#Breaking:10 அமைச்சர்கள்,20 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி – துணை முதல்வர் தகவல்!

மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்கள்,20 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வரும் நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 22,775 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்கள்,20 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் தகவல் தெரிவித்துள்ளார்.

சட்டப் பேரவை கூட்டத்தொடரை முன்னிட்டு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அமைச்சர்கள்,எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக,செய்தியாளர் சந்திப்பில் அஜித் பவார் கூறியதாவது:

“மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்கள் மற்றும் 20 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்தால்,அரசாங்கம் மேலும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியிருக்கும் என்று கூறினார்.

மகாராஷ்டிராவில் ஜனவரி 15 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.