப்பட்டு இருக்கலாம். இதனால் இயக்க தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.

ஆனால், நம் மக்களின் புத்தி கூர்மை மற்றும் திறன்களைப் பாராட்டுவதை நான் ஒருபோதும் நிறுத்த மாட்டேன். இதனால் மினி ஜீப்பை தான் தருவதாகவும், அதற்கு பதிலாக மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ காரை வழங்குவதாகவும் கூறியுள்ளார். மேலும், மஹிந்திரா ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்த மினி ஜீப் பார்வைக்காக வைக்கப்படும் என்றும் ஆனந்த் மஹிந்திரா பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்