எளிதாக்கப்பட்ட இபாஸ் முறை.! சென்னை விமான நிலையத்தில் வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு.!

இபாஸ் முறை எளிதாக்கப்பட்டு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்ததை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்ததை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா காரணமாக ரயில்கள், விமானம் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் முடக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மே 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் ஜூலையில் மட்டும் சென்னை விமான நிலையத்தில் வந்து … Read more

இ-பாஸ் முறை தமிழகத்தில் அவசியம் – முதலமைச்சர் பழனிசாமி

இ-பாஸ் முறை தமிழகத்தில் அவசியம் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.இதனிடையே தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில்  கடந்த நான்கு மாதங்களாக மக்கள் சிரமப்பட்டதாகவும், உண்மையான காரணங்கள் கூறினால் கூட இ-பாஸ் மறுக்கப்படுவதும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டுமென  எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி வந்தனர்.இதையடுத்து, இ -பாஸ் விண்ணப்பித்த … Read more

இ பாஸ் குறித்த முடிவு.. 29-ம் தேதி முதலமைச்சர் ஆலோசனை..!

தமிழகத்தில் இ பாஸ் குறித்து இறுதி முடிவு எடுக்க மாவட்ட ஆட்சியர்களுடன் 29-ம் தேதி ஆலோசனை. கொரோனா பரவலை தடுக்க மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான பயணம் செய்ய இ பாஸ்  முறை அமலுக்கு வந்தது.  சமீபத்தில் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய அரசு கடிதம் ஒன்றை எழுதியது. அதில், மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலும் பயணத்திற்கு தடை விதிக்கக் கூடாது என்று கூறியது.  இதனால், தமிழகத்தில் இ-பாஸ் முறையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் … Read more

செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்.!

செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள பரனூர் சுங்கச்சாவடியில் வழக்கத்துக்கு மாறாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். சென்னையில் இருந்து பிற மாவட்டங்களில் செல்பவர்களாக இருந்தாலும், வருபவர்களாக இருந்தாலும் சரி செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள பரனூர் டோல்கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும். அந்த வகையில் இந்த சுங்கச்சாவடியில் வழக்கமாக திங்கள்கிழமைகளிலும், வெள்ளிக்கிழமைகளிலும் மற்றும் அரசு விடுமுறைக்கு பின் வரும் நாட்களில் மட்டுமே போக்குவரத்து நெரிசல் அதிகமாகி டோல்கேட்டை கடக்க பல நேரங்கள் எடுக்கும் . கடைசியாக கொரோனா தொற்று … Read more

மத்திய அரசு உத்தரவு.. தமிழகத்தில் இ பாஸ் ரத்தாகுமா..?

கொரோனா பரவலை தடுக்க மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு  இடையிலான பயணங்களுக்கும் இ பாஸ் முறை அமலுக்கு வந்தது. தமிழகத்தில், இ-பாஸ் முறையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். சமீபத்தில் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய அரசு கடிதம் ஒன்றை எழுதியது. அதில்,  மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலும் பயணத்திற்கு தடை விதிக்கக் கூடாது என்று கூறியது. இந்நிலையில், இ பாஸ் நடைமுறையை ரத்து செய்வதா … Read more

இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்து, குடும்பத்திற்கு 5000 ரூபாய் நிதி அளித்திட வேண்டும் – மு.க.ஸ்டாலின்

இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்து, குடும்பத்திற்கு 5000 ரூபாய் நிதி அளித்திட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  டிசம்பர் 2019 உடன் ஒப்பிடும் போது வேலை வாய்ப்பின்மை 10 மடங்கு உயர்ந்து தமிழகத்தில் வேலை இல்லாத் திண்டாட்டம் 49.8% அதிகரித்திருக்கிறது. ஒழுங்குமுறையில்லாமல் ஊரடங்கை நீட்டித்து டாஸ்மாக்கைத் திறந்து, பிழைப்பு தேடிச் செல்வோரை தடுத்து, இ-பாஸ் மூலமாக மக்களை முடக்கிவிட்டது அதிமுக அரசு. அரசின் பொருளாதாரம் … Read more

இனி இ-பாஸ் தேவையில்லை – புதுச்சேரி அரசு

புதுச்சேரிக்குள்ளேயும், வெளிமாநிலங்களுக்கும் செல்ல இ-பாஸ் தேவையில்லை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில்  கடந்த நான்கு மாதங்களாக மக்கள் சிரமப்பட்டதாகவும், உண்மையான காரணங்கள் கூறினால் கூட இ-பாஸ் மறுக்கப்படுவதும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டுமென  எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி வந்தனர். இதனிடையே … Read more

தமிழகத்தில் இ-பாஸ் குறித்து முதல்வர் முடிவெடுப்பார் – அமைச்சர் ஜெயக்குமார்.

தமிழகத்தில் இ-பாஸ் குறித்து முதல்வர் முடிவெடுப்பார். இந்தியா முழுவதும்  கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் முறை நடைமுறையில் இருந்தது. இந்நிலையில், மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கு வெளியேயும் செல்ல இ பாஸ் தேவையில்லை என அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் உள்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் கூறுகையில், ‘மாநிலங்களுக்கு இடையே தனிநபர் இ-பாஸ் இல்லாமல் செல்லலாம் என்பதை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் … Read more

இ -பாஸ் தேவையில்லை , எந்த கட்டுப்பாடும் விதிக்க கூடாது – மத்திய அரசு

மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கு வெளியேயும் செல்ல இ பாஸ் தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.இதனிடையே தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில்  கடந்த நான்கு மாதங்களாக மக்கள் சிரமப்பட்டதாகவும், உண்மையான காரணங்கள் கூறினால் கூட இ-பாஸ் மறுக்கப்படுவதும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டுமென  எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி வந்தனர்.இதையடுத்து, … Read more

இ-பாஸ் முறையால் தான் கொரோனா பரவல் கண்டுபிடிக்க முடிக்கிறது .!

நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேலூர், ராணிப்பேட்டை மற்றும்  திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து  ஆய்வு மேற்கொண்டு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதைத்தொடர்ந்து, இன்று முதலமைச்சர் பழனிச்சாமி நாமக்கல் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நாமக்கல்லில் மாவட்ட வளர்ச்சி பணி மற்றும் கொரோனா தடுப்பு பணிஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர், மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்கவே இ-பாஸ் பயன்படுத்தப்படுகிறது. கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை எனவே பொதுமக்கள் ஒத்துழைக்க … Read more