நிலச்சரிவால் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு 4 லட்சம் நிதி – இமாச்சல பிரதேச முதல்வர்!

இமாச்சல பிரதேசத்திலுள்ள கின்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு 4 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் கின்னார் மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவின் பொழுது பாறைகள் உருண்டதால், அவ்வழியே வந்த சுற்றுலா வாகனத்தின் மீது பாறைகள் விழுந்துள்ளது. இந்த விபத்தில் சுற்றுலா வாகனத்தில் இருந்த 9 பேர் உயிரிழந்த நிலையில், நான்கு பேர் காயமடைந்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஏற்கனவே பிரதமரின் … Read more

இமாச்சலில் ஏற்பட்ட நிலச்சரிவில் 9 பேர் உயிரிழப்பு.., பிரதமர் நிவாரணம் அறிவிப்பு ..!

இமாச்சல பிரதேச கின்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 9 பேர் உயிரிழந்தனர், 4 பேர் காயமடைந்தனர் .  இமாச்சல பிரதேசத்தில் உள்ள கின்னார் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால்  மலைகளில் இருந்து கீழே பாறைகள் உருண்டது. அப்போது டெம்போ டிராவலர் வாகனத்தில் 17 பேர் வந்தனர். மலைகளில் இருந்து கீழே உருண்ட பாறைகள் அந்த டெம்போ டிராவலர் வாகனத்தின் மீது விழுந்ததில், 9 பேர் உயிரிழந்தனர், 4 பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் … Read more

பள்ளத்தில் வேன் விழுந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்!

இமாசலப் பிரதேசத்திலுள்ள சிரமௌர் எனும் பகுதியில் உள்ள பள்ளத்தில் வேன் விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 பேர் காயமடைந்துள்ளனர். இமாச்சல பிரதேசத்தில் உள்ள சிரமௌர் மாவட்டத்திலுள்ள பச்சாத் எனும் பகுதியில் பேக் பாஷாக் கிராமத்தின் அருகே உள்ள பள்ளத்தில் நேற்று மாலை கார் தடுமாறி விழுந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஆனால், உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்படாமல் உள்ளதாகவும் … Read more

viral video: முதலமைச்சரின் பாதுகாவலரை கன்னத்தில் அறைந்த எஸ்.பி-பதிலுக்கு காலால் எட்டி உதைத்த பாதுகாவலர்..!

ஹிமாச்சலப்பிரதேச முதலமைச்சரின் பாதுகாவலரை கன்னத்தில் அறைந்த எஸ்.பி. ஹிமாச்சலப்பிரதேசம் குலு மாவட்டத்திற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வருகை புரிந்துள்ளார். அதன் காரணத்தால் அவரை வரவேற்க ஹிமாச்சலப்பிரதேசம் முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் காரில் வந்து இறங்கியுள்ளார். அப்போது முதலமைச்சரின் பாதுகாவலருக்கும் குலு மாவட்ட எஸ்.பிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. குலு மாவட்ட எஸ்.பி. கௌரவ் சிங் முதலமைச்சரின் பாதுகாவலரை கன்னத்தில் அறைந்துள்ளார். அதற்கு பதிலுக்கு பாதுகாவலரும் எஸ்.பியை காலால் எட்டி உதைத்துள்ளார். இதனால் அந்த பகுதியில் … Read more

உதவிக்கு வராத சொந்த கிராம மக்கள்…உயிரிழந்த தாயை தோலில் சுமந்து சென்று தகனம் செய்த மகன்

இமாச்சல பிரதேசத்தில் கொரோனாவால் இறந்த தன் தாயை தோலிலேயே சுமந்து சென்ற மகன் நெஞ்சை உளுக்கிய காட்சி ! இமாச்சல பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் வசித்துவரும் ஒரு நபர்  தன் தாய்க்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அங்கு படுக்கை மற்றும் ஆக்ஸிஜன் கிடைக்காத காரணத்தினால்  தனது வீட்டிற்கு மீண்டும் அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் அவரது தாய் வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து கிராம பஞ்சாயத்து தலைவர் … Read more

இமாச்சலபிரதேசத்தில் தனியார் மருத்துவமனைகளில் ரூ.500-க்கு RT-PCR சோதனை நடத்த அனுமதி…!

இமாச்சல பிரதேசத்தில், தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் ரூ.500 க்கு ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளை நடத்த இமாச்சல பிரதேச அரசு அனுமதித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை ஒவ்வொரு மாநில அரசுகளும் மேற்கொண்டு வருகிறது. அதன்படி அனைத்து மாநிலங்களிலும், மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், லேசான அறிகுறிகள் தெரிந்தாலே, மக்கள் அருகில் மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதனை செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தில், … Read more

இமாச்சலப் பிரதேசத்திற்குள் நுழைய டொனால்ட் ட்ரம்ப்,அமிதாப் பச்சன் ஆகியோரின் பெயரில் போலி ‘இ-பாஸ்கள்’ பெற்ற நபர்..!

இமாச்சலப் பிரதேசத்திற்குள் நுழைய டொனால்ட் ட்ரம்ப்,அமிதாப் பச்சன் ஆகியோரின் பெயரில் போலி ‘இ-பாஸ்கள்’ பெற்ற நபரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமாக அதிகரித்து வருகிறது.இதனால் பல மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன.மேலும்,பிற மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கு ‘இ-பாஸ்’ கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடந்து,இமாச்சலப் பிரதேசமும் தங்கள் மாநிலத்திற்குள் வருபதற்கு ‘இ-பாஸ்’ முறையை கட்டாயமாக்கியுள்ளது.மேலும்,பிற மாநிலத்திலிருந்து வருபவர்கள் கொரோனா நெகடிவ் சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டுமே ‘இ-பாஸ்’ அனுமதி என்றும்,அதன்படி வருபவர்கள் 7 நாட்கள் … Read more

ஆற்றில் பிக்கப் வேன் கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழப்பு..!

இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் இன்று காலை 7 தொழிலாளர்கள் பயணித்த வாகனம் ஒன்று விபத்து ஏற்பட்டத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மஹிந்திரா பிக்கப் வாகனம் மூலம் 7 தொழிலாளர்கள் மண்டியிலிருந்து, சுந்தர்நகருக்கு சென்று கொண்டிருந்தபோது ஆற்றில் வாகனம் விழுந்தபோது ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், காயமடைந்த ஒருவர் மண்டல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். பயணிகள் அனைவரும் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்று மண்டி காவல் கண்காணிப்பாளர் ஷாலினி அக்னிஹோத்ரி தெரிவித்தார். … Read more

உலகின் நீண்ட அடல் சுரங்க விவகாரம்.. அடிக்கல் நாட்டிய மன்மோகன் கல்வெட்டை காணவில்லை

சமீபத்தில் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில்  உலகின் மிக நீண்ட சுரங்க பாதையை திறந்து வைத்தார் மோடி. இந்த பாதை, மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளது. இதை, அனைத்து மீடியாக்களிலும், ‘மோடி அரசின் சாதனை’ என, அரசு சார்பில் விளம்பரம் செய்தது. ஆனால், இந்த திட்டத்தை கடந்த  2010ல் அடிக்கல் நாட்டியவர், காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங். இவரால் வைக்கப்பட்ட அந்த அடிக்கல், இப்போது காணப்படவில்லை. மோடி திறந்து வைத்தது மட்டுமே, கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. இது காங்கிரசுக்கு … Read more

சுற்றுலா தலங்களுக்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை – மாநில அரசு

சுற்றுலா தலங்களுக்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை என மாநில அரசு அறிவித்துள்ளது. இமாச்சல பிரதேசத் மாநிலத்தில் நுழைவதற்கு இனி இ-பாஸ் தேவையில்லை என்று கடந்த 16 ஆம் தேதி மாநில அரசு முடிவு செய்தது. இதனையடுத்த,  இமாச்சலப் பிரதேசம் சுற்றுலாப் பயணிகளை இ-பாஸ் இல்லாமல் மாநிலங்களுக்குச் செல்ல அனுமதித்துள்ளது. மேலும், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் சிம்லா, மணாலி  உள்ளிட்ட அனைத்து சுற்றுலா இடங்களுக்கும் செல்லலாம். இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக 6 மாதங்களுக்கும் மேலாக … Read more