பெண் பத்திரிக்கையாளர் பற்றி அவதூறு.! எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை.!

S Ve Sekar

கடந்த 2018ஆம் ஆண்டு முன்னாள் பாஜக நிர்வாகியாகவும், நடிகராகவும் உள்ள எஸ்.வி.சேகர் தனது சமூக வலைதள பக்கத்தில் பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறு பரப்பும் வகையில், சர்ச்சைக்குரிய பதிவை கூறியிருந்தார். இதனை எதிர்த்து, பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் சென்னை சைபர் கிரைம் பிரிவு போலீசாரிடம் எஸ்.வி.சேகர் மீது புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரானது அரசியல் பிரமுகர்கள் வழக்குகளை விசாரிக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்தது. பாஜகவில் இணைந்த 3 ஆம் ஆத்மி கவுன்சிலர்கள்.. … Read more

திமுக ஆட்சியில் தமிழகம் சீரழிகிறது: பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் தமிழகம் சீரழிந்து வருவதாக பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற போது நிகழ்த்திய உரையின் போது இதை அவர் குறிப்பிட்டார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” யாத்திரையில் பங்கேற்ற நட்டா பின்னர் சென்னை தங்கசாலையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசும் போது, “தேசியத்தில் தமிழகத்தின் பங்கு மிக முக்கியமானது, பாஜக தலைவர்களின் இதயங்களில் தமிழகம் எப்போதும் இருக்கிறது, … Read more

சிறுபான்மையினர் பற்றி அவதூறு.! அண்ணாமலை வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்.!

TN BJP President Annamalai - Madras High court

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த 2022ஆம் ஆண்டு தனியார் யூ-டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் வேற்று மதத்தினர் (சிறுபான்மையினர்) பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார் என கூறப்படுகிறது. அதாவது, தீபாவளி பண்டிகையில் இந்துக்கள் பட்டாசு வெடிப்பதற்கு எதிராக வேற்று மதத்தை சேர்ந்த சிறுபான்மையினர்கள் தான் நீதிமன்றத்தின் வழக்கு தொடர்கிறார்கள் என்று கருத்து கூறியதாக அவர் மீது சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது . சமூக சுற்றுச்சூழல் ஆதரவாளர் பியூஸ் … Read more

மீண்டும் மோடி.! இது ஒரு வித்தியாசமான தேர்தல்… அண்ணாமலை பேட்டி.! 

BJP State President Annamalai

2024 நாடாளுமன்ற தேர்தல் தேதி இம்மாத இறுதியில் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. ஏப்ரல், மே மாதங்களில் பல்வேறு கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் நிர்வாக வேலைகளில் தேர்தல் ஆணையங்கள் ஈடுபட்டு வருகின்றன. அதே போல தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரையில் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. அமைச்சர்கள் சொத்துகுவிப்பு வழக்கு.. ஐகோர்ட்டுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு! தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் , விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட … Read more

நாங்கள் ஏன் பாஜகவை விட்டு விலகினோம்.? அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு.!

BJP State President Annamalai - Edappadi Palanisamy - Dindukal Srinivasan

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அடுத்து அடுத்து வந்த 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஆகியவைகளை அதிமுக – பாஜக கூட்டணியாக சேர்ந்து எதிர்கொண்டனர். அதேபோல், வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இந்த கூட்டணியில் முறிவு ஏற்பட்டதாகவும், இனி பாஜக – அதிமுக கூட்டணி இல்லை என்றும் அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. திடீரென நிகழ்ந்த அதிமுக – பாஜக கூட்டணி முடிவு குறித்து பல்வேறு … Read more

துணைவேந்தர்கள் விவகாரம்.! பாஜக எம்எல்ஏ, திமுக அமைச்சர்கள் காரசார விவாதம்.!

BJP MLA Nainar Nagendran - Tamilnadu CM MK Stalin

இன்று தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கியது. தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கடந்த 13ஆம் தேதி திருப்பி அனுப்பி இருந்தார். அந்த மசோதாக்களை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு மீண்டும் ஒப்புதலுக்காக அனுப்ப தனித்தீர்மானம் கொண்டு வர இன்று சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மீண்டும் நிறைவேற்றப்படும் மசோதாக்களில் முக்கிய மசோதாக்களில் ஒன்று துணை வேந்தர்களை அரசின் ஒப்புதலோடு நியமிப்பது. இது தொடர்பாக … Read more

DD பொதிகை., ஜனவரி முதல் DD தமிழ்.! – மத்திய இணையமைச்சர் எல்.முருகன்.!

DD Pothigai - Union Minister L Murugan

மத்திய தகவல் தொடர்பு துறை இணையமைச்சர் எல்.முருகன், இன்று சென்னை சேப்பாக்கத்தில் செய்தியார்களை சந்தித்து தமிழகத்தில் மத்திய தகவல் தொடர்பு துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தார். அவர் கூறுகையில், முன்பு அனைவரும் DD பொதிகை தொலைக்காட்சியில் ஒளியும் ஒலியும் பார்த்துக்கொண்டு இருந்தோம். தற்போது மீண்டும் DD பொதிகை தொலைக்காட்சியில் சினிமா நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளோம். ஜனவரி மாதம் 14 முதல் DD பொதிகையானது DD தமிழ் என பெயர் மாற்ற நடவடிக்கை … Read more

பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்.! உயர்நீதிமன்றம் உத்தரவு.!

BJP Member Amar Prasad Reddy

கடந்த சில நாட்களுக்கு முன்னர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டருகே வைக்கப்பட்டு இருந்த பாஜக கொடி கம்பத்தை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றும் போதுபாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட பாஜகவினர் பிரச்சனை செய்து இருந்தார். இதில், மாநகராட்சி ஊழியர்களை வேலை செய்ய விடாமல் தடுத்தது, அவர்களை தாக்கியது. பொது சொத்துக்களை சேதப்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் அமர் பிரசாத் ரெட்டி காவல்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் … Read more

பெரியார் சிலை விவகாரம்.. அண்ணாமலை கொடுத்த புது விளக்கம்.!

BJP State President Annamalai - Periyar Statue

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , தமிழகம் முழுவதும் “என் மண் என் மக்கள்” எனும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நாடாளுமன்ற தேர்தல் குறித்த பிரச்சார வேளைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதே வேளையில் திராவிட கட்சிள் மீதும் தங்கள் விமர்சனத்தை முன் வைத்து வருகினறார். நேற்று முன்தினம் திருச்சி ஸ்ரீரங்கத்தில் “என் மண் என் மக்கள்” சுற்றுப்பயண மேடையில் பேசுகையில், தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த உடன் ஸ்ரீரங்கம் கோவில் வெளியே உள்ள கடவுள் இல்லை எனும் … Read more

பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா : கோவா முதல்வருடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.! 

BJP Leaders Tribute Muthuramalinga Thevar statue

இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழாவானது, பசும்பொன்னார் பிறந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, பசும்பொன்னில் நடைபெற்று வருகிறது. இன்று காலை முதலே முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் மரியாதையை செலுத்தி வருகின்றனர். தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவரின் உருவச் சிலைக்கு, மாலை அணிவித்து தனது மரியாதை செலுத்தினார். அப்போது … Read more