பிறந்த உடனே கன்றுக்குட்டியை தூக்கி சென்றவரை 2 கி.மீ விரட்டிய தாய் பசு!

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பகுதியை சார்ந்தவர் சுசீலா.இவர் தனது வீட்டில் மூன்று பசுக்களை வளர்த்து வந்தார்.வழக்கம் போல அந்த மூன்று பசுக்களில் ஒரு பசு ஊரின் அருகில் உள்ள காட்டு பகுதியில் மேச்சலுக்கு சென்றது.

அப்போது அந்த பசு கன்று ஒன்றை ஈன்றது.அந்த கன்றுவை பாதுகாப்பாக சுசீலாவிடம் ஒப்படைக்க வேண்டும் என நினைத்து கணேசன் என்பவர் கன்றுவை இருசக்கர வாகனத்தில் வைத்து கொண்டு செல்ல முடிவு செய்தார்.

ஆனால் கன்றுவை புதிய நபர் தூக்குவதை பார்த்த பசு கன்றுவை எடுத்து செல்ல விடாமல் வழிமறித்து.அதையும் மீறி கணேசன் இருசக்கர வாகனத்தில் வைத்து கன்றுவை கொன்று சென்றார். கன்றுகுட்டியை பிரிய முடியாமல் பசு இருசக்கர வாகனத்தை பின் தொடர்ந்து கொண்டே இரண்டு கிலோ மீட்டர் தூரம் கன்றுகுட்டியை முகர்ந்த வாறு ஒடி வந்தது.

பசுவின் இந்த செயல் பார்ப்பவர்களை நெகிழ வைத்தது.பின்னர் கணேசன் சுசீலாவின் வீட்டில் கன்றுகுட்டியை ஒப்படைத்தார்.பிறகு பசு கன்று குட்டியை முகர்ந்து கொஞ்சி விளையாடியது.

இது குறித்து சுசீலா கூறுகையில் , கன்று பிறக்கப்போகிறது என்பது தெரியாமல் மேச்சலுக்கு அனுப்பி விட்டேன்.கன்றுகுட்டியை பிறந்த செய்தி கிடைத்த பிறகு நான் தான் கன்றுகுட்டியை தூக்கி வர சொன்னேன் ,ஆனால் புது நபர் என்பதால் பசு பின் தொடர்ந்து வந்தது என கூறினார்.

author avatar
murugan