புதுச்சேரியில் ரூ.4,634 கோடிக்கு பட்ஜெட் தாக்கல்.. தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைப்பு..!

புதுச்சேரி சட்டப்பேரவையில்  2024-25-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். இன்று காலை சட்டப்பேரவை கூடியதும் சபாநாயகர் செல்வம் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசித்தார். இதைத் தொடர்ந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த், எம்.எஸ் சுவாமிநாதன் உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு சட்டப்பேரவை உறுப்பினர்கள் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ. 4,634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை அரசின் செலவினங்களுக்கு பட்ஜெட் தாக்கல் செய்தார். இதற்கிடையில்  புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து  திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு செய்தனர்.

புதுச்சேரி அரசு முழு பட்ஜெட்  தாக்கல் செய்ததை கண்டித்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். புதுச்சேரி அரசிடம் போதிய நிதி இருந்தும் முழு பட்ஜெட்டை  தாக்கல் செய்யவில்லை என்று கூறி திமுக, காங்கிரஸ்  வெளிநடப்பு செய்தனர்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி காலை 9.50 மணிக்கு தொடங்கிய பட்ஜெட் காலை 10.55 மணிக்கு  முடித்தார். பின்னர் தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் சட்டப்பேரவை ஒத்தி வைத்தார்.

author avatar
murugan

Leave a Comment