ஆக்சிஜனை சுவாசித்து ஆக்சிஜனை வெளியிடும் ஒரே விலங்கு பசு- உத்தரகண்ட் முதல்வர் தடாலடி !

உத்தரகண்ட் மாநில பாஜக தலைவராகவும் , நைனிடால் தொகுதிக்கு எம் .பியாகவும் இருப்பவர் அஜய்பாத்.இவர் சமீபத்தில் கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவமாக வேண்டும் என்றால் கருட கங்கா நதியின் தண்ணீரை குடிக்க வேண்டும் என கூறி இருந்தார். இந்நிலையில் உத்தரகண்ட்  முதல்வர் திரிவேந்திரசிங் ரவாத் , பசுவின் பால் கோமியத்தை பற்றி பேசினார்.அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.அந்த வீடியோவில், “பசுவை தடவி கொடுத்தால் சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் குணமடைவார்கள் என கூறினார்.பசு மாட்டு கொட்டகை அருகில் வாழ்ந்து … Read more

பிறந்த உடனே கன்றுக்குட்டியை தூக்கி சென்றவரை 2 கி.மீ விரட்டிய தாய் பசு!

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பகுதியை சார்ந்தவர் சுசீலா.இவர் தனது வீட்டில் மூன்று பசுக்களை வளர்த்து வந்தார்.வழக்கம் போல அந்த மூன்று பசுக்களில் ஒரு பசு ஊரின் அருகில் உள்ள காட்டு பகுதியில் மேச்சலுக்கு சென்றது. அப்போது அந்த பசு கன்று ஒன்றை ஈன்றது.அந்த கன்றுவை பாதுகாப்பாக சுசீலாவிடம் ஒப்படைக்க வேண்டும் என நினைத்து கணேசன் என்பவர் கன்றுவை இருசக்கர வாகனத்தில் வைத்து கொண்டு செல்ல முடிவு செய்தார். ஆனால் கன்றுவை புதிய நபர் தூக்குவதை பார்த்த பசு … Read more

இளைஞர்களுடன் கால்பந்து விளையாடும் மாடு !வைரலாகும் வீடியோ !

கோவாவில் உள்ள ஒரு மைதானத்தில் இளைஞர்கள் பலர் கால்பந்து விளையாடி கொண்டு இருந்தனர்.அப்போது அந்த மைதானத்திற்கு வந்த  மாடு ஓன்று இளைஞர்கள் விளையாடி கொண்டு இருந்த கால்பந்து விளையாட்டை பார்த்து கொண்டு இருந்தது. சிறிது நேரம் கழித்து அந்த மாடு  இளைஞர்கள் வைத்து  விளையாடி கொண்டு இருந்த  அந்த கால்பந்தை இளைஞர்களிடம் கொடுக்கலாம்  தன்னுடைய முகத்தாலும் , கால்களாலும்  உதைத்து கொண்டு மைதானத்தில் வலம் வந்தது. If this isn’t proof that everyone plays #football … Read more

அடேங்கப்பா! எல்லா இடத்துலயும் மனுஷன் தான் கால்பந்து விளையாடுவாங்க! இங்க மாடு கூட கால்பந்து விளையாடுது!

இன்றைய நாகரீகமான உலகில் மனிதர்கள் மட்டுமல்லாமல், ஐந்தறிவு விலங்குகள் கூட மனிதர்கள் செய்யும் செயல்களை செய்கிறது. மனிதர்கள் என்ன செய்கிறார்களோ, அதை நன்கு கவனித்து அதுபோலவே செய்கின்றனர். இந்நிலையில் கேரளாவில், ஒரு மைதானத்தில் இளைஞர்கள் பலரும் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த மைதானத்திற்குள் நுழைந்த மாடு ஒன்று, அந்த கால்பந்தை வைத்துக் கொண்டு, அந்த இளைஞர்களிடம் கொடுக்காமல் தன் அருகிலேயே பந்தை வைத்திருந்துள்ளது. அந்த பந்தினை இளைஞர்கள் அந்த மாட்டிடம் இருந்து வாங்குவதற்கு போராடி உள்ளனர். இதனை … Read more

பசுவின் உயிரை காப்பாற்றிய இளைஞர் தூத்துக்குடியில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

மனிதர்களைவிட விலங்குகள் பன்மடங்கு உயர்ந்தவை.அவைகள் நமக்கு நற்பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களாக இந்த உலகத்தில் வாழ்ந்து வருகின்றன.மனிதர்கள் விரும்பி வளர்க்கும் உயிரினங்களான நாய்,பூனை,மாடு போன்றைவைகள் நம்மிடம் அளவுக்கு அதிகமான் அன்பினை தரக்கூடியவையாகும்.இதையும் தாண்டி மனிதர்கள் உதவி இன்றி பல உயிரினங்கள் இந்த பூமியில் வாழ்ந்து வருகின்றது. நம்மால் முடிந்த வரை அவைகளை பாதுகாக்க முடியவில்லை என்றாலும் அவைகளுக்கும் அவை  வாழும் இடத்திற்கும் எந்த தீங்கும் விளைவிக்காமல் இருப்பது நம் கடமை .இன்று செல்போன் கதிர்விச்சின் மூலம் ரஜினி நடித்த … Read more

“பாரத மாதாஅந்தஸ்து”பசுவுக்கு”தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றம்…!!”

பசுவுக்கு “பாரத மாதா” அந்தஸ்து வழங்குக் கோரும் தீர்மானம், உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவையில் நிறைவேறியது. அம்மாநில கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சரான ரேகா ஆர்யா, இந்த தீர்மானத்தை கொண்டு வந்து பேசுகையில், ஆக்சிஜனை உள்ளிழுத்து, அதே வாயுவை வெளியேற்றும் ஒரே விலங்கு பசு தான் என்று கூறினார்.   பசு சிறுநீர் மருத்துவ குணம் கொண்டது என்று பேசிய ரேகா ஆர்யா, பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலுக்குப் பின் சிறந்ததாக அறிவியல்பூர்வமாக கருதப்படுவது பசுவின் பால் தான் என்றும் … Read more

மாடுகளுக்கு ஆதார் வழங்கும் திட்டத்திற்கு ரூ.148 கோடி ஒதுக்கியது மத்திய மோடி அரசு…!!

மாடுகளுக்கு ஆதார் வழங்கும் திட்டத்திற்கு ரூ.148 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பால் கொடுக்கும் கால்நடைகளுக்கு 12 இலக்க எண் கொண்ட ஆதார் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கான செலவில் மத்திய அரசு 60 %, மாநில அரசு 40% ஏற்கும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருகோடி ரூபாய்க்கு மேல் மாடுகள் அமோக விற்பனை

பொங்கல் பண்டிகை வருவதை ஒட்டி மாட்டு சந்தை தருமபுரி மாவட்டத்தில் மாட்டு வியாபார சந்தை நடந்தது. இந்த சந்தை அரூர் அருகே உள்ள கொபிநாதம்பட்டி கூட்டு ரோட்டில் வாரசந்தை நடைபெற்றது. இந்த சந்தையில் சுமார் 1500 மாடுகள் விற்பனைக்கு வந்ததாகவும், அவை அனைத்தும் நல்ல விலைக்கு விற்பனையானதாகவும், இந்த சந்தையில் 1 கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் ஆனதாகவும் வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். source : dinasuvadu.com