விரைவில் அயோத்தியில் ராமர் கோயில்!விஸ்வ இந்து பரிஷத்தின் புதிய தலைவர் சதாசிவ் கோக்ஜே

 விஸ்வ இந்து பரிஷத்தின் புதிய தலைவர் சதாசிவ் கோக்ஜே ,அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்ற கோடிக்கணக்கான மக்களின் கனவு விரைவில் நனவாகும் என்று தெரிவித்துள்ளார். விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பதவிக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் புதிய தலைவராக முன்னாள் நீதிபதியும், இமாச்சலப்பிரதேச மாநில முன்னாள் ஆளுநருமான சதாசிவ் கோக்ஜே வெற்றி பெற்றார். முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியாவின் ஆதரவாளர் ரெட்டி தோல்வி அடைந்தார். இதைத்தொடர்ந்து பிரவீன் தொகாடியா விஎச்பி அமைப்பில் … Read more

ஆடிட்டர் குருமூர்த்தி -ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு !

நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில், துக்ளக் இதழின் ஆசிரியரான ஆடிட்டர் குருமூர்த்தி, சந்தித்து ஆலோசனை நடத்தினார். அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்த ரஜினிகாந்த், இதற்கான பணிகளை தீவிரப்படுத்தினார். இணையதளம் வாயிலாக உறுப்பினர் சேர்க்கையும் நடத்தப்பட்டது. மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமனம் நடைபெற்றது. இந்த நிலையில் வழக்கமான உடல் பரிசோதனைக்காக ரஜினிகாந்த் இன்று அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார். அங்கு 10 நாட்கள் தங்கி இருந்து அவர் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளவுள்ளார். இந்தச் சூழலில் சென்னை போயஸ் … Read more

கூட்டுறவு சங்கத் தேர்தல் விவகாரம் : மதுரை உயர்நீதிமன்ற கிளை ஒத்திவைப்பு !

உயர்நீதிமன்ற மதுரை கிளை,கூட்டுறவு சங்கத் தேர்தலை முறைப்படி நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கை  மே  இரண்டாவது வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளது. கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் எதிர்கட்சியினரின் மனுக்கள் காரணமின்றி நிராகரிக்கப்பட்டு ஒருதலைப்பட்சமாக வெற்றி அறிவிக்கப்படுவதாகத் தொடரப்பட்ட வழக்கில் தேர்தல்களுக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது கூட்டுறவு சங்க தேர்தலை நடத்தலாம் ஆனால் முடிவுகளை வெளியிடக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து … Read more

ரூ.6.79 லட்சம் கோடியாக டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் சந்தை முதல் மதிப்பு உயர்வு!

6லட்சத்து 79ஆயிரம் கோடி ரூபாயாக,டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் சந்தை முதல் மதிப்பு உயர்ந்துள்ளது. டிசிஎஸ் எனப்படும் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் 4 விழுக்காடு அதிகரித்து மூவாயிரத்து 545ரூபாயாக இருந்தது. இதனால் அந்த நிறுவனத்தின் சந்தை முதல் மதிப்பு 6லட்சத்து 79ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இந்த அளவு சந்தை முதல் மதிப்பை எட்டியுள்ள முதல் நிறுவனமாக … Read more

தென் தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்ல எச்சரிக்கை! மழைக்கு வாய்ப்பு!வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் மற்றும் கிழக்கு கடற்கரையை ஒட்டிய பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக உள்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது.  கடலோர மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடல் சீற்ற எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்படுகிறது. அந்தமான் மற்றும் தென் தமிழகத்தை ஒட்டியுள்ள வங்க கடல் பகுதியில் கடந்த இரண்டு நாட்களை விட 3 மீட்டர் வரை அலைகள் அதிக அளவில் இருக்கும் என்பதால் தென் தமிழக மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று  … Read more

அதிமுக தோற்றுவிடும் என்பதாலேயே உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தள்ளிப்போட்டு வருகிறது! ஸ்டாலின்

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ,ஆளுங்கட்சி தோற்றுவிடும் என்பதாலேயே உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தள்ளிப்போட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் காமராஜர் புரத்துக்குச் சென்ற அவர் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். குடிநீருக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் ஒரு குடம் 6ரூபாய் என்கிற விலைக்குத் தண்ணீரை விலைகொடுத்து வாங்குவதாக அவரிடம் பொதுமக்கள் தெரிவித்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், அனைத்து ஊழல்களையும் அதிமுகவும் பாஜகவும் இணைந்தே செய்வதாகக் குற்றஞ்சாட்டினார். ஆளுங்கட்சி தோற்றுவிடும் என்பதாலேயே உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தள்ளிப்போட்டு வருவதாகத் தெரிவித்தார். … Read more

உண்மையை உடைத்தெறிந்த விமான போக்குவரத்து அமைச்சகம்!உதிரி பாகங்கள் வாங்க நிதி இல்லை!

விமான போக்குவரத்து அமைச்சகம்,ஏர்இந்தியா நிறுவனம் மாதந்தோறும் 250 கோடி ரூபாய் வரை ரொக்கப் பற்றாக்குறையை சந்திப்பதால், தேவையான உதிரிபாகங்களை வாங்க முடியாத நிலை இருப்பதாக, ஒப்புக்கொண்டுள்ளது. நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழுவில் இந்த தகவலை தெரிவித்துள்ள விமான போக்குவரத்து அமைச்சகம், ரொக்கப் பற்றாக்குறை காரணமாக, பாரமரிப்பு நிதி கிடைப்பது பாதிக்கப்பட்டு விமானங்களை இயக்காமல் நிறுத்தி வைக்கும் நிலை ஏற்படுவதாகவும் கூறியுள்ளது. முன்னர் விமான எஞ்சின்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு பராமரிப்பு, பழுதுநீக்கப்பட்டு வந்ததாகவும், தற்போது அது உள்நாட்டிலேயே செய்யப்படுவதாகவும் … Read more

ஐ.ஐ.டி. பட்டதாரிகள் வேலையை உதறி விட்டு அரசியலில் களமிறங்கினர்!

அரசியலில் களமிறங்குவதற்காக , நாடு முழுவதும் பல்வேறு ஐ.ஐ.டி.க்களில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 50 பேர் தங்கள் வேலைகளை உதறி தள்ளினர். டெல்லியைச் சேர்ந்த நவீன் குமார் என்பவர் தலைமையில், பகுஜன் ஆசாத் என்ற கட்சியை தொடங்கியுள்ள அவர்கள், அங்கீகாரம் பெறுவதற்காக தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளனர். தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இந்தக் கட்சியை தொடங்கி இருப்பதாக தெரிவித்துள்ள அவர்கள் சமூக வலைத்தளங்களில் பணியை தொடங்கி விட்டனர். 2020ஆம் ஆண்டு நடைபெறும் பீகார் சட்டப்பேரவை தேர்தலில் … Read more

பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம்:பேராசிரியர் முருகன் என்பவர் கைது!

மேலும் ஒரு பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். பேராசிரியர் முருகன் என்பவரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்துள்ளனர்.நிர்மலா தேவிக்கு உதவியாக பேராசிரியர் முருகன் செயல்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த பேராசிரியர் முருகனை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்துள்ளனர்.கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலா தேவி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். மே லும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி ஏழு கிராம மக்கள் பேரணி!

தூத்துக்குடி மடத்தூரில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, 18 பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பேரணியாகச் சென்று மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக  திரண்டு வருகின்றனர். ஸ்டெர்லைட் தாமிர ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், தீவிர உடல் நலக் கோளாறுகளும் ஏற்படுவதாக கூறி தூத்துக்குடி மாவட்ட மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இன்று ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக் குழு சார்பில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலக முற்றுகைப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக … Read more