2020இல் இறந்தவர் பெயரில் கூட பயிர்க்கடன்.! 244 கரூர் விவசாயிகளுக்கு வந்த குளறுபடி தகவல்.!

கரூர் குளித்தலையில் பயிர்க்கடன் வாங்காத 244 விவசாயிகளுக்கு கடன் பெற்றதாக தகவல் சென்றுள்ளது. மேலும், இறந்தவர் ஒருவரும் கடன் வாங்கியதாக தவறுதலாக பதியப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை துணை பதிவாளர் அலுவலகத்தில் இருந்து, பயிர்க்கடன் பெறாத 244 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் பெற்றதாகவும், அதற்கான விசாரணைக்கு நேரில் வர வேண்டும் எனவும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்மன்னில் மேலும் ஒரு குளறுபடி என்னவென்றால், திருச்சி மாவட்டம் போதவூரை சேர்ந்த தவசு என்பவர் கடந்த 2020ஆம் ஆண்டே உயிரிழந்துவிட்டார். ஆனால், … Read more

4 பேர் உயிரிழப்பு.! 15 நாட்களுக்குள் கட்டடத்தை இடிக்க மாநகராட்சி அதிரடி உத்தரவு.!

கட்டடம் கட்டும் போது செப்டிக் டேங்கில் இருந்து விஷ வாயு தாக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த சம்பந்தப்பட்ட கட்டடம் முழுதாக இடிக்க கரூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.    கரூர் மாவட்டம் சுக்காலியூர், காந்தி நகர் பகுதியில் குணசேகரன் என்ற வழக்கறிஞர் வீடு கட்டி வந்துள்ளார். அப்போது செப்டிக் டேங்க் கட்டி முடிக்கப்பட்டு , அதன் உள்ளே இருக்கும் சவுக்கு கம்புகளை அவிழ்க்க, உள்ளே சென்ற தொழிலாளர்கள் 4 பேர் உள்ளே விஷ … Read more

#BREAKING: கரூரில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு!

கரூரில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு. கரூர் செல்லாண்டிபாளையம் பகுதியில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். செல்லாண்டிபாளையம் பகுதியில் வீடு கட்டுமான பணி நடைபெற்று வரும்போது கழிவுநீர் தொட்டியில் இறங்கி வேலை செய்தபோது விஷவாயு தாக்கி சிவா, மோகன்ராஜ் உள்ளிட்ட 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.  

அண்ணாமலை உள்பட பாஜகவினர் 1,800 பேர் மீது வழக்குப்பதிவு!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட 1,800 பேர் மீது வழக்குப்பதிவு. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட 1,800 பேர் மீது கரூர் காவல் நிலையத்தில் வாள்குபதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாவட்ட பாஜக சார்பில் நேற்று கரூர் பேருந்து நிலையம் அருகே மின்கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் நடந்தது. சட்டவிரோதமாக பொது இடத்தில் கூடுதல், பொது சாலையை மறித்து இடையூறு செய்தல் உள்ளிட்ட பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூரில் புதிய விமான நிலையம் அமைக்க கோரிக்கை – அமைச்சர் தங்கம் தென்னரசு

கரூரில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பாக மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தல். டெல்லியில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்திய சிந்தியாவை, தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து இன்று ஆலோசனை மேற்கொண்டார். சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது தொடர்பான இடத்தை இறுதி செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த ஆலோனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் விரிவாக்கம் செய்யும் … Read more

#BREAKING: நெடுஞ்சாலைத்துறையில் ஊழல் – பொறியாளர் உள்பட 4 பேர் சஸ்பெண்ட்!

கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையில் ரூ.3 கோடி ஊழல் என எழுந்த புகாரில் 4 பேர் பணியிடை நீக்கம். கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையில் ரூ.3 கோடி ஊழல் என எழுந்த புகாரில் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நெஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சத்யபாமா, உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் பூபாலன் சிங், கரூர் கோட்டை கணக்கர் பெரியசாமி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சாலை போடாமல் போடப்பட்டதாக கூறி அதிகாரிகள் துணையுடன் பணத்தை முறைகேடு செய்ததாக … Read more

முதல்வரை விமர்சித்து ட்வீட்! – பாஜக பிரமுகர் அதிரடி கைது

தமிழநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து ட்விட்டரில் அவதூறாக பதிவிட்டதாக கூறி கரூர் பாஜக பிரமுகர் விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திமுக தகவல் தொழில்நுட்ப அணி புகாரின் பேரில் முனியப்பனூர் வீட்டில் விக்னேஷை போலீசார் கைது செய்தனர்.

தினசரி சுங்க வசூல் ரத்து.. ரூ.1000 வருவாய் – வியாபாரிகள் மகிழ்ச்சி!

கரூர் வியாபாரிகளிடம் தினசரி சுங்க வசூல் ரத்து என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு. சுங்க வசூல் ரத்து: கரூரில் 2000க்கும் மேற்பட்ட தரைக்கடை வியாபாரிகளிடம் வசூலிக்கப்பட்டு வந்த தினசரி சுங்க வசூல் ரத்து செய்யப்பட்டது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவை அடுத்து, தினசரி சுங்க வசூல் ரத்து செய்யப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். கரூரில் தரைக்கடை வியாபாரிகளிடம் ஒப்பந்ததாரர்கள் டெண்டர் எடுத்து சங்க வசூல் செய்து வந்தனர். தேர்தல் வாக்குறுதி: வியாபாரிகளுக்கு சங்க வசூல் … Read more

வேகமாக சென்றால் ‘இந்த’ புதிய கருவி மூலம் அபராதம்.! அதிரடி காட்டும் கரூர் போலீசார்.!

கரூரில் நெடுஞ்சாலை பகுதிகளில் அதிவேகமாக செல்லும் வாகனங்களை ‘தானியங்கி வேகமாணி கருவி’ மூலம் கண்டறிந்து அவர்களுக்கு கரூர் போக்குவரத்துக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். கரூர் மாவட்டம், மண்மங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலை இருக்கிறது. அந்த குறிப்பிட்ட பகுதியில் 40 கிலோமீட்டர் வேகத்திற்கு அதிகமாக செல்ல கூடாது என்கிற கட்டுப்பாடு இருக்கிறது. அந்த குறிப்பிட்ட வேகத்தை மீறி அதி வேகத்தில் செல்லக்கூடிய வாகனங்களை கண்டறிய புதியதாக “தானியங்கி வேகமானி” எனும் … Read more

“அரசியல் ரீதியாக அதிமுகவை சந்திக்க முடியாத திராணியற்ற திமுக”- ஓபிஎஸ்,ஈபிஎஸ் கண்டனம்!

திமுகவில் சேரவில்லையென்றால் அதிமுக நிர்வாகிகள் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத அளவுக்கு பொய் வழக்குகள் போடுவதாக கூறி, ஓபிஎஸ்,ஈபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளனர். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் திமுக-வில் சேரவில்லை என்றால், அவர்கள் மீது ஜாமீனில் வெளியில் வர முடியாத பிரிவுகளில் பொய் வழக்குகள் தொடுக்கப்பட்டு வருவதாகவும்,அரசியல் ரீதியாக அதிமுகவை சந்திக்க முடியாத திராணியற்ற திமுக-வை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் … Read more