விருதுநகர் அருகே இரண்டு குழந்தைகளை வெட்டிக்கொன்று, தந்தை கழுத்தறுத்து தற்கொலை!

இரண்டு குழந்தைகளை அரிவாளால் கொடூரமாக வெட்டிக்கொன்ற  தந்தை, தானும் கழுத்தறுத்து  விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சல்வார்பட்டியை சேர்ந்தவர்கள் அந்தோணி – முனீஸ்வரி தம்பதி. கூலித் தொழிலாளியான இவர்களுக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை அந்தோணி வீட்டில் அவரது, மகன், மகள் மற்றும் மனைவி ரத்தவெள்ளத்தில் கிடந்தது அக்கம்பக்கத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இரண்டு குழந்தைகளும் … Read more

பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 27 ஆம் தேதி சீன பயணம் !

பிரதமர் நரேந்திர  மோடி வரும் 27 ஆம் தேதி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து முக்கியப் பேச்சு நடத்த உள்ளார். ஷாங்காய் கூட்டமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக சுஷ்மா ஸ்வராஜ் நான்கு நாள் பயணமாக சீனா சென்றுள்ளார். பெய்ஜிங்கில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இ (Wang Yi), சுஷ்மா ஸ்வராஜ் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, வரும் 27 மற்றும் 28 ஆம் தேதி பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் … Read more

தமிழ்நாட்டில் ,கால்நடைத் தீவன தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை!அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ,கால்நடைத் தீவன தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், 77 ஆயிரம் ஏக்கர் பரப்பில் தீவன உற்பத்தி நடைபெற்று வருவதாக கூறினார். அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து உத்தரவுகளை பிறப்பித்திருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

அதிமுக அதுக்கு கூட பாஜக சொல்வதை அப்படி கேட்டு நடக்கின்றது!குஷ்பூ

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பூ ,தமிழகத்தில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் பாஜக சொல்வதை அதிமுக அப்படியே கேட்டு நடப்பது தான், என குற்றஞ்சாட்டியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த குஷ்பூ, “திமுக – காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை. காங்கிரஸ் கருத்திற்கும், வழக்கறிஞர் பராசரன் கருத்திற்கும் தான் வேறுபாடு இருக்கிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தவறு செய்ததாக காங்கிரஸ் எப்போதும் கூறாது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் வெளிப்படைத்தன்மை கண்டிப்பாகத் தேவை. விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் … Read more

இன்னும் இந்தியாவை 50 ஆண்டுகள் ஆட்சி செய்வதே பாஜகவின் இலக்கு !அமித் ஷா

பாஜக  தேசியத் தலைவர் அமித் ஷா, பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை வரும் 50 ஆண்டுகளுக்கு வெல்வதே பா.ஜ.க.வின் இலக்கு என கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில்கலந்து கொண்டு உரையாற்றிய அவர், சுதந்திரத்திற்குப் பின் 50 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்ததைப் போன்று, பா.ஜ.க.வும் 50 ஆண்டுகள் ஆளவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். உலக அரங்கில் இந்தியாவை ஒளிரச்செய்ய விரும்புவதாக கூறியுள்ள அவர், இதனை நிறைவேற்ற வேண்டுமானால் ஐந்து, பத்து வருடங்கள் போதாது என்றும், … Read more

ஈரோட்டில் ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை!

ஈரோட்டில் ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சென்னை வழக்கறிஞர்  கைது செய்யப்பட்டார். திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வந்த திருவனந்தபுரம் விரைவு ரயிலில் சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்தவர்கள் 10 பேர் குடும்பத்துடன்  பயணித்தனர். இவர்கள் பயணித்த அதே முன்பதிவு பெட்டியில் சென்னை பெசன்ட்நகரைச் சேர்ந்த 57 வயது வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் என்பவரும் கோவையில் ஏறியுள்ளார். ரயிலில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது, சென்னை பயணிகளுடன் வந்த 9 வயது சிறுமியிடம் பிரேம் ஆனந்த் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். … Read more

கர்நாடக காங்கிரசை எதிர்க்கத் தயாரான தமிழக காங்கிரஸ்!

தமிழக காங்கிரஸ்  தலைவர் திருநாவுக்கரசர் ,காவிரி மேலாண்மை வாரியம் அமைத்த பின் அதன்படி கர்நாடகா அரசு செயல்படாவிட்டால் தமிழக காங்கிரஸ் போராடத் தயார் என தெரிவித்துள்ளார். திருச்சியில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசே மதிக்காவிட்டால், மக்கள் எப்படி மதிப்பார்கள் என கேள்வி எழுப்பினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

உஷாரான இந்தியா!பாலியல் குற்றங்கள் தொடர்பாக மற்ற நாடுகளை பின்பற்ற முடிவு !

இந்தியாவும் பாலியல் குற்றவாளிகளை கண்காணிக்கும் நாடுகளின் பட்டியலில்  இணைந்துள்ளது. 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை விதிக்க வகைசெய்யும் அவசரச் சட்டத்துக்கு அமைச்சரவையும், குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளனர். இந்நிலையில், பாலியல் குற்றவாளிகள் குறித்த ஆவணங்கள் தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் பராமரிக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சரவை தெரிவித்துள்ளது. இதன்படி, பாலியல் குற்றவாளிகள் குறித்த விவரங்கள் அனைத்து மாநிலங்களிடையே காவல்துறையினரால் பரிமாறிக் கொள்ளப்படும். மேலும், இந்தக் குற்றவாளிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். ஏற்கனவே இந்த ஆவண பரிமாற்ற … Read more

திமுக சார்பில் நடைபெறும் மனிதசங்கிலி போரட்டத்திற்கு அனைவர்க்கும் அழைப்பு..,

திருச்சி: வருகின்ற 23ம் தேதி(நாளை)திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து  மனித சங்கலி அறப்போராட்டம் நடைபெற இருகின்றது. இது குறித்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கை: திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.என்.நேரு, வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஆகியோர்அறிக்கை வெளியிட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியத்த தன்னுடைய சுயநல அரசியல் காரணங்களால் அமைக்காமல் காலம் தாழ்த்தி மத்திய பாரதிய ஜனதா அரசு தமிழகத்தை வஞ்சித்துக்கொண்டிருக்கிறது. தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டி … Read more

தமிழகத்தில் புதிய திட்டம்!கால்நடைகள் இருக்கும் இடத்திற்கே சென்று சிகிச்சை! அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

 கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்,கால்நடைகள் இருக்கும் இடத்திற்கே சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் லிப்ட் வசதியுடன் கூடிய அம்மா மெடிக்கல் ஆம்புலன்ஸ் திட்டம் விரைவில் துவங்கப்படும் என  கூறினார்.   திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சேலம் சுகவனேஸ்வரர் கோவில் யானைக்கு அனைத்துவிதமான மருத்துவ சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டது என்றும் வயது முதிர்வின் காரணமாகவே அது இறந்ததாகவும் கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.