நடனமாடிய படி போக்குவரத்தை கட்டுப்படுத்தும் காவலர்!! வைரலாகும் வீடியோ

தனித்துவமான நடன அசைவுகளால் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் போலீஸ்காரர் வைரலாகும் வீடியோ!! உத்தரகாண்டில் போக்குவரத்து காவலராக பணியமர்த்தப்பட்ட ஹோம் கார்டு, வித்யாசமான பாணியில் போக்குவரத்தை கட்டுபடுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் காவலர் ஒருவர், டேராடூனில் உள்ள சிட்டி ஹார்ட் ஹாஸ்பிடல் பகுதி போக்குவரத்தை நடனமாடி ஒழுங்குபடுத்தும் காட்சிகள்  பதிவாகியுள்ளது. மேலும் அவர் அந்த பகுதியை கடக்கும் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு விசில் அடித்து சிரித்துக் கொண்டே போஸ் கொடுக்கும் … Read more

#Breaking:ஹெல்மெட் அணியவில்லை:ஒரே நாளில் இத்தனை பேர் மீது வழக்கு பதிவு;அபராதம் – போக்குவரத்து காவல்துறை!

இருசக்கர வாகன விபத்துகளைக் கட்டுப்படுத்த மற்றும் குறைக்கும் நோக்கில் சென்னையில் இன்று (மே 23 ஆம் தேதி) முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது.மேலும்,இருசக்கர வாகனங்கள் ஓட்டிச்செல்பவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணியாமல் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்தது. அதன்படி,சென்னையில் இன்று முதல் ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க 312 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,சென்னையில் … Read more

மழைநீர் பெருக்கு:போக்குவரத்து மாற்றம் – சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு!

சென்னை:மழைநீர் பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,கடந்த வாரம் பெய்த மழையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன.குறிப்பாக,சென்னையில் வீடுகள்,சாலைகள் எனப் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து,சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்மோட்டார் மூலமாக மழை நீர் வெளியேற்றப்பட்டு இயல்பு வாழ்க்கையை நோக்கி மக்கள் திரும்புகின்றனர்.இதற்கிடையில்,மழைநீர் வெளியேற்றும் பணிகள் நடைபெறுவதன் காரணமாக சென்னையில் … Read more

#Breaking:காற்று மாசுபாடு…3 நாட்களுக்கு வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கலாமா? – அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

டெல்லி:காற்று மாசுபாட்டைக் குறைக்க வாகன நிறுத்த கட்டணங்களை நான்கு மடங்கு உயர்த்தலாம்,மெட்ரோ ரயில் சேவையை அதிகரிக்கலாம் என்று டெல்லி அரசு பல்வேறு யோசனைகளை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில் அதற்கு முக்கிய காரணம் தூசி, கனரக வாகன போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகள்’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.எனவே,அதனைக் குறைக்க 3 நாட்களுக்கு வாகன போக்குவரத்திற்கு ஏன் தடை விதிக்க கூடாது என்று டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும்,டெல்லியில் காற்று மாசுபாட்டிற்கு … Read more

வண்டிய சரியா ஓட்டுனா… வாழ்க்கையை சரியா ஒட்டிடலாம்..! வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்த்த போக்குவரத்து சார்பு ஆய்வாளர்…!

வாகன ஓட்டிகள் சிக்கனலில் காத்திருக்கும் போது, அவர்களின் காத்திருப்பை பயனுள்ளதாக மாற்ற, வாழ்க்கை தத்துவங்களை கூறி உற்சாகப்படுத்தி வருகிறார், போக்குவரத்து சார்பு ஆய்வளரான பழனியாண்டி. மதுரையில் போக்குவரத்து சார்பு ஆய்வளரான பழனியாண்டி, வாகன ஓட்டிகள் சிக்கனலில் காத்திருக்கும் போது, அவர்களின் காத்திருப்பை பயனுள்ளதாக மாற்றும் வகையில், வாழ்க்கை தத்துவங்களை கூறி உற்சாகப்படுத்தி வருகிறார். இவரது இந்த  செயல், வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒலிபெருக்கி வாயிலாக வாகன  ஓட்டிகளிடம், எதைப்பற்றியும் கவலைப்பட கூடாது. இன்னைக்கு விட நாளைக்கு … Read more

108 வர தாமதமானதால் பரிதாபமாக போன உயிர் – போராட்டத்தில் ஈடுபட்ட கிராம வாசிகள்!

புதுக்கோட்டையில் 108 வர தாமதமானதால் விபத்தில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அருகே அமைந்துள்ள ரெங்கம்மாள் சத்திரம் எனும் கிராமத்தில் நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற பால்ராஜ் என்பவரை மினி சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து சரக்கு வாகனத்தை ஓட்டிவந்த டிரைவர் வண்டியை சாலையிலேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். ஆனால் விபத்தில் படுகாயமடைந்த … Read more

செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்.!

செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள பரனூர் சுங்கச்சாவடியில் வழக்கத்துக்கு மாறாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். சென்னையில் இருந்து பிற மாவட்டங்களில் செல்பவர்களாக இருந்தாலும், வருபவர்களாக இருந்தாலும் சரி செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள பரனூர் டோல்கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும். அந்த வகையில் இந்த சுங்கச்சாவடியில் வழக்கமாக திங்கள்கிழமைகளிலும், வெள்ளிக்கிழமைகளிலும் மற்றும் அரசு விடுமுறைக்கு பின் வரும் நாட்களில் மட்டுமே போக்குவரத்து நெரிசல் அதிகமாகி டோல்கேட்டை கடக்க பல நேரங்கள் எடுக்கும் . கடைசியாக கொரோனா தொற்று … Read more

சென்னை அண்ணா சாலையில் திடீர் பள்ளம்! அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது!

சென்னை அண்ணா சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளதால், அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. சென்னை  அண்ணா சாலையில், டிஎம்எஸ் வளாகத்திற்கு எதிரே, பாதாள சாக்கடை அளவிற்கு, சரியாக ஒரு அடி அகலத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பல்லாம் 10 அடி ஆழத்தில் உள்ளதாகவும், சரியாக நேற்று மாலை 7:30 மணியளவில் இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளம், ஒரு ஆட்டோ ட்ரைவர் சென்று கொண்டிருக்கும் போது, அந்த பள்ளத்தில் ஆட்டோ டிரைவரின் முன்புற டயர் அந்த பள்ளத்தில் … Read more

லாரியில் விமானத்தை ஏற்றி செல்லும் போது நடந்த சம்பவம்.! பொதுமக்கள் அதிர்ச்சி.!

மேற்குவங்கத்தில் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பழைய போயிங் விமானம் ஒன்று விற்கப்பட்டது. விமானத்தை உடைத்து விற்பனை செய்ய ஏற்றிச் சென்று போது மேம்பாலத்திற்கு அடியில் சிக்கிய லாரி , நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது. இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பழைய போயிங் விமானம் ஒன்றை விற்கப்பட்டு பழைய பொருட்கள் வாங்கும் வியாபாரி ஒருவர் அந்த விமானத்தை உடைத்து விற்பனை செய்ய விலைக்கு வாங்கியுள்ளார். பின்னர், அதை எடுத்து செல்வதற்காக லாரி ஒன்றில் ஏற்றி … Read more

மதுரை வைகை ஆற்றில் வெள்ளம்: தரைப்பாலத்தில் மீது தண்ணீர் செல்வதால் போக்குவரத்து பாதிப்பு.!

ராமநாதபுரம் மக்களின் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து நேற்று காலை 3,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது . இதனால் மதுரையில் தெற்கு மற்றும் வடக்கு பகுதியை இணைக்கும் முக்கியமாக விளங்கும் தரைப்பாலத்தில் மேல் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது. ராமநாதபுரம் மக்களின் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து நேற்று காலை 3,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது .நேற்று காலை திறந்துவிடப்பட்ட தண்ணீர் மதுரையை வந்தடைந்தது. நேற்று காலை திறந்துவிடப்பட்ட தண்ணீரால் மதுரை வைகை அணையில் தற்போது … Read more