ஐ.ஐ.டி. பட்டதாரிகள் வேலையை உதறி விட்டு அரசியலில் களமிறங்கினர்!

அரசியலில் களமிறங்குவதற்காக , நாடு முழுவதும் பல்வேறு ஐ.ஐ.டி.க்களில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 50 பேர் தங்கள் வேலைகளை உதறி தள்ளினர். டெல்லியைச் சேர்ந்த நவீன் குமார் என்பவர் தலைமையில், பகுஜன் ஆசாத் என்ற கட்சியை தொடங்கியுள்ள அவர்கள், அங்கீகாரம் பெறுவதற்காக தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளனர். தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இந்தக் கட்சியை தொடங்கி இருப்பதாக தெரிவித்துள்ள அவர்கள் சமூக வலைத்தளங்களில் பணியை தொடங்கி விட்டனர். 2020ஆம் ஆண்டு நடைபெறும் பீகார் சட்டப்பேரவை தேர்தலில் … Read more

பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம்:பேராசிரியர் முருகன் என்பவர் கைது!

மேலும் ஒரு பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். பேராசிரியர் முருகன் என்பவரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்துள்ளனர்.நிர்மலா தேவிக்கு உதவியாக பேராசிரியர் முருகன் செயல்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த பேராசிரியர் முருகனை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்துள்ளனர்.கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலா தேவி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். மே லும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி ஏழு கிராம மக்கள் பேரணி!

தூத்துக்குடி மடத்தூரில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, 18 பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பேரணியாகச் சென்று மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக  திரண்டு வருகின்றனர். ஸ்டெர்லைட் தாமிர ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், தீவிர உடல் நலக் கோளாறுகளும் ஏற்படுவதாக கூறி தூத்துக்குடி மாவட்ட மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இன்று ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக் குழு சார்பில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலக முற்றுகைப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக … Read more

காங்கிரஸ் தலைவர் ராகுல்  காந்தி இன்று முதல் பிரச்சார இயக்கத்தை தொடங்கினார்!

காங்கிரஸ் தலைவர் ராகுல்  காந்தி அரசியலமைப்பை காக்கக் கோரி நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் மேற்கொள்ளப்படும் பிரசார இயக்கத்தை  இன்று தொடங்கி வைக்கிறார். தலித்கள் தாக்கப்பட்டு வருவதாகவும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவர்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டு  வருவதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. எனவே, அரசியலமைப்பு சட்டம், தலித்கள் மீதான தாக்குதல்கள் குறித்து  மக்களிடம் விளக்கும் வகையில், “அரசியலமைப்பை காப்போம்” என்ற பிரசார இயக்கத்தை நாடு முழுவதும் காங்கிரஸ் நடத்துகிறது. இந்த பிரசார இயக்கத்தை அக்கட்சியின் தலைவர் ராகுல் … Read more

பாஜக-அதிமுகவை யாராலும் பிரிக்க முடியாது!அதிமுக நாளிதழில் அதிகாரபூர்வ அறிவிப்பு !

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ” நமது புரட்சித் தலைவி அம்மா” ,அதிமுக-பாஜக இடையிலான பந்தத்தை யாராலும் பிரிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.அதிமுகவும் பாஜகவும் இரட்டைக்குழல் துப்பாக்கி போல் செயல்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைமையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்படும் நிலையில் மத்திய மாநில அரசுகளின் ஒற்றுமையை யாராலும் குலைக்க முடியாது என்றும் இந்த உறவைக் கெடுக்க நினைக்கும் திமுகவின் திட்டம் பலிக்காது என்றும் அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் … Read more

நான்காவது நாளாக  பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை!

நான்காவது நாளாக  பேராசிரியை நிர்மலா தேவியிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உயர் பதவியில் இருப்பவர்களுக்காக அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி மாணவிகள் 4 பேரை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி 5 நாள் சிபிசிஐடி காவலில் எடுக்கப்பட்டார். நாளையுடன் காவல் முடிவடைய உள்ள நிலையில், விருதுநகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து அவரிடம் இன்று நான்காவது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்றைய விசாரணையில் அவரது செல்போனில் … Read more

தீபக் மிஸ்ராவிற்கு எதிரான தீர்மானம்!நிராகரித்தார் வெங்கய்ய நாயுடு

மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு,உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்வதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் அளித்த கண்டனத் தீர்மான நோட்டீசை  நிராகரித்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக் கோரி, முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான வெங்கய்யா நாயுடுவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து மனுக் கொடுத்தனர். இதில், காங்கிரஸ், இடது சாரிகள், தேசியவாத … Read more

ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் இருவரையும் கைது செய்ய வேண்டும்! ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில் ,பெண்மையை இழிவுப்படுத்தும் எச்.ராஜா, எஸ்.வி.சேகரை கைது செய்ய வேண்டும் என்று  தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:கல்லூரி மாணவிகளுக்கு பேராசிரியையே பாலியல் வலை வீசிய விவகாரம், செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளரிடம் ஆளுநர் புரோஹித் நடந்துகொண்ட விதம் ஆகியவற்றைத் தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் தெரிவித்த கருத்துகள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை. அவர்கள் குடும்பத்தின் பெண் உறுப்பினர்களால் கூட ஏற்க முடியாதவை. தனது செயலுக்காக ஆளுநர் மன்னிப்புக் கேட்டார். பெண்மையைப் … Read more

பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம்:மற்றொரு பேராசிரியரின் மனைவியிடம் தீவிர விசாரணை!

சிபிசிஐடி போலீஸார்,பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு தொடர்பாக தலைமறை வான மதுரை காமராசர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்ககப் பேராசிரியரின் மனைவியிடம்  நேற்று விசாரணை நடத்தினர். மேலும் இவ்வழக்கு தொடர் பாக மற்றொரு பேராசிரியரும் தலைமறைவாக உள்ளதால் சிபிசிஐடி போலீஸார் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அருப்புக்கோட்டையில் கல் லூரி மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தவறாக வழிகாட்டியதாக பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு, சிபிசிஐடி காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார். அவர் கொடுத்த வாக்குமூலத்தில், மதுரை காமராசர் பல்கலைக்கழக … Read more

கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா தோல்வி பயத்தால் 2 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்!

காங்கிரஸ் வேட்பாளராக கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா, மேலும் ஒரு தொகுதியில்  அறிவிக்கப்பட்டுள்ளார். சாமுண்டீஸ்வரி தொகுதியில், அவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இன்று வெளியிடப்பட்ட 2வது வேட்பாளர் பட்டியலில், பதாமி தொகுதியிலும் போட்டியிடுவார், என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 12ந்தேதி நடைபெற உள்ள, கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில், சித்தராமைய்யாவின் மகனும் போட்டியிடுகிறார். எனவே, ஒரே குடும்பத்திற்கு 3 தொகுதிகளை ஒதுக்குவதா என கர்நாடக காங்கிரசில் சித்தராமைய்யாவிற்கு எதிரான அதிருப்தி கோஷ்டியினர் போர்க்கொடி தூக்கியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. சித்தராமைய்யா … Read more