ப்பா சான்ஸே இல்ல…சாய் பல்லவியை புகழ்ந்த சமந்தா! வைரலாகும் வீடியோ!

நடிகை சாய் பல்லவி சிறந்த நடன கலைஞர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். சினிமாவிற்குள் நடிக்க வருவதற்கு முன்பே அவர் நடன கலைஞராக தான் பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிறகு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்தார். இவர் தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு என எல்லா மொழிகளிலும் கலக்கி கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில், நடிகை சாய் பல்லவி முன்னணி நடிகையாக வளர்வதற்கு முன்பு நடன நிகழ்ச்சி ஒன்றில் நடனம் ஆடிய சமயத்தில் அந்த நிகழ்ச்சிக்கு நடுவராக சமந்தா கலந்துகொண்டு இருந்தார். அப்போது சாய் பல்லவி ஆடிய நடனத்தை பார்த்து மனம் திறந்து பாராட்டிய அந்த பழைய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

‘அமரன்’ படத்தை தடை செய்ய கோரி இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்!

வீடியோவில் ” மணிரத்னத்தின் பாம்பே படத்தின் கெஹ்னா ஹி க்யா பாடலுக்கு சாய் பல்லவி அசத்தலான நடனத்தை வெளிப்படுத்தி இருந்தார். அந்த நடனத்தை பார்த்த சமந்தா ” நீங்கள் ஆடிய நடனத்தின் அழகு என்னை வெகுவாக ஈர்த்துவிட்டது. என்னுடைய  கண்ணை விட்டு உங்களை விலக்க முடியவில்லை. நீ செய்த அடியை நான் தான் பார்த்தேன்.

உங்களால் இப்படி எப்படி இவ்வளவு அழகாக நடனம் ஆடமுடிகிறது என்று யோசித்துக்கொண்டு இருந்தேன்.  உங்களை பார்க்கும் போதெல்லாம் நீங்கள் ஆடிய நடனம் தான் என்னுடைய கண்ணனுக்கு முன்னாடி வந்துகொண்டு இருக்கிறது. உங்களுடைய நடனம் மிகவும் அருமை. நீங்கள் இன்னும் நன்றாக வருவீர்கள்” என அசந்த போய் சாய் பல்லவியை சமந்தா பாராட்டினார். இந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment