புதுச்சேரியில் ரூ.4,634 கோடிக்கு பட்ஜெட் தாக்கல்.. தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைப்பு..!

Puducherry Assembly

புதுச்சேரி சட்டப்பேரவையில்  2024-25-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். இன்று காலை சட்டப்பேரவை கூடியதும் சபாநாயகர் செல்வம் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசித்தார். இதைத் தொடர்ந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த், எம்.எஸ் சுவாமிநாதன் உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு சட்டப்பேரவை உறுப்பினர்கள் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ. 4,634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். ஏப்ரல் … Read more

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பிரதாப் சிங் பஜ்வா..!

பஞ்சாபில் நடந்து முடிந்த சட்டபேரவை தேர்தலில் வெற்றி பெற்றதால்  மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் தலைவர் பர்தாப் சிங் பஜ்வா ராஜினாமா செய்தார். எம்.எல்.ஏ: சமீபத்தில் நடந்து முடிந்த மாநிலங்களவை தேர்தலில் பஞ்சாப் மாநில சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் தலைவர் பர்தாப் சிங் பஜ்வா திங்கள்கிழமை ராஜினாமா செய்தார். ராஜினாமா: பஞ்சாப் சட்டசபை தேர்தலில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா ராஜினாமா செய்தார். ராஜ்யசபா … Read more

எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேறிய ராஜஸ்தான் குழந்தை திருமணங்களை பதிவு செய்வதற்கான மசோதா..!

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், ராஜஸ்தானில் குழந்தை திருமணங்களை பதிவு செய்வதற்கான மசோதாவை ராஜஸ்தான் சட்டசபை நிறைவேற்றியுள்ளது.  ராஜஸ்தான் சட்டசபை வெள்ளிக்கிழமை குழந்தை திருமணங்கள் உட்பட திருமணங்கள் அனைத்தும் கட்டாயமாக பதிவு செய்வதற்கான 2009 சட்டத்தை திருத்தும் மசோதாவை 2021 இல் நிறைவேற்றியது. இதனால் பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர் மற்றும் குழந்தை திருமணங்களை பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று … Read more

#Breaking:மாநிலங்களவையில் அவைத் தலைவர் வெங்கையா நாயுடு கண்ணீர் – மாநிலங்களவை ஒத்திவைப்பு…!

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் தொடர் அமளி காரணமாக அவைத் தலைவர் வெங்கையா நாயுடு கண்ணீர் மல்க பேசியுள்ளார். கடந்த ஜூலை மாதம் 19 ஆம் தேதியன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலிருந்து பெகாசஸ் விவகாரம் மற்றும் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால்,அனைத்து நாட்களிலும் நாடாளுமன்றம் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில்,நேற்று மக்களவையில் ஓபிசி மசோதா மீதான விவாதம் நடந்து கொண்டிருந்தபோது,மாநிலங்களவையில் கடும் அமளி ஏற்பட்டது.விவசாயிகள் பிரச்சனை … Read more

தமிழக சட்டசபை சபாநாயகராக அப்பாவு பதவியேற்பு..!

சபாநாயகர் பதவிக்கு அப்பாவும்,  துணை சபாநாயகர் பதவிக்கு  போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.  தமிழக சட்டசபைக்கான சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நேற்று பகல் 12:00 மணி வரை மனு தாக்கல் செய்யலாம் என சட்டசபை செயலர் சீனிவாசன் அறிவித்து இருந்தார். இதனால் சபாநாயகர் பதவிக்கு அப்பாவும்,  துணை சபாநாயகர் பதவிக்கு கு.பிச்சாண்டியும் மனுதாக்கல் செய்தார். சபாநாயகர் பதவிக்கும், துணை சபாநாயகர் பதவிக்கும் வேறு யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. இதனால் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். … Read more

ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடர் – திமுக வெளிநடப்பு.!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர், கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. தமிழகத்தில் இன்னும் ஒருசில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், அனல்பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர், கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரைமுடிந்த பின் சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் அலுவல் … Read more

#BREAKING: தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.. ஸ்டாலின்.!

சட்டப்பேரவைக் கூட்டம் 3 நாள்கள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. நேற்று தமிழக சட்டப்பேரவை தொடங்கியது. இந்நிலையில், இன்று கேள்வி நேரத்துடன் 2-வது நாளாக  சட்டப்பேரவை தொடங்கியது. இன்று காலை முதல் சட்டப்பேரவையில் விறுப்பாக விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,  கொரோனா பாதுகாப்பு மற்றும் தடுப்பு பணிகள் குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொரோனா கட்டுப்படுத்துவதில் அரசு தோல்வி அடைந்துள்ளது எனவும்,  முறையாக திட்டமிடப்படாத பொது முடக்கத்தால் பொருளாதாரம் … Read more

‘Ban Neet’ என்ற வாசகம் பொருத்திய முககவசத்துடன் பேரவைக்கு வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள்.!

இன்று முதல் 3 நாள்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.இதையடுத்து, தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியுள்ளது. கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது. சட்டமன்ற உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து கூட்டத் தொடரில் கலந்துகொண்டனர். இந்நிலையில், “BanNEET Save Tamilnadu students” ,  “நீட் தேர்வு ரத்து செய்” என்ற வாசகம் பொருத்திய முககவசத்துடன் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவைக்கு வருகை தந்துள்ளனர்.

இன்று தமிழக சட்டப்பேரவைக் கூடுகிறது

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம், கடந்த மார்ச் மாதம் 23- ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், இன்று முதல் 3 நாள்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணமாக, தமிழக சட்டசபையில் சமூக இடைவெளியை பின்பற்ற போதிய இடமில்லாத நிலையில், கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதற்காக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் எதிர்கட்சியினர் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதில் மூன்று அதிமுக எம்.எல்.ஏ.களுக்கு கொரோனா … Read more

#BreakingNews : 3 நாட்கள் நடைபெறுகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி நடைபெறுகிறது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் வரும் 14-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது என்று தமிழக அரசு அறிவித்தது.கொரோனா பரவல் காரணமாக தனிமனித இடைவெளியை பின்பற்றி சென்னை கலைவாணர் அரங்கத்தில் கூட்டத் தொடரை நடத்த பொதுப்பணித்துறை ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கூட்டத்திற்கு முன்பாக எம்எல்ஏக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அரசு திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. எனவே … Read more